(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 06 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

வணக்கம் நட்பூக்களே

நான் போன அத்தியாயத்தில் நான் கேள்விப்பட்ட மொபைல் ரீடிங் டிவைஸ் என்று ஹேக்கிங் பற்றிய உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் கதைக்கு ஏற்றவாறு அதை அப்படியே பிரதிபளித்துவிட்டேன்

ஆனால் அதன் பின் Akila,Anniesharan,SAJU,AdharvJo ஆகியோர் நான் மொபைல் ரீடிங் டிவைஸ் என்று ஹேக்கிங் பற்றி கூறியிருந்ததை நம்பகமான தகவலாக நினைத்து கமெண்ட் கொடுத்திருந்தனர்

அதை பார்த்ததுமே உங்களிடம் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். இனிமேல் இதுபோல் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு கதை புனையாமல் அதன் உண்மைத்தன்மை பற்றி அறிந்த பின்பே இது போன்ற விசயங்களை என் கதையில் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன்.

மேலும் உண்மையான ஹேக்கிங் பற்றி கொஞ்சம் கணினியில் தேடல்களை மேற்கொண்டு அதன் அடிபடையில் இந்த கதையை மாற்றி அமைத்து உங்களிடம் சமர்பித்துள்ளேன்.

மேலும் ஹேக்கிங் பற்றிய ஒரு குட்டி ஆர்டிகளையும் இத்துடன் இணைத்து உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரமின்மை காரணமாக நான் சேகரித்த தகவல்களை தொகுத்து வழங்க முடியாததால் இந்த கதையுடன் அந்தஆர்டிகளை என்னால் கொடுக்க இயலவில்லை. அடுத்த அத்தியாயத்தை படிக்க காத்திருக்கும் உங்களை ஏமாற்றிவிடகூடாது என்பதற்காக ஊருக்கு போய் வந்தபின் கிடைத்த நேரத்தில் வேகவேகமாக மாற்றி அமைத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

தீரன் இந்தியா வரும் ஒருவாரம் முன்பு இமாமியும் அவனும் சேர்ந்து ஆபீஸ் ரூமில் இருக்கும் போது ஒரு தடவை விளையாட்டாக இமாமியிடம், நீ என்ன அவ்வளவு பெரிய மொபைல் ஹாக்கிங் ஜாம்பவானா? உன்னால் வெளியில் இருக்கும் சாதாரண மக்களிடம் வேண்டுமானால் உன் வேலையை காட்ட முடியும். பெரிய விவிஐபிகளிடமெல்லாம் உன் ஜம்பம் செல்லாது .இப்போ அவங்கெல்லாம் ரொம்ப அலார்ட் ஆகிட்டாங்க என்று கூறி இமாமியை கலாய்திருந்தான்.

இமாமியால் தீரனின் அந்த கலாய்த்தலை லேசில் எடுத்துகொள்ள முடியவில்லை. தீரன் தனக்கு மறுவாழ்வு கொடுத்தான் இருந்த போதிலும் அவனின் அபரிமிதமான ஹாக்கிங் திறமையை தீரன் சந்தேகிப்பதா? என்று டெம்ட் ஆன இம்மாமி, தீரனிடம் தன்னை புரூப் செய்வதற்கு ஒரு காரியம் செய்து மறுநாள் தீரனை வியக்க வைத்திருந்தான் .

முன்பு... லண்டனில் வசிக்கும் மகேஷ் மல்கோத்ராவின் புதிதாக அறிமுகப்படுத்திய டெக் நியூ மாடல் போனின் மொமண்ட்ஸ் எல்லாம் தீரனின் மைக்ரோ மொமண்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்துகொடுத்தது.

அந்த மொமண்ட்ஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் அந்த போன் வடிவமைப்பில் தீரன் கொடுத்த சில ஐடியாக்கள் மூலம் அந்த போனுக்கு சந்தையில் வாங்க பெரும் போட்டிநிலவியது.

எனவே லண்டன் வாசியான இந்தியவம்சாவளி மகேஷ்மல்கோத்ரா அவருக்கு தீரனின் மேல் பெரும் மதிப்பும் தீரனின் பிஸ்னஸ் மூளைக்கு அவர் பெரிய விசிறியுமாக ஆகியிருந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பிராங்கை தீரன், மகேஷ்மல்கோத்ராவின் டெக் நியூ மொபைல் ஷோரூம் திறப்புவிழாவில் கலந்துகொள்ள கூட்டிக்கொண்டு சென்றான் ..

பிராங்கிற்கு ஒரு பழக்கம் இருந்தது சந்தையில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் மாடல் மொபைல்களை முதலில் வாங்கி உபயோகத்து அதை பற்றி சிலாகிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.

தீரன் பிராங்குடன் நுழைவதை கண்ட மகேஷ்மல்கோத்ரா இருவரையும் வரவேற்று தனது மொபைல் வெளியீட்டு விழாவில் சிறப்பிக்க வந்த விருந்தினர் என்று அங்கு கூடியிருந்த விஐபிகளிடமும் பிரஸ் ரிபோர்டர்கள் முன்பும் அறிவித்தவர்.

தங்களது நியூ போன் அறிமுக நிகழ்ச்சியின்போது 22 கேரட் தங்க பிளேட் கொண்டு வடிவமைக்கப்பட்ட அரிதான மூன்று மொபைல்களை (விளம்பரத்திற்காக) வடிவமைத்திருப்பதாக கூறி அதை பார்வைக்கு திறந்து வைக்கும் பொறுப்பை தீரனிடம் வழங்கினார்.

அதை பார்வைக்கு திறந்து வைத்த தீரனிடம் அதில் ஒன்றை தீரனுக்கு அவரின் வெற்றிக்கு வித்திட்டவன் என்ற அடிப்படையில் பரிசாக வழங்கப்படுவதாக கூறி எடுத்துகொடுத்தார். மற்றொன்றை அவரது நிறுவனத்தின் ஷோரூமை அழகுபடுத்துவதற்காக வைக்கப்டுவதாக அறிவித்தார். இன்னும் ஒன்றை ஒன்னரைமில்லியன் டாலருக்கு விற்பனைக்கும் வைத்திருந்திருப்பதாகவும் மிகவும் பிரபலமான ஒருவரிடம் ஒன்னரை மில்லியன் டாலருக்கு அதை கொடுக்க இருப்பதாகவும் அந்த நபர் யார் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பேட்டிகொடுத்தார்.

தீரனுடன் வந்திருந்த பிராங்கிற்கு அந்த மொபைலை தான் தான் வாங்கவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது மனதிற்குள் அரிதான மதிப்புமிக்க ஒன்று தன்னிடம் இல்லாமல் தீரனிடம் மட்டும் இருப்பதா என்ற பொறாமையும் அதில் சேர்ந்துகொண்டது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.