(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 05 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

மொபைல் இணைப்பை துண்டித்த தீரன் அந்த கிளாசிக் பியூட்டி பற்றி நான் எதுக்கு விசாரிக்கச்சொன்னேன் ஷி மேக் மீ கிரேஸி. இவள் ஏன் என்னை பார்த்த நொடியில் இருந்து எனக்குள் அவளின் நினைவை முனுமுனுக்க வைக்கிறாள். இட்ஸ் நாட் குட் பார் மீ அண்ட் ஹெர். என்னுடைய இந்த நிலை என்னை தவறு செய்ய வைக்கும். அவளை காயப்படுத்தி வைக்கும். வந்த வேலையை மட்டும் பாரு தீரா..! என்று அவனுக்குள்ளேயே சொல்லிகொண்டவன் இவளின் நினைப்புகளில் இருந்து விடுபடவேண்டும் என்று நினைத்துகொண்டான்.

இந்தியா வரும் முன் பிராங் கூறிய பணியை மேற்கொள்ள அவனை தயார்படுத்துவதுடன் பிராங் அறியாமல் அவன் அம்மா டைரியில் குறிப்பிட்டிருந்த இந்தியாவில் இருக்கும் அவனின் தந்தையை சந்திக்க இமாமியின் உதவியுடன் ரகசியமாக சில ஏற்பாடுகளை அவன் செய்திருந்தான்.

அதற்கு, தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து தீரனின் மைக்ரோ மொமன்ட்சில் வேலை பார்த்துக்ன்டிருந்த மாதவனை சந்தித்த இமாமி. ஆள் குறைப்பு என்ற போர்வையில் தனது நிறுவனத்தில் இருந்து மாதவனை வெளியேற்றுவதாக மற்றவர்களை நம்ப வைத்தான்.

ஆனால் அந்த மாதவனை தனிமையில் சந்தித்து சீக்ரட் ப்ராஜெக்ட் ஒன்று கொடுத்திருந்தான் .அந்த ப்ராஜெக்ட்டின் சாராம்சம் தமிழ்நாட்டிலுள்ள மேட்டுப்பாளைய ஜமீனின் வாரிசான வானவராயனை பற்றிய அனைத்து விசயங்களையும் இந்தியா சென்று கலெக்ட் செய்திருக்கவேண்டும். அதுவும் அதை வெளிப்படையாக செய்யாமல் ரகசியமாக செய்யவேண்டும் இந்தியா வரும் தீரன் அவனை ரகசியமாக தொடர்புகொண்டு கேட்கும் போது ப்ராஜெக்ட் ரிசல்டை சப்மிட் செய்யவேண்டும் என்பதே. அதன் சாரம்சம் .

தீரன் இமாமியை அழைத்த அந்த போனிலேயே மாதவனின் நம்பரை அழுத்தினான். மாதவன் வைத்திருக்கும் நோக்கியா போனில் டிஸ்பிளேயில் இமாமியின் அமெரிக்க நம்பர் இல்லாது தமிழ்நாட்டு என்னை பார்த்து யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் மொபைலை எடுத்து காதிற்கு கொடுத்து, ஹலோ! என்ற மறுநிமிடம் ஹாய் மாதவா ஐ ஆம் தீரன் ஸ்பீகிங் ,ஆர் யூ ரெடி டு சப்மிட் ப்ராஜெக்ட் ரிசல்ட்.என்று கேட்டான்.

மாதவன் ஏற்கனவே அவனுக்கு சொன்ன வேலையே முடித்து தீரனின் அழைப்புக்கு காத்திருந்ததால் பவ்வியமாக எஸ் பாஸ் ஐ டன் இட். .வேர் சுட் ஐ கம் அண்ட் ஐ’ல் ஹவ் டு ஹேன்ட் ஓவர் த ப்ராஜெக்ட் ரிசல்ட் ? என்று கேட்டான்.

