(Reading time: 13 - 26 minutes)

இச்சமயம் என்னால் உன்னைவிட்டுவிட்டுச் செல்ல முடியாது.. செல்லவும் மனது கேட்கவில்லை.. அதனால் தான் சில காலம் ஊரைவிட்டு தள்ளியிருக்கலாம் என்கிறேன்.. அப்படி இருந்தால் எனது மனது சிறிது மாறலாம் என்ற நம்பிக்கைதான்..”, என்றவர் சரியென்று சொல்லடி என்பதாய் சமுத்திராவைப் பார்த்தார்..

அவரின் மனநிலை உணர்ந்தாற்போல் மகளிடம் போகலாம் என்பதாய் தலையசைப்பு..

அன்று காலை முதலே தரண்யனின் வீடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது..

கீதாஞ்சலி அடுப்படியில் பலகாரங்கள் சுட்டுக்கொண்டிருக்க அவருக்கு உதவியாய் பரத்வாஜ் அவர் சுடும் பலகாரங்களைப் பேக் செய்தடி இருந்தார்..

அக்காவும் மச்சானும் செய்யும் செயல்களைப் பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, “இத்தனை எதுக்குக்கா..??”, என்றான் சலிப்பாக..

“கொஞ்சம் தான் பண்ணிருக்கேன் டா..”, என்றவரை முறைத்த வெற்றி அடிக்கிவைக்கப்பட்டிருந்த நான்கைந்து சம்பட்டன்களைக் காட்டி, “இது உனக்கு கொஞ்சமா..??”, பொய்யான கோபத்தோடு..

“அதெல்லாம் பொடி.. சாதத்துக்கு போட்டு சாப்பிட..”, என்றவர், “நீ போற இடத்தில் சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல.. அதனால இதெல்லாம் எடுத்திட்டுப்போற..”, கட்டளைபோல்..

தமக்கையின் கட்டளையில் மச்சானிடம் திரும்பியவன் நீங்களாவது சொல்லக்கூடாதா என்பதை சைகை செய்தான் வெற்றி..

அதைப் புரிந்தாற்போல் பரத்வாஜும், “கீதா..”, என்றழைத்தார் தயக்கமாக..

“என்ன..??”, மொட்டையாக வந்துவிழுந்தது கேள்வி கீதாஞ்சலியிடமிருந்து..

அதில் உஷாரானவராக, “ஊறுகாய் எல்லாம் எடுத்துவைக்கட்டுமா..??”, பவ்யமாக..

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீங்க பலகாரத்தை மட்டும் பேக் செய்யுங்க..”, என்றவரை எதிர்த்துப் பேசுவாரா பரத்..

வெற்றியை நோக்கித் திரும்பக்கூட இல்லை அவர்..

இருவரின் நாடகத்தைப் பார்த்த வெற்றிக்கு, “அக்கா.. மாமா..”, என்று பல்லைக்கடித்தான் முடிந்தது..

இருந்தபோதும் இருவரின் அன்பிலும் நெகிழ்ந்துதான் போனது வெற்றியின் மனது..

“மாமா.. கிளம்பிட்டீங்க போல..??”, ஷோல்டரின் பேக்குடன் நின்றிருந்த வெற்றியிடம் அப்பொழுதுதான் விளையாடி முடித்துவிட்டு வந்த தரண்யன் கேட்டான்..

“ஆமாம்டா.. அவன் கிளம்பியாச்சு..”, வெற்றிக்கு பதிலாக சொன்ன கீதா, “சாரை எத்தனை மணிக்கு வர்ற சொன்னா எத்தனை மணிக்கு வர்றீங்க..??”, காட்டமாக..

“இன்னைக்கு மேட்ச்ம்மா.. அதான் லேட்..”

“இன்னைக்கு தம்பி ஊருக்குப் போறான்னு தெரியும்ல.. கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாது..”, இப்பொழுது முறைப்புடன்..

“அக்கா.. இப்போ அவன் விளையாட போனதால என்ன வந்துச்சு..?? விடுக்கா..”, மருமகனுக்கு சப்போர்ட்டாக வந்தான் வெற்றி..

“எல்லாம் நீ கொடுக்கற இடம் தான் வெற்றி.. இப்படி சொல் பேச்சுக்கேட்காம ஆடிட்டு இருக்கான்..”, வெற்றிமீது பாய்ந்தவர் வெளியில் இருந்து பரத்வாஜ் அழைக்கவும் அவரிடம் விரைந்தார்..

கீதாவின் தலைமறையக் காத்திருந்தார் போல், “இப்போ தான் மாமா எனக்கு நிம்மதியா இருக்கு..”, கொஞ்சம் நக்கலாக மொழிந்தான் தரண்யன்..

“என்ன நிம்மதி..??”

“இனி நம்மல யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாதுல.. அதான் நிம்மதி..”, என்றான் சிறுவன் பெருமூச்சுடன்..

“என்னடா.. நான் இல்லைன்னா நல்லா சுத்தலாம்னு மனசுல எண்ணம்மோ..??”, நக்கலாக..

“ஆமா.. இந்த நாளுக்காகத் தான் நான் ரொம்ப வருஷமா வைட்டிங்..”

“ரொம்ப சந்தோஷப்படாத மாப்பிள்ளை.. உன்னை கவனிக்க நெறைய பேரை ஏற்பாடு பண்ணிட்டுத்தான் நான் இங்கிருந்து கிளம்பறேன்.. நான் இல்லைன்னு ஆட்டமெல்லாம் போட நினைக்காதே.. நீ என்ன பண்ணாலும் அடுத்த நிமிஷம் எனக்குத் தகவல் வந்திரும்..”, கொஞ்சம் எச்சரிக்கையாக..

அதை சட்டைசெய்யாதவனாக உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதாய் நின்றிருந்தான் தரண்யன்..

அவனின் தோற்றம் சிறுவயது தரண்யனை நினைவுபடுத்த கீற்றாய் புன்னகை வெற்றியிடம்..

அதைத்தன் இதழுக்கிடையில் மறைத்தவன், “இங்க பாரு.. உன் தெனாவெட்டு சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு படிக்கற வழிய பாக்கற.. அடுத்த வருஷம் நீ டென்த்.. அதை நியாபகம் வெச்சுக்கோ..”, கண்டிப்புடன்..

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம் மாமா..”, அந்த வயதுக்கே உரிய விட்டீறித்தனத்துடன்..

இனி எது சொன்னாலும் இவன் மண்டையில் ஏறாது என்றுணர்ந்த வெற்றி, “லாஸ்ட் டைம் சொல்றேன் தரண்யா.. நீ நல்லா படிக்கல.. ரொம்ப சேட்டை பண்ற.. அப்படி இப்படின்னு உன்னைப்பற்றி ஏதாவது நியூஸ் வந்துச்சு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.