"ஆமாம் மித்ரா இப்போதான் டாக்டர் சுகந்தன் சொன்னாரு. இவர இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம்னு நினைச்சாராம் ஆனா இவர் வாக்கிங் போனதப் பார்த்துட்டு இன்னும் இரண்டு நாளைக்கு இங்கதான் இருக்கனும்னு சொல்லிட்டார்"
"என்னது இன்னும் ரெண்டு நாளைக்கா நோவே மித்ரா என்ன இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடு என்னால ஒரே எடத்துல கண்டிப்பா இருக்க முடியாது பிலீஸ்" என்றான் கௌவுதம் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
"கௌவுதம் உங்க நல்லதுக்காகத்தானே சொல்லுறோம். ரெண்டு நாள் தான இப்பிடிங்கறதுக்குள்ள போயிடும் அதுவரைக்கும் கொஞ்சம் பொருத்துக்கோங்க" என்றாள் மித்ரா.
"சரி கௌவுதம் நீங்க ரெஸ்ட் எடுங்க. நயிட் டின்னருக்கு அப்புறம் மெடிசின்ஸ் மறக்காம எடுத்துக்கோங்க நாங்க நாளைக்கு வந்து உங்களப் பார்க்குறோம்" என்று மித்ராவும் மேரியும் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குறேன்' என்று நினைத்துக் கொண்டான்.
கௌவுதம் பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதோடு சரி ஆனால் வெண்ணிலா அப்படி அல்ல அவர்களின் நலனிலுல் அக்கறை கொள்வாள். அவர்கள் சொந்த வாழ்கையில் எதுவும் பிரச்சனை என்றால் கூட தன்னால் ஆனா உதவிகளைச் செய்வாள்.
கௌவுதம் வெண்ணிலாவிற்கு போன் செய்தான்.