(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 04 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

தீரன் அதிர்ந்து நின்ற ஒருநொடியில் அவனிடம் இருந்து விலகி தனது தோழிகள் இருந்த சந்தியாவின் அறைக்குள் புகுந்தாள் யாழிசை. அவள் வந்ததும் சந்தியா ஏய்! இங்க பாருங்கப்பா... இந்த யாழி மட்டும் இந்த ட்ரெஸ்ஸை போட்டுக் காண்பிக்காமல் எஸ் ஆக பார்க்கிறாள்.

யாழி! நீயும் ஒழுங்கா இந்த ட்ரெஸ்ஸை நீயே போட்டுக் காட்டுகிறாயா? அல்லது நாங்க அவுத்து மாத்திவிடவா? என்று கேட்டாள் சந்தியா.

ஆனால், யாழிசை பயந்த முகத்துடன். நான் வீட்டுக்குப் போறேன் என்னைய முதலில் கொண்டுபோய் விடு சந்தியா. என்று பயந்தபடி அவன் பின்னாலேயே வந்துவிடுவானோ என்று திரும்பி திரும்பி வாசலை பார்த்தபடி கூறினாள்.

அவளின் பயந்த தோற்றத்தை கண்ட மற்றவர்கள் ஏய்! எதுக்குடி இப்படி எதையோ பார்த்து பயந்தது மாதிரி ஓடிவருகிறாய், என்று கேட்டனர்.

உடனே யாழிசை தன் கையை வாசல்புறம் நீட்டி . அங்க... நான் அவன்... என்று உளறிக் கொட்டி, கிளறி மூடவும், அங்க யார் யாழி? என்னாச்சு என்று சந்தியா தனது அறையின் வெளியில் சென்று எட்டிப் பார்த்தாள்.

அங்கு யாரும் இல்லாததைக் கண்ட சந்தியா, ஏய்! யாழி... இங்கெல்லாம் யாரும் வரமாட்டங்கப்பா என்றாள். சந்தியாவின் வார்த்தைகளை கேட்ட யாழி

இல்லப்பா... இந்த கண்றாவியான ட்ரெஸ்ஸை, நீங்க எல்லோரும் போடும் போது நான் மட்டும் தப்பிச்சுடலாம் என்று நைசா பின்னாடி திரும்பியபடி ரூமைவிட்டு வெளியில் போனேனா! என்று கூறவும்.

அப்போ நீ அங்கு ஒரு பூதத்தை பார்த்தியாங்கும்...! என்று அவர்களுடன் வந்திருந்த தோழி காவேரி சீரியஸாக கேட்பதுபோல் அவளை கலாய்த்தாள்.

உடனே லலித்தா, நீ சும்மா இரு காவேரி, அவளே எதையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கா... நீவேற ஏன்டீ அவளை கேலிபன்னுற. என்று கூறியவள், நீ சொல்லு யாழி! பின்னாடி அடிஎடுத்துவச்சு போன அப்பறம் என்ன ஆச்சு? என்று கேட்டாள்.

பின்னாடியே அடிஎடுத்துவச்சுகிட்டு நீங்க யாரும் என்னை பார்த்துவிடுவீங்களோ...! என்று ரூமை பார்த்துக்கொண்டே எதுவோ தட்டி விழப்பார்த்தேனா? என்றதும் அச்சச்சோ! அப்புறம். என்று கோரசாக அவளது தோழிகள் கிண்டல் செய்து கேட்டது கூட உறைக்காமல் நடந்ததை சொல்லிகொண்டிருந்தாள் யாழி .

அப்போ எங்க அய்யாவின் வீட்டு ஹாலில் மாட்டியிருந்த அவரின் சின்னவயசுல போட்டோவில் பார்கிறமாதிரியே.... ஆனால் இன்னும் கொஞ்சம் கலரா பாரின் ரிடர்ன் போன்ற ஸ்டைலிஷ்ஷா ஒருத்தன் என்று கூறியதும்

யாழி... இரு.. இரு... மீதத்தை நான் சொல்கிறேன்.அவன் உன்னை கீழே விழாமல் தாங்கி பிடிச்சதும் நீ அவனை பார்க்க.... அவன் உன்னை பார்க்க.... அப்படியே பாரதிராஜாவோட பழைய படத்தில் இருந்து வருவதுபோல தம்தன... தம்தனணு.. பேக்ரவுன்ட் மியூசிக் கேட்டிருக்குமே! என்றதும்.

