(Reading time: 17 - 33 minutes)

ஹாய் டீர் ஐ ஆம் பைன். ஆனா நீ இப்போ எதுக்கு உனக்கு நான் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் இடத்தில் தங்காமல் ஹோட்டலில் போய் இருக்கிறாய் தீரா?. நீ ஹோட்டலில் இப்பொழுது பார்த்து பேசிய அந்த கைய் நேம் மாதவன் தானே.....! அவன் உன் கம்பெனியில் தானே வேலை பார்த்தான். என்று கேட்டு தீரன் அவனின் கண்காணிப்பில் இருப்பதை மறைமுகமாக அவனுக்கு சுட்டிக்காட்டினான் பிராங், அவன் பேசி முடித்த மறுநிமிடம்

பிராங் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நமக்கு பழக்கம் இல்லாத அந்நிய இடத்தில் இருக்கும் போது எங்காவது நான் பார்த்து பேசிய முகம் அங்கு தெரிந்தால் நமக்குள் ஒரு பரவசம் வரும் அதை நான் இன்று மாதவனை தற்செயலாக இங்கு பார்த்தபோது எனக்கு கிடைத்தது. நான் அவனுக்கு பாஸ் ஆக இருந்தேன். அவன் என்னிடம் வேலைபார்த்த சாதாரண ஸ்டாப் என்றெல்லாம் என்னால் அப்போ நினைக்க முடியவில்லை.

என்னை தெரிந்த... எனக்குதெரிந்த ஒரு ஜீவன்.. இங்கே.. என்ற பரவசம் மட்டுமே! அந்நேரத்தில் எனக்குள் எழுந்தது. ‘சோ’ அவனுடன் ஒரு கப் காபீ சாபிட்டு மை எக்சைட்மென்ட்டை தனித்துகொண்டேன்.

இதே மாதேசை என் கம்பெனியில் இருந்து வெளியேற்றும்போது பினிஷ் செய்யவேண்டிய பார்மாலிடிஸ்காக அப்பாய்ன்மென்ட் கொடுக்க கூட நான் ஒருநாள் முழுக்க காக்க வைத்து என் வேலையெல்லாம் முடிந்தபின் அவனுக்கு ஒரு நொடியில் சைன்செய்ய நான் நேரம் ஒதுக்கினேன் தெரியுமா? பிராங்.

ஓகே பிரன்ட் இப்போ நாம் நம்ம ப்ராஜெக்ட் பத்தி பேசலாம் பிராங் . எஸ்டர்டே நம் பிளான்படி மிஸ்டர் ரங்கராஜனுடன் மீட்டிங் நடைபெற்றது அதில் நம் குறிக்கோளின் முதல் அடியை சக்சஸ்புல்லா எடுத்துவச்சாச்சு ..

தென், ஐ ரிமைன்ட் யூ. பிராங் நான் ஏற்றுவந்த பணியில் ஏதேனும் ஒபீனியன் சொல்லவேண்டுமென்றால் நீ என்னிடம் கேட்கலாம். ஆனால் நான் நம் ப்ராஜெக்ட் செய்யும் நேரம்போக மற்ற நேரங்கள் அனைத்தும் என்னுடையது பிராங் .

என்னுடைய நேரத்தில் நான் எங்கு போகிறேன் யாரை பார்கிறேன் என்ன செய்கிறேன் என்றெல்லாம் நீ கேள்விகேட்பது நல்லதல்ல என்னை நீ அனுப்பும் மற்ற எகானமிக் ஹிட்மேன்போன்று அடக்கி நடத்தனும் என்று நினைத்தாய் என்றால் ஏமார்ந்து போய்விடுவாய் பிராங், என்று சற்று காட்டமாகவே பேசினான்.

தீரன் அவ்வாறு பேசியது பிராங்கிற்கு உவப்பானதாக இல்லை இருந்தபோதிலும் தன்னுடைய கோபத்தை இப்போ அவனிடம் காண்பிப்பது சரியல்ல என்பதனை மனதினில் கொண்டு கொஞ்சம் நிதானமாகவே பேசமுயன்றான் பிராங்.

