(Reading time: 6 - 12 minutes)

அவன் குழப்பத்திற்கு இங்கு விடை கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளே சென்றான்.. வேலையாளின் கைவண்ணத்தில் அவனது அறை தூசியில்லாமல் இருந்தது..

ஓர் பக்க சுவர் முழுக்க இவர்களின் சிறுவயது முதல் எடுத்த அனைத்துப் புகைப்படங்களும் மாட்டப் பட்டிருந்தன.. புன்னகையுடன் அனைத்து படங்களையும் பார்வையிட்டான்..

இருவரும் என்றுமே ஒன்றுப் போல உடை அணிய விரும்பியதில்லை சிறு வயது முதல்.. (ஆம் நீங்கள் நினைத்தப்படியே இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் தான் J ) அவர் அவர்களுக்கு தனி விருப்பம் இருக்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருப்பர் எப்பொழுதும்..

பின் அவனின் ஒவ்வொரு அலமாரியாக தேட ஆரம்பித்தான்.. அங்கு தனியாக இருந்த ஓர் கப்போர்ட் மட்டும் பூட்டப் பட்டிருந்தது.. அதனின் சாவியை தேடிக் கண்டு பிடித்து திறந்தால்.. உள்ளே ஒர் பத்து டைரிக்கும் மேலே இருந்தது..

அப்புவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது.. இன்னொருவரின் டைரியை படிப்பது தவறென தெரிந்தாலும் உண்மையை அறிய அவனுக்கு வேறு வழி இல்லை..

ஒவ்வொன்றாக புரட்டிக் கொண்டு வந்தவனுக்கு அவன் தேடியது அவனுக்கு கிட்டியது.. அவன் இரண்டு முறை சந்தித்த அப்பெண்ணின் புகைப்படம் முதல் பக்கத்தில் ஒட்டி வைத்திருந்தான்..

‘நான் நெனச்சது சரியா போச்சு..’ என சிரிப்புடன் அடுத்த பக்கத்தை புரட்டினான்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒற்றை புன்னகையில்

என் மனதை கொள்ளையடித்தவளே

உன் ஓரப் பார்வையில்

என் மனம் தடுமாறிதான்

போனதடி..

வாழ்க்கை முழுவதும்

உன் கரம் கோர்க்க ஏங்குகிறேன்

என்று என் கை சேர்வாயோ

என் கண்மணியே?!?!

‘அடப்பாவி கவிதை எல்லாம் எழுதி இருக்கான்.. இந்த விஷயத்தப் பத்தி என்கிட்ட மூச்சே விடலை.. கவனிச்சுக்கறேன்..’

பின் முழு மூச்சாக படிக்க ஆரம்பித்துவிட்டான்.. அங்கு ரிந்து வீட்டில் அனைவரும் சென்றவுடன் ஷைலுவிடம் கேள்விக் கேட்டு துளைத்து எடுத்து விட்டாள்.. எங்கு சென்றாள்.. ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள் என..

ஷைலுவும் இதுவரை சொல்லாமல் தன் மனதுக்குள் வைத்திருந்ததை தன் தமக்கையிடம் சொல்ல ஆரம்பித்தாள்..

Hi Friends!! Happy Friendship’s Day to everyone out there.!!!!

First of all sorry last month update skip pannadhukku and constant ah kutti epi tharadhukku.. manichuu all of you.. L spell check seyya villai so konjam adjust karo friends.. From next update we ll travel along with appu and shailu’s past.. Keep sharing your positive and negative views.. I ll try my best to keep up to all of your expectations..!

Thank you..!

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1161}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.