இமாமியால் தீரனின் அந்த கலாய்த்தலை லேசில் எடுத்துகொள்ள முடியவில்லை. தீரன் தனக்கு மறுவாழ்வு கொடுத்தான் இருந்த போதிலும் அவனின் அபரிமிதமான ஹாக்கிங் திறமையை தீரன் சந்தேகிப்பதா? என்று டெம்ட் ஆன இம்மாமி, தீரனிடம் தன்னை புரூப் செய்வதற்கு ஒரு காரியம் செய்து மறுநாள் தீரனை வியக்கவைத்திருந்தான் .
அந்த செயல் தீரனுக்கு இப்பொழுது நியாபகம் வந்தது உடனே தீரன் இமாமியை பட்டன் போனில் தொடர்பு கொண்டான்.
மொபைலை எடுத்த இமாமியிடம் தீரன் கேட்டான்
இம்மாமி நான் இங்கு வரும் ஒருவாரம் முன்பு பிராங்குடன் ஒரு கரண்ட் அக்கவுன்ட் ஓபன் செய்யப்போகும் போது.... எனக்கு சேப்டிக்காக உடன் வந்த நீ. பிராங் அக்கவுன்ட் ஓபன் செய்தபின் அந்த அக்கவுண்டின் பாஸ்வேர்ட் செட்செய்து அதை அவனின் மொபைலில் செக்செய்துவிட்டு பிராங் அவனின் கையில் வைத்துகொண்டு என்னுடன் பேசிகொண்டிருக்கும் பொது.... நாங்கள் அறியாமல் நீ அவனின் பின் நின்று.... அவன் மொபைலில் ரீடிங் டிவைஸ் யூஸ் செய்து அவனின் அந்த கரண்ட் அக்கவுன்ட் மற்றும் பாஸ்வேர்டை உன் டிவைசில் கேப்சர் செய்து வைத்து நாம் ஆபீஸ் வந்ததும் என்னிடம் காண்பித்தாயல்லவா? அது நியாபகம் இருக்கிறதா என்று கேட்டான்.
(மொபைல் பேங்கிங் மூலம் பணம் வித்ரா செய்பவர்கள் சுமார்ட் போன் யூஸ் செய்துவிட்டு வைத்த பத்து நிமிடங்களுக்குள் அவர்களின் அருகில் மொபைல் ரீடிங் டிவைஸ் கொண்டு சென்று அவர்களின் கடைசியாக மொபைலை யூஸ் செய்த டீடைல்சை அந்த டிவைசின் மூலம் திருடுதல் )
பாஸ் எனக்கு நல்ல நியாபகம் இருக்குதே.. நீங்க கூட அந்த அக்கவுன்ட் ரொம்ப கான்பிட்டேன்டியல் ஆனது என்றும் உங்களுகுக் கூட அந்த பாஸ்வேர்டை பிராங் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தீர்கள்.
மேலும் அதற்கு நான் சொல்லியிருந்தேன் அந்த அக்கவ்ன்ட் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை அந்த டிவைஸ் யூஸ் செய்து பிராங்கின் அந்த அக்கவ்ண்டில் பணத்தை யார் வித்ரா செய்தார்கள் என்று பிராங் அறியாமல் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் மொபைல் பேங்கிங் டிரான்செக்சன் மூலம் பணத்தை திருடிக்கொள்ளலாம் என்று நான் உங்களிடம் கூறியிருந்தேன் பாஸ் என்றான் இமாமி.
எஸ்..அதேதான் இமாமி. நீ என்ன செய்ற அந்த அக்கவுன்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதனை இந்த ஒருவாரத்தில் எங்கிருந்தெல்லாம் அந்த அக்கவ்ண்டிற்கு பணம் வந்திருகிறது என்ற டீடைல்ஸ் எல்லாம் அந்த டிவைசில் உள்ள அவனின் அக்கவுன்ட் பாஸ்வேர்ட் மூலம் கேதர் செய்து வை. நான் சொல்லும் போது சொல்கின்ற அக்கவுண்டில் அந்த பணத்தை அவனது அக்கவுண்டில் இருந்து டிரான்ஸ்பர் செய்திடு என்று கூறினான்.