தீரா ஐ நோவ் யூ. பட் இந்த ப்ராஜெக்ட் நாம் செய்ய முடிவெடுத்ததும் நமக்கு இந்த ப்ரோஜெக்ட் லீட் செய்ய ஸ்பான்சர் செய்த மில்லினியர்ஸ் யாரும் லேசுபட்டவர்கள் கிடையாது.

நான் உன்மேல் உள்ள நம்பிக்கையில் உன்னை கேள்விகேட்காமல் இருக்கலாம் ஆனால் நம் ப்ராஜெக்ட் மூவ்ஸ் பற்றியும் உன் செயல்பாடுகள் பற்றியும் அவர்கள் என்னிடம் மட்டும் கேட்பதோடு நின்றுவிடமாட்டார்கள்.

அவர்களும் உன்னை பாலோ செய்வார்கள். ஏனெனில் இந்த ப்ராஜெக்ட் சக்சஸ்புல்லா முடிந்தால் கிடைக்கும் பெரும் லாபத்தில் அவர்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் மிகப்பெரிய அளவு பணத்தை இந்த பிராஜெக்டுக்காக அவர்கள் ஸ்பான்சர் செய்துள்ளனர்.என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்ட தீரன், ஆனவமான சிரிப்பை பிராங்கின் காதிற்கு அனுப்பியவன். என்னை மிரட்டி கன்ரோல் செய்யபார்கிறாயா பிராங்.

நான் ஏற்றுவந்த ப்ராஜெக்ட் மூவ் எடுத்துவைக்கும் சந்தர்பங்களில் மட்டும் நீ எனக்கு ஏற்பாடு செய்திருக்கும் பாதுக்காப்பு மற்றும் வீட்டை யூஸ் செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போழுது அந்த முடிவை மாற்றிக்கொண்டேன். ப்ராஜெக்ட் மூவ் நல்லபடி நான் செய்து முடிப்பேன் ஆனா அந்நேரம் கூட நீ ஏற்பாடு செய்திருக்கும் பாதுகாப்பு வளையத்துக்குள் நான் அகப்படமாட்டேன் , பை மை டியர் பிரன்ட் என்றபடி மொபைல் இணைப்பை கட்செய்தான்.

மொபைல் இணைப்பை துண்டித்த மறுநிமிடம், தீரன் மூச்சை இழுத்து வெளியிட்டு உள்ளிழுத்து தனது கோபத்தை குறைக்க முடிவெடுத்தான் அப்பொழுது அவனின் முன் இருந்த சிஸ்டத்தின் ஸ்கிரீன் சேவரை நீக்கியதும் அதில் அவன் பெரிதாக்கிவைதிருந்த யாழிசையின் உருவத்தை கண்டவன் உள்ளம் ஆசுவாசமடைந்தது.

அவன் உதடுகள் தாங்க்ஸ் பேபி என்று முனுமுனுத்தபடி அவனின் விரல் அவளின் முக வடிவை திரையின் மேலேயேதொட்டு ரசித்தது.

பின் தன செயலை நினைத்து சிரித்தபடி ஐ டோன்ட் வான்ட் டூ மிஸ் யூ பேபி என்றவன் கண்ணை மூடி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தீரன் இந்தியா வரும் ஒருவாரம் முன்பு, இமாமியுடன் அவனும் சேர்ந்து ஆபீஸில் ரூமில் இருக்கும் போது ஒரு தடவை விளையாட்டுபோல் இமாமியிடம் நீ என்ன அவ்வளவு பெரிய மொபைல் ஹாக்கிங் ஜாம்பவானா? உன்னால் வெளியில் இருக்கும் சாதாரண மக்களிடம் வேண்டுமானால் உன் வேலையை காட்ட முடியும். பெரிய விவிஐபிகளிடமெல்லாம் உன் ஜம்பம் செல்லாது இப்போ அவங்கெல்லாம் ரொம்ப அலார்ட் ஆகிட்டாங்க என்று கூறி அவனை கலாய்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.