கொலவெறியான யாழிசை, பிசாசே.. பிசாசே... என்னை என்ன எவனை பார்த்தாலும் கட்டிக்கிட்டு டூயட் பாடுரவ மாதிரியா இருக்கு? என்று கேள்வி கேட்டவள் குரல் வருத்தத்துடன், ஏன்டீ! நான் பார்க்க டீசண்டாத்தானே ட்ரெஸ் பண்ணியிருக்கேன் பிறகு ஏண்டி என்னிடம் போய் அப்படி கேட்டான்! என்று கவலையுடன் கூறினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உன்ன கீழேவிழாமல் தங்கிபிடிச்சுட்டு அப்படி என்னத்தடி கேட்டான்? என்று கோரசாக அவளது தோழிகள் அவள் கூறுவதை நம்பாமல் கோரசாக அவளை கலாய்ததும் .

ஏய்! என்னப்பா.... நீங்க யாரும் நான் சொல்றத நம்பலையில்ல, நான் உங்களிடம் விளையாட்டுக்கு பேசுவதைப்போல எல்லோரும் ரியாக்சன் கொடுக்குறீங்க.

ஏய், சத்தியமா உண்மையாகவே நான் பார்த்தேன். ஆறடி உயரத்தில் பிளாக்கலர் கோர்ட் சூட் போட்டுகிட்டு வித்தியாசமா கலர்புல்லா டாட்டூ அவனின் கழுத்து விரல் எல்லாத்திலேயும் நான் பார்த்தேன். அவன் வந்து என்னை தாங்கிபிடிச்சு என்கிட்ட..... என்றவள் அதற்குமேல் சொல்ல தயங்கி... ம்...கூம் இனி நான் இங்க ஒருநிமிஷம் கூட இருக்க மாட்டேன்பா! சாரி..! சந்தியா, நான் வீட்டுக்குப் போகனும் என்று கூறினாள்.

தீரன் அவளின் கிளாசிக் பியூட்டி கொடுத்த அடியில் அதிர்ந்து நின்ற ஒருநொடியடுத்து, அவன் கை அவள் அறைந்த இடத்தை தடவியபடி அந்த இடத்தைவிட்டு அகன்று மறுபுறம் சென்றுவிட்டான். அதனால் சந்தியா எட்டிபார்க்கும் போது அந்த இடம் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது.

மறுபுறம் சென்றவன் அங்கிருந்து வெளியில் தெரிந்த தோட்டத்தைப் பார்த்தவாறு பால்கனியில் சாய்ந்து நின்றவன் தனது மனதிற்குள்ளேயே நானா? இப்படி? இவளைவிட அழகான பெண்களே கூட என்னை நோக்கி தாங்களே அடிஎடுத்து வைப்பதுதானே இதுவரை நடந்திருகிறது.

ஒரு பெண்ணால் நானா கவரப்பட்டேன்! பார்த்த மறுநிமிடமே அவளிடம் முத்தம்கேட்டு அடிகூட வாங்கிவிட்டேன். நல்லவேளை ஒரு அடிகொடுத்துவிட்டு சத்தம்போடாமல் ஓடிவிட்டாள், இல்லாவிட்டால் நிலைமை கிரிடிகல் ஆகியிருக்கும். நான் தன்னிலை மறந்தது.... ஏன்? எது இப்படி என்னை செய்ய வைத்தது? காரணம்.. கேட்ட சலங்கை ஒலியா? அது தோற்றுவித்த மனச்சலனமுமா? என்ற கேள்வி கேட்டவன் மனதில் அவன் அம்மாவின் உருவம் அதனை அடுத்து அவர்களின் பாரத நாட்டிய பள்ளியின் லாபி.. அதில் அவள் தாய் எழுப்பிய ஜதி கட்டைகளின் சத்தம் அதனை தொடர்ந்து அந்த ஜதிகட்டைகளின் தாளத்துக்கு அபிநயம் பிடித்த அழகியவளின் உருவமும் அவனின் மனக்கண்ணில் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.