அவ்வாறு அவன் செல்லும் போது அவனின் பாதுகாப்பிற்கு சி.என்.ஜி நிறுவனம் அமர்த்தியிருந்த செக்யூரிட்டி ஆட்கள் அங்கு வந்து தீரனை இடைவெளிவிட்டு யூனிபார்ம் இல்லாத கேசுவல் டிரஸ்சில் இடைவெளி விட்டு பின் தொடர்வதை கண்ட தீரன் தனக்குள்ளேயே சிரித்துகொண்டான்.
அவ்வாறு போகும்போது அவனுக்கு எதிர்திசையில் நடந்து வந்தான் மாதவன் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர் தூரம் வந்த மாதவனை பார்த்து கை தூக்கி ஹாய் என்று தீரன் சொல்லியதை பார்த்த மாதவனுக்கு மயக்கமே வந்தது போல் இருந்தது
யூ.எஸ்.ஏ வில் அவனை சுற்றி இருக்கும் பாதுகாப்பு அரனையும் அவனின் கம்பீரத்தையும் உயரத்தையும் அறிந்தவன் மாதவன் அவன் இந்தியாவில் செய்யவேண்டிய ப்ராஜெக்ட் பற்றி பேசுவதற்கு மூன்று தடவை அமெரிக்காவில் உள்ள அவனின் அலுவலகத்தில் தீரனை சந்திக்க சென்றபோது தீரனின் முன்பு அமர்ந்து பேசுவதற்கு கூட மாதவனுக்கு உதரலாக இருந்தது. அப்படிபட்டவன் கேசுவலாக தன்னை பார்த்து கை அசைத்ததை கண்டு பரவசபட்டுபோனான்.
மாதவனிடம் வானவராயனை பற்றிய டீடைல்ஸ் கலக்ட் செய்யவேண்டும் என்று மட்டுமே கூறப்படிருந்தது தீரனுக்கும் வானவராயனுகும் உள்ள தொடர்பை பற்றி அவனிடம் தெரிவிக்காததால் மாதவன் அந்த வேலை தனக்கு கொடுத்த ப்ராஜெக்ட் என்று மட்டுமே நினைத்திருந்தான் ஆனால் வானவராயனின் போட்டோஸ் மற்றும் மறைமுகமாக நின்று அவரை நோட் செய்தபோது அவருக்கும் தீரனுகும் உள்ள உருவ ஒற்றுமைகளை கண்டு அவனுக்கு சற்று நெருடல் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அவனால் வெளிபடையாக தீரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அடக்கியே பேச முடிவெடுத்திருந்தான்.
தீரனின் கை அசைவை கண்டு வேகமாக எஸ் பாஸ் என்றபடி அவனின் அருகில் நெருங்கியவனுக்கு கை குலுக்கிய தீரன் சாதாரணமாக அவனிடம் நலம் விசாரித்தான் பின் மற்றவர்களுக்கு கேட்டமுடியாத தணிந்த குரலில் பிராஜெக்ட் பெண்டிரைவை உங்களின் உள்ளங்கையில் மறைத்து வைத்துகொள்ளுங்கள் மாதவன்.நாம் மேஜைக்கு சென்று காபி சாப்பிட்டுவிட்டு விடை பெறுகையில் ஷேக்கன் பன்னுபோது அதை நான் மற்றவர் அறியாமல் வாங்கிகொள்கிறேன் என்று கூறினான்.
அதேபோல் பொதுவாக பேசிவிட்டு காபி அறிந்துமுடித்ததும் விடை பெறுவதற்கு மாதவனிடம் கை குலுக்குவதுபோல் மாதவனின் கையில் இருந்த பெண்டிறைவை கை பற்றினான் தீரன்
பின் ஹோட்டலில் தான் புக் செய்த ரூமிற்குச்சென்று இரவு உணவை அங்கேயே வரச்சொல்லி ரிசப்சன் போனில் ஆர்டர் கொடுத்துவிட்டு தனது பேக்கில் இருந்த லேப்டாப்பை எடுத்து அதில் மாதவனிடம் இருந்து வாங்கிய பெண்டிரைவ்வை போட்டுபார்த்தான்.
வானவராயரை பற்றிய குறிப்பு முதலில் டிஸ்பிளே ஆனது .அதில் அவர் பெருவிவசாயி என்று குறிபிடப்படிருந்தது மேலும் அவர் ஊட்டியில் காபி மற்றும் ஏலக்காய், மிளகு எல்லாம் சேர்ந்த பல ஏக்கர் எஸ்டேட் இருப்பதாகவும் இயற்கைமுறையில் பழத்தோட்டம் ஒன்று பெரும் அளவில் அவர் உருவாகியுள்ளார் என்றும் மேலும் அவர் இயற்கை விவசாயி என்றும் குறிப்பு இருந்தது
மேட்டுபாளயத்தில் உள்ள தனது பல ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் புரிந்து வறுகிறார் என்றும் அங்கிருக்கும் மக்களுக்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும் அங்குள்ள மற்ற விவசாயிகளின் முன்னோடியுமாக இருப்பவர் என்று அதில் தெரிவிக்கப்படிருந்தது.
அதை அறிந்ததுமே தான் அமெரிக்காவில் இருந்து செய்ய வந்திருக்கும் வேலைக்கு முதல் எதிரி தனது தந்தைதான் என்று எண்ணிகொண்டான்.
அவர் பண்ணை வீட்டில் வசிப்பவர் என்றும் அவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டால் என்றுமட்டுமே குறிபிடப்படிருந்தது மற்றபடி வானவராயரின் முதல் மனைவியை பற்றி எந்த விபரமும் அதில் இல்லை
வானவராயரின் இரண்டாம் மனைவி என்று வெள்ளையம்மாளின் போட்டோவும் . அவரின் ஒரே மகள் என்று மகள் பிருந்தாவின் போட்டோவும் இருந்தது.மேலும் அவர்களின் பண்ணை வீட்டின் உள்ளே அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த போட்டோசும் இருந்தது. அதில் வீட்டின் முன் இருந்த தோட்டத்தில் பிருந்தாவுடன் கூட இருந்த உருவத்தை கண்டு ஒரு நிமிடம் கண்ணசைக்க மறந்தான்.
அவ்வளவு நேரம் அவனின் தந்தையின் குடும்பத்தை பார்த்தவனின் மனம் தன்னுடைய முகவரி இதோ ஆனால் அந்த முகவரியில் இருந்து தொலைந்த தனது நிலையை எண்ணி ஏனோ மனம் கனத்திருந்தது. அப்படிப்பட்டவனுக்கு பிருந்தாவின் அருகில் புகைப்படத்தில் சிரித்தபடி இருந்த யாழிசையை கண்டதும் வாட் எ மிராக்கில் .இவளுக்கு என் டாடியின் குடும்பத்துடன் என்ன சம்பந்தம் என்று எண்ணி கொண்டிருக்கும் போதே. அவனின் ஆப்பிள் ஐ போன் ஒலிஎழுப்பியது.
டிஸ்பிளேயில் பிராங்கின் பெயர் மின்னவும் தனது மொபைலை பார்த்தபடி, லேப்டாப் ஸ்க்ரீன் ஆப் செய்தவன் பின் போனை எடுத்து சொல்லு பிராங்! நீ எப்படி இருக்க என்று ஆங்கிலத்தில் தனது உரையாடலை ஆரம்பித்தான் (இருவரின் உரையாடலை நான் தமிழிலேயே படிப்போம் )