(Reading time: 13 - 26 minutes)

கவர்மென்ட் வேலையாவது ஒன்னாவதுன்னு அதைத் தூக்கிப்போட்டுட்டு வந்திருவேன்.. நியாவகம் வைத்துக்கொள்..”, எச்சரிக்கையுடன் மொழிந்தவனுக்கு அப்பொழுது தெரியவில்லை தன்னுடைய வார்த்தைகள் உண்மையாகும் என்று..

வருடம் : 2017..

இடம் : கோவை..

ன்னை நியாபகம் இருக்கா சார்..??”, செந்தாரிகை கேட்கவும் தடுமாறிப்போனார் கமிஷ்னர் வீரபாண்டியன்..

அவரது தடுமாற்றத்திலேயே தன்னை அவர் மறக்கவில்லை என்று புரிந்தது தாரிகைக்கு..

“நான் ஜஸ்ட் கேட்டேன்.. அவ்வளவு தான்.. அன்று நடந்த சம்பவத்தை வைத்து உங்களை நான் இன்று பழிவாங்க மாட்டேன்..”, என்று சன்னச் சிரிப்புடன் கூறியவள், “எனிவேஸ் ஹேப்பி டூ மீட் யூ சார்..”, என்றாள்..

“சாரி மேம்.. அன்று.. நான் உங்களுடம்..”, என்று ஆரம்பித்தவரைக் கைத்தூக்கி நிறுத்தினாள் செந்தாரிகை..

“நோ இஸ்யூஸ் சார்.. அன்று உங்களை நான் சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று இப்படி இருந்திருக்கமாட்டேன்.. என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஏதோ ஒருவகையில் என் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள்.. தட்ஸ் ஆல்.. சோ லீவ் இட்..”, என்றவள், “நவ் கமிங் டூ தி பாயின்ட்.. டூ வீக்ஸ் முன்னாடி உங்களுக்கு பெருநூர் கோவில் சிலை கடத்தல் பற்றி விசாரிக்கச் சொல்லி மெசேஜ் பார்வேர்ட் செய்யப்பட்டதாமே.. அது இப்போ எந்த லெவெலில் இருக்கு மிஸ்டர் வீரபாண்டியன்..??”, முழு கலெக்டராக மாறி..

“காணமல் போனது மொத்தம் ஐந்து வெண்கல சிலைகள் மேம்.. ஐந்துமே சுமார் மூன்றடிக்கு மேல்.. அந்தக் கோவிலில் வேலை ஆட்கள் அனைவரையும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் மேம்..”

“ஏதாவது இன்பர்மேஷன் கிடைத்ததா..??”

“வெல் டூ பி பிரான்க்.. அந்த சிலைகள் எப்படி இருக்கும் என்றே நிறைய பேருக்கு தெரியவில்லை மேம்.. சோ எங்களால் பெருசா எந்த இன்போர்மஷனும் கலெக்ட் செய்ய முடியவில்லை மேம்..”

“அந்த சிலைகளின் வரைபடம் உங்களிடம் உள்ளதுதானே..?? அதை வைத்து ப்ரொசீட் செய்து பார்த்தீர்களா..??”, யோசனையுடன்..

“எஸ் மேம்.. வீ ட்ரைட்.. பட் நோ யூஸ்..”

“ஏன்..??”

“அந்த ஐந்து சிலைகளும் கோவிலின் கற்பகிரதிற்குப் பின் இருக்கும் ஒரு நிலவறையில் வைக்கப்பாட்டிருந்த சிலைகள்.. ஏழு வருடத்திற்கு ஒரு முறைதான் அந்தச் சிலைகளைப் பூஜிக்க நிலவறையைவிட்டு வெளியே எடுப்பார்களாம்.. அதனால் சரியாக யாருக்கும் அதைப்பற்றி நினைவில்லை..”

“நீங்கள் சொல்லும் நிலைவறைக்குள் செல்ல யாராருக்கு அனுமதி..??”

“தலைமை ஐயருக்கும் கோவில் நிர்வாகிகளில் சிலருக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு..”

“அவர்களிடம் விசாரணை மேற்கொண்டீர்களா..??”

“நேற்று தான் ஆரம்பித்தோம் மேம்..”

“ஓ கே தென்.. நீங்கள் விசாரித்தவரையான டீட்டெயில்ஸை பைல் பண்ணிதுங்க மிஸ்டர் வீரபாண்டியன்.. இந்தக் கேஸை ஹேண்டில் பண்ண நம்ம அரசாங்கம் வேற டீமை செலெக்ட் பண்ணிருக்காங்க..”, என்றாள் தாரிகை..

“ஓ கே மேம்..”, குரலில் ஏன் என்பதாய் யோசனை.. அதை தாரிகையிடமும் கேட்கவும் செய்தார் அவர்..

“பெருநூர் கோவிலில் சிலை திருட்டுப் போனது போல் தமிழகத்தில் பல கோவில்களிலும் சிலைகள் காணமல் போயிருக்கின்றன.. இனி இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதைத் தடுக்க வேண்டி சிலை தடுப்புப் பிரிவு ஐ ஜி சக்திவேல் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள்.. அவர் தான் இனி பெருநூர் கோவில் கேஸையும் ஹேண்டில் செய்யப்போகிறார்..”

வழக்கம் போல் அன்றும் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் நிஷார்திக்கா..

பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் அவளை அலையவைத்தது செல்வியின் நினைவுகள்..

முயன்று தன்னைத்தானேக் கட்டுப்படுத்திக்கொண்டு பாடத்தைக் கவனிக்க முயன்றவளின் நாசியில் ஏதோ ஒருவகை மணம் உரசிச் சென்றது..

அது எங்கையோ தனக்குப் பழக்கப்பட்டதுபோல்..

அது என்ன மணமென்று அறிய மீண்டும் மீண்டும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள் அவள்..

ஒரு நொடி காற்றில் மிதந்த அந்த வாசனை மறைந்து போயிருந்தது..

அதைப்பற்றி யோசனை செய்ய விடமால் அடுத்தடுத்த வகுப்புகள் கடந்து போனதால் சற்று நேரத்தில் அனைத்தையும் மறந்து பாடத்தில் மூழ்கிப்போனாள் நிஷார்த்திகா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.