தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 07 - மீனு ஜீவா
"என்ன மிஸ்டர் கௌவுதம் எப்படி இருக்கீங்க" என்று மித்ரா கௌவுதமைப் பார்த்துக் கேட்கவும் கௌவுதம் நிமிர்ந்து மித்ராவைப் பார்த்தான்.
'இந்த பொண்ணுதான் அந்தப் பெரியவர்கிட்ட பேசிட்டிருந்த பொண்ணா ம்ம்... நான்கூட வயசானவங்களா இருப்பாங்கன்னு பார்த்தேன் ஆனா சின்ன பொண்ணா இருக்கு. அறிவா அன்பா மட்டுமில்ல ரொம்ப அழகவும் இருக்கு'
"ம்ம்... நால்ல இருக்கேன் டாக்டர். நீங்கதான் என்ன காப்பாத்தினதுனு சொன்னாங்க தேங்க்ஸ் எ லாட் டாக்டர்"
...
This story is now available on Chillzee KiMo.
...
போதும். அப்புறம் கௌவுதம் கால்ல வலி எப்படி இருக்கு"
"கால அசைக்கும்போதெல்லாம் வலிக்குது மேரி"
"அதுக்குத்தான் ஒரு வாரம் கால அசைக்காம இருக்கனும்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடானா இன்னைக்கே வீல் சேர வச்சு வாக்கிங் போயிருக்கீங்க"
"என்ன சொல்றீங்க மேரி" என்றாள் மித்ரா.