(Reading time: 22 - 44 minutes)

தீரனுக்கு பிராங்கிற்கும் இடையே சிறுவதில் இருந்து ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, தீரன் பிராங்கிற்கு ஏதேனும் காரியம் செய்துகொடுத்தால் அதற்கு பதிலுக்கு பிராங் தீரனுடன் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கு கொள்ளவேண்டும் அல்லது தீரன் பிராங்கிர்காக ஒரு காரியம் செய்து முடித்தால் பிராங் தீரன் கேட்கும் ஒன்றை கொடுக்கவேண்டும் இதுவே அவர்களின் டீலாக இருந்தது .

பிராங்கால் தீரனுடன் போட்டியில் கலந்து ஜெயிக்க முடியாது எனவே அவன் தன்னிடம் கேக்கும் பொருளை அவனுக்கு வழங்குவதாக கூறி அவனை தனக்கு வேண்டிய காரியத்தை செய்ய வைப்பான் பிராங்.

இப்பொழுது தீரனின் மூலமே அந்த மூன்றாம் கோல்டு பிளேட் செல்போனை வாங்க பிராங் முடிவு செய்தான் எனவே, தீரா ஒரு டீல் நமக்குள் என்று தீரனிடம் பேச்சுகொடுத்தான் பிராங்.

பிராங்கின் பார்வை அந்த கோல்ட் பிளேட் செல்போனின் மீது ஆவலாக படிவதை ஏற்கனவே தீரன் கண்டுகொண்டான். எனவே, அவன் டீல் என்று பேசியதுமே தீரன் கூறினான் என்ன பிராங் அந்த மூன்றாம் கோல்ட் பிளேட் மொபைல் உனக்கு கிடைக்க நான் ஏற்பாடு செய்யணும் அப்படிதானே என்று கேட்டுவிட்டு அவனின் முகத்தை பார்த்தான் தீரன்

அதற்கு எஸ் தீரா! “ஐ வான்ட் இட்” என்று பிராங் கூறவும் அப்போ நீ இப்போ வைத்திருக்கும் உன் ஆப்பில் ஐபோனை என் இமாமிற்கு நீ கிப்ட்டாக கொடுக்கவேண்டும் என்றான்

ஏனெனில் போன வாரம் தான் பிராங் அந்த மொபைலை வாங்கினான். இன்றுவந்ததுபோல் அன்றும் மாலுக்கு பிராங்கும் தீரனும் தங்களுக்கு வேண்டிய திங்க்ஸ் பர்சேஸ் செய்ய வந்திருந்த போது எப்பொழுதும் போல் இமாமியும் தீரனுக்காக அவனின் பாதுகாப்புக்காக உடன் வந்திருந்தான் அப்பொழுது அங்கிருந்த மொபைல் ஷோரூமில் இருந்த அந்த ரேர் கலர் அட்வான்ஸ் ஆப்பிள் மொபைலை ஆர்வமுடன் வாங்குவதற்கு இமாமி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்

அப்பொழுது அவனுக்கு வந்த மொபைலை அட்டன் செய்துவிட்டு திரும்பி அந்த மொபைலை வாங்குவதற்கு இமாமி அது இருந்த இடத்தை பார்த்தால் அது எம்டியாக இருந்தது கேஸ் கவுண்டரில் பிராங் அந்த மொபைலை வாங்கிகொண்டிருப்பதை பார்த்த இமாமியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது

இமாமி அந்த மொபைலை ஆர்வமாக பார்க்கும்போதே பிராங்கின் பார்வையும் அதில் பதிந்துவிட்டதை கண்டுகொண்டான் தீரன். இமாமிக்கு மொபைல் அழைப்பு வந்த தருணத்தை தனக்கு சாதகமாக்கிகொண்டு அந்த மொபைலை பிராங் பே செய்து வாங்கியதை கிட்ட இருந்து பார்த்தவன் தீரன். எனவே இப்பொழுது அவன் ஆசைபட்ட அந்த கோல்ட் பிளேட் மொபைலை பிராங் அடைவதற்கு தீரன் உதவிசெய்தால் அவன் போனவாரம் இம்மாமி ஆசையாக வாங்க நினைத்ததை தன்வசமாகிய அந்த மொபைலை இமாமியிடமே கொடுத்துவிடவேண்டும் என்று டீல் பேசினான் தீரன்.

தீரனின் இந்த டீலை ஏற்பதற்கு யோசித்த பிராங்கிடம் தீரன் கூறினான், பார் இந்த கோல்ட் ஐபோனை.... நீ யோசிப்பதை பார்த்தால், இந்த ரேர்பீஸ் உனக்கு கிடைக்கும் அதிஸ்டம் உனக்கு இல்லைபோல என்று கூறினான்

அவனின் அந்த வார்த்தையில் டெம்ட் ஆன பிராங், ஓகே! ஓகே! தீரா நீ எனக்கு இந்த கோல்டன் ஐ போன் கிடைக்க நீ உதவினால் என் இந்த ஐபோனை இமாமிக்கு நான் கிப்டாக கொடுத்துவிடுகிறேன் என்று ஒப்புக்கொண்டான்.

இங்குதான் பிராங்கிற்கு எதிராக விதி வேலைசெய்ய ஆரம்பித்தது.

தீரன் கூறியதுபோல் அந்த கோல்டன் டெக் ஐ போனை மகேஷ் மல்கொத்ராவிடம் பேசி பிராங்கிற்கு அதை விற்பதற்கு ஒப்புகொள்ள வைத்தான். தீரனின் மேல் கொண்ட அபிமானத்தால் அவரும் பிராங்கிற்கு அதனை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டு அதே மேடையிலேயே அந்த ரேர் ஐ போனை வாங்கும் அதிர்ஷ்டசாலி பிராங் என்று அறிவித்துவிட்டார் .

அந்த ஐபோனிற்குரிய ஒன்ரைமில்லியன் டாலருக்கான செக்கை கொடுத்த மறுநிமிடம் தீரன் தனது மறு கையை நீட்டி உன் ஐபோன் கொடு. நான் , நீ இமாமிக்கு பிரசன்டாக கொடுத்தாய் என்று இதை அவனுக்கு கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டான்

அதற்கு இப்போவேவா வீட்டிற்கு போனபின் கொடுக்கிறேன் என்றதும் அதற்கு மறுப்பாக தீரன் தலையசைத்தான்.

இதெல்லாம் அருகில் நின்றிருந்த இமாமி பார்த்தும் பார்க்காதமாதிரி தீரனின் பின் பாடிகார்ட் என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தான்.

பிராங் செக் கொடுத்த மறுநிமிடம் கோல்டன்போன் கிட் பேக் மற்றும் பில்லுடன் அவனுக்கு வழங்கப்பட்டதை எடுத்து பிரித்து தனது மொபைலில் இருந்த சிம் மற்றும் காண்டாக்ட்ஸ் அனைத்தயும் சென்ட் செய்து தான் போனவாரம் வாங்கியிருந்த போனின் மெமரிகார்டு மற்றும் சிம்மை எடுத்து இப்பொழுது வாங்கிய நியூ கோல்டன் டெக் ஐ போனில் போட்டவன் ஒருவாரம் முன்பு இமாமியிடம் போட்டிபோட்டு வாங்கிய அந்த போனை தீரனிடம் கொடுத்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.