பாஸ் நான் சொல்வதுபோல் அந்த அக்கவ்ன்டில் இருந்து பணத்தை யார் எடுத்தார்கள் என்ற விஷயத்தை சாதாரண மனிதர்களால் கண்டுபிடிப்பது கடினம்தான்
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ளவர்களை கூட தெரிந்துவைத்திருக்கும் பிராங் போன்ற ஆட்களால் முயற்சிசெய்தால் உலகத்தின் எந்த மூளையில் உள்ள அக்கவ்ன்ட் யார் கணக்கிற்கு டிரான்சர் ஆகிஇருக்குது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினான்.
ஆமாம் இம்மாமி நீ சொல்வதுபோல் பிராங் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்துகொண்டு ஆக்சன் எடுக்கத் தொடங்கும் இடைவெளிக்காலம் நம்மளுடையது. ப்ராங் என்னை அடக்கப்பார்கிறான் அது அவனுக்கே குழிப்பறிப்பதற்கு சமானம். அவனுக்கு எனக்கும் இடையில் ஒரு தீர்க்கப்படாத கணக்கு இருக்கு இதன் மூலம் அந்த கணக்கை நான் நேராக்கிக்கொள்வேன் என்றான் தீரன். மேலும் இமாமிக்கு சில கட்டளைகளை பிரபித்தவன் தொடர்பை துண்டித்தான்.
தொடர்பை துண்டித்தவன் லேப்டாப்பை சட்டவுன் செய்து எடுத்து மீண்டும் தனது பேக்பேகினுள் வைத்தவன் தனது திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் செய்து எடுத்துகொண்டான். பின் ரூமிற்கு வந்த இரவு உணவை உண்டவன் . வேறு புதிய ட்ராக்சூட் மற்றும் டீசர்ட் போட்டுகொண்டு ரூமை உள்பக்கம் தாளிட்டான். ரூமின் பால்கனிக்கு வந்து சுற்றிலும் கூர்ந்து கவனித்தான். அங்கிருந்த இரவின் இருளை அங்கு போடப்பட்டிருந்த விளகுகளின் வெளிச்சம் விரட்ட முயன்றுகொண்டிருந்தது. அவனின் ரூமின் பால்கனியில் அருகில் மரத்தின் கிளை நீண்டு இருந்தது பேக்பேக்கை தனது தோள்களில் மாட்டியவன் பால்கணி சுவற்றில் ஏறி கையில் வைத்திருந்த கொக்கியுடன் கோர்த்திருந்த கயற்றின் நுனியை பிடித்தபடி கொக்கியை தூக்கி அடர்ந்திருந்த அந்த மரத்தின் மீது விட்டெறிந்தான்
அந்த கொக்கி அதன் பெரிய கிளையில் லாவகமாக மாட்டிகொண்டது அதன் கையிற்றை இழுத்துப்பார்த்தவன் பின் அதனை தன் இடுப்போடு சுற்றி நாட்போட்டுகொண்டான்.
அந்த கிளையை பிடித்து அதில் தொத்தி அந்த மரத்தின் கிளையின் வழியே சென்று கொக்கியயையும் எடுத்துகொண்டவன் மரத்தின் வழியே கீழிரங்கினான்.
அவனின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுசெய்திருந்த செக்யூரிட்டி டீம் அவன் ரூமிற்குள் இருப்பதாக நினைத்து உள்ளேயிருக்க அவன் ஹோட்டலைவிட்டு வெளியேறியிருந்தான்.
அவன் ஹோட்டல் இருந்த தெருவை கடந்ததும் கருப்புநிற வால்வோS60 காருடன் மாதவன் அவனுக்காக காத்திருந்தான்.
தொடரும்
{kunena_discuss:1212}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.