கோயம்புத்தூர் ரடிஸ்சன் புளூ பைவ் ஸ்டார் ஹோட்டலில் அன்று இரவு 10மணிக்கு வந்து தன்னை தான் ரிசர்வ் செய்திருக்கும் டேபிள் நம்பரை கூறி அங்கு சந்திக்குமாறு கூறினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இரவு மணி 7:15 என்று கடிகாரம் நேரத்தை காட்டியது அங்கிருந்த ஜிம்மில் சென்று சிறிதுநேரம் வொர்க் அவுட் செய்துவிட்டு தன்னை ரெப்ரஸ் ஆகிக்கொண்டு கோர்ட் சூட்டை தவிர்த்து கேசுவலாக டீசர்ட் ஜீன்ஸ் அணிந்து வெளியில் வந்தான்.

அப்பொழுது அவனின் பாதுகாவலுக்கு எப்பொழுதும் உடன் வரும் செக்யூரிட்டி டீமிடம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய ஹோட்டல் ரடிஸ்சன் புளூ ஹோட்டல் போவதாக கூறியவன் என்னை உங்களின் டீம் டிஸ்டப் செய்யாமல் தள்ளி நின்று மற்றவர்களின் கருத்தை கவராமல் டியூட்டி செய்ய முடியுமானால் நான் கிளம்பி போன பதினைந்து நிமிடம் கழித்து வரச்சொல்லுங்கள் என்று கூறினான்

சார் பிரஸ் வெளியில் இருப்பாங்க என்று சொல்லிய மறுநிமிடம் அவங்க பி.எம்.டபிள்யூ கார் வெளியில் வந்தால்தான் ஓடிவருகிறார்கள் நான்(உள்ளே இருந்த சிசிடி கேமாரா மூலம்) அதை நோட் பண்ணிட்டேன். சோ இன்னோவாவை நான் எடுத்துட்டுபோறேன் என்று ஆதித் கூறியதற்கு சார் நீங்களா? டிரைவர் என்று திரும்ப வாய் திறந்து சொல்லிகொண்டிருக்கும் போது தீரன் ஸ்டாப்பிட் என்று கூறினான்

அவனின் பதில் குரல், பெரிய ஒலியை கொடுக்கவில்லை என்றாலும் அவனின் கண்களின் தோன்றியிருந்த உக்கிரம் அந்த செக்யூரிட்டி டீமின் ஹெட்டுக்கு பயத்தை கொடுத்தது அவனின் அரண்ட தோற்றத்தை கண்ட தீரன் கூறினான். ஐ கேன் சேப் மை ஸெல்ப் .நான் இங்கு வருவதற்கான கம்பெனி ட்யூட்டி டைம் மட்டும் நான் உங்க டீமை என் கிட்ட வைத்துகொள்கிறேன் மத்த நேரம் எனக்கானது, அதில் பாதுகாப்பு என்ற பெயரில் உங்களின் குறுக்கீடு எனக்கு இருப்பதை நான் விரும்பமாட்டேன் என்றவன் ஒருபேக்பேக் மாட்டிகொண்டே கார் கீ என்று என்று கேட்டான்.

அவனை மறுத்துபேச பயமாக இருந்ததினால் தன்னிடம் இருந்த கீயை எடுத்துநீடினான்.

காரில் கூகுள் மேப்பில் போகவேண்டிய இடத்தின் வழியை பார்த்துக்கொண்டே டிரைவ் செய்தான் தீரன் அவன் இந்தியா வரும்முன் ரைட் சைடு டிரைவிங்கிற்கு பயிற்சி எடுத்திருந்ததால் அவனால் காரோட்டமுடிந்தது என்றபோதிலும் காற்றின் வேகத்தில் டிரைவ் செய்து பழக்கப்பட்ட அவனுக்கு இங்கு மிதமான வேகத்திலும் குறுக்கு மறுக்கே வந்த இடைஞ்சல்களினைக் கண்டு எரிச்சலாக இருந்தபோதிலும் லாவகமாக கரை செலுத்தியவன் ஹோட்டலை அடைந்து உள்ளே ரிசப்சனில் வி ஐ பி ரூம் ஒன்று புக் செய்தவன் ஆண்லைனில் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு விரைந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.