(Reading time: 22 - 44 minutes)

அவனிடம் பதில் கூறாமல் தனது லேப்டாப்பை எடுத்து வானவராயரின் குடும்ப விவரம் இருந்த போல்டரை ஓப்பன் செய்து அதில் பிருந்தாவுடன் இருந்த யாழிசையின் உருவத்தை மாதவனிடம் காண்பித்தவன் இவளைத்தான் கேட்கிறேன் என்று காண்பித்தான்.

ஓ இவுங்களை கேட்கிறீர்களா பாஸ், இது வானவராயர் ஐயா வீட்டு கணக்குப்பிள்ளையின் மகள் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும், கணக்குப்பிள்ளை என்றால்? என்று அதற்கு அர்த்தம் புரியாமல் கேட்டான் தீரன்.

அதற்கு மாதவன் அவர்களின் தொழில் மற்றும் சொத்தின் கணக்குகளை பார்க்கும் அக்கவுண்டர் என்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உடனே தீரன் ஓ ஆடிட்டரா? என்று கேட்டதும், பாஸ் அவர் ஆடிட்டிங் எல்லாம் படித்தவர் கிடையாது. கணேசபிள்ளையின் குடும்பம் வழிவழியாக வானவரயரின் ஜமீன் வீட்டு கணக்குகளை தங்களின் அனுபவ அறிவை வைத்து வரவு செலவுகளை தங்களுக்கு தெரிந்த விதத்தில், பார்பவர்களும் புரிந்துகொள்ளும் விதத்திலும் எழுதி வைத்து அதன் ரகசியம் காப்பவர்கள். இந்தியாவில் செல்வந்தர்களின் வீட்டில் உள்ளவர்கள் அவர்களது வீட்டு கணக்கையும் சொத்து கணக்கையும் மெய்ண்டெய்ன் செய்ய இந்த மாதிரி கணக்குப்பிள்ளைகளை நியமித்துக் கொள்வர் என்றான்.

ஓகே இவரின் மகள் யாழிசையை பற்றி உனக்கு தெரிந்ததை சொல் என்று திரும்பவும் கேட்டான் தீரன்.

பாஸ், கனேசப்பிள்ளயின் மகள் பெயர் யாழிசை என்பதை கூட நான் சரியாக தெரிந்துகொள்ளவில்லை. நான் வானவரயரின் குடும்ப உறுபினர்களை பற்றி மட்டுமே கவனம் செலுத்தினேன்.

வானவராயருக்கும் வெள்ளையம்மாளுக்கும் கல்யாணம் முடிந்து பனிரெண்டு வருடம் முடிந்த பின்பே பிருந்தா என்ற மகள் பிறந்தால் எனவே அதுவரை குழந்தையில்லா அந்த தம்பதியினர் தாயில்லாது வளர்ந்த தங்களது வீட்டு கணக்குப்பிள்ளையின் மகளாகிய இந்த யாழிசையை வெள்ளையம்மாள் பெறாத தாயாக பார்த்துகொண்டதாக கேள்விபட்டேன்.

அந்த கணக்குபிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் வணவராயரின் குடும்பத்தின் மீது மிகுந்த விசுவாசம் உள்ளவர்கள் என்றும் கேள்விப்பட்டேன் .மேலும் யாழிசையின் படிப்புச்செலவை சிறுவயதில் இருந்தே வானவராயர்தான் செய்வதாக கேள்விபட்டேன்.

அதனால்தான் சாதாரண கணக்கரின் மகளாகிய இந்த யாழிசையால் பெரிய பள்ளியில் சேர்ந்து படிக்க முடிந்ததாகவும் இப்பொழுது கோயம்புத்தூரின் டாப் ஒன் எஞ்சினியரிங் காலேஜில் படிக்க முடிவதாகவும் கேள்விபட்டேன் மேலும் இந்த கணக்கு பிள்ளை குடியிருக்கும் வீடுகூட வானவராயரின் தாத்தா அவர்களுக்கு தானமாக கொடுத்தது என்றும் கேள்விபட்டேன்.இது தவிர அந்த யாழிசையைபற்றி வேறெதுவும் தெரியாது எனக்கு என்று மாதவன் கூறினான்.

ஓகே மாதவா! நான் இந்த யாழிசையை பார்த்து பேசவேண்டும் அதுவும் யாருக்கும் தெரியாமல் அவளுடன் பேசவேண்டும் எப்பொழுது எப்படி அவளை பார்க்கலாம் என்று தீரன் கேட்டான்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.