(Reading time: 22 - 44 minutes)

மாதவனின் அருகில் வந்த தீரன் லெட்ஸ் வீ கோ என்றபடி முன்புற கதவை திறந்து ஏறிக்கொண்டான் .மாதவனும் மறுவார்த்தை பேசாமல் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

அவர்களின் கார் ஊட்டியை நோக்கி பயணமாகிக்கொண்டிருந்தது நேரம் இரவு 12:30 ஐ நெருங்கிய வேலையில் மாதவன் ஒரு வீட்டின் முன்பு காரை நிறுத்தினான். தீரன் காரிலேயே அமர்ந்திருக்க மாதவன் இறங்கிமொபைலில் மணி நான் வந்துட்டேன் என்று கூறும் போதே அவனின் அருகில் ஓடி வந்த மணி சார் நான் ரெடி, லண்டனில் இருக்கும் என் முதலாளி மகேஷ்மல்கோத்ரா நீங்கள் கூட்டிகொண்டு வந்திருப்பவரிடம் வீட்டை காட்டும்படியும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி எனக்கு ஆர்டர் செய்திருகிறார். என் பைக்கை எடுத்துகொண்டு நான் முன்னால் போகிறேன் நீங்கள் என்னை தொடர்ந்து வாருங்கள் என்றவன், அந்த இரவு வேலையில் மாதவன் பின்தொடர ஊருக்கு சற்று தள்ளியிருந்த நவீன பார்ம் ஹவுஸ்க்கு கூட்டிக்கொண்டு போனான்.

மணி கூட்டிக்கொண்டுபோன இடம் சுற்றிலும் வீடுகளே இல்லாத பசுமையான தோற்றத்தில் தனித்திருந்த ஒரு மாளிகையாக இருந்தது.

பல ஏக்கரில் சுற்றிலும் உயரமான காம்பவுண்ட் எழுப்பப்பட்டு இருந்தது அதன் கேட் அருகில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் பைக்கில் இருந்தபடியே ஏதோ மணி கூறவும் காரை நோக்கி சல்யூட் அடித்த அந்த வாட்ச்மேன் வேகமாக கேட்டை திறந்துவிட்டவன் ஓடிச்சென்று அங்கிருந்த விளக்குகளை எரியவைக்கும் மின் தூக்கியை இயக்கினான்.

உள்ளே பசுமையாக புல்வெளிகளும் குன்றுகள் போன்ற அமைப்பும் அதில் இருந்து வழிந்த செயற்கையா இயற்கையா என்று ஆச்சரியப்படும் வகையில் வலிந்து சென்றுகொண்டிருந்த நீரூற்றுகளும் மரங்கள் கூட அழகாக செப்பணிட்டு வளர்க்கப்பட்டு இருத்தும் அந்த இரவிலும் அங்காங்கே வழிநெடுக்க அழகான வேலைப்பாடுடைய உயரமான தூண்கலின் மேல் தொங்கிக்கொண்டிருந்த விளகுகளின் வெளிச்சமும் அந்த இடத்தை ரமியமாக காட்டியது .

Poogampathai poovilangal poottiya poovai

உள்ளேசென்ற கார் ஒரு பங்களாவின் முன் நின்றது. தீரன் கீழிறங்கியதும் அவனது மொபைல் ஒலி எழுப்பியது.

ஐ ஆம் மகேஷ் மல்கோத்ரா ஸ்பீக்கிங் மிஸ்டர் தீரமிகுந்தன்.

எஸ்... மிஸ்டர் மாகேஸ் மல்கோத்ரா... ஐ ஆம் தீரமிகுந்தன். ஐ ஆம் இன்பிரன்ட் ஆப் யுவர் ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்.

இன்னும் ஒருவாரத்தில் உங்களது இந்த வீட்டிற்கான அமவுண்ட் உங்க அக்கவுண்டிற்கு வந்து சேரும். தகுந்த நேரத்திள் நீங்கள் செய்த இந்த உதவியை மறக்கமாட்டேன் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா என்றான் தீரன். அவருக்கு இந்தியாவில் பலஇடங்களில் சொந்த ரெசார்ட் இருந்தது அவரின் ஊட்டி ரேசார்ட்டைதான் தீரனுக்கு இம்மாமி கேட்டுகொண்டதின் பேரில் கிரயம் செய்துகொடுக்க முன்வந்துள்ளார். அவருக்கு இதை விற்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் தீரமிகுந்தனின் மேல் உள்ள அபிமானத்தால் தீரன் கேட்டுகொண்டதுக்காக தனது மாளிகையை கொடுக்க முன்வந்துள்ளார்.

உங்களுக்கு உதவி செய்வதை என் கடமையாக நான் நினைக்கிறன் தீரன் . நமக்குள் இன்னும் பல பிஸ்னஸ் ஒப்பந்தங்கள் நிகழவேண்டும் என்பதே என் ஆவல் என்று அவர் கூறவும்

சுயூர் மிஸ்டர் மல்கோத்ரா? வி வில் ஜாயின் டு டூ மெனி வொர்க் இன் பியூச்சர். இப்போ ,ஐ வான்ட் டு டேக் சம் ரெஸ்ட் .பை மிஸ்டர் மல்கோத்ரா என்று கூறிவிட்டு போனை அணைத்தான் தீரன்.

அங்கு அவர்களின் முன் வந்து நின்ற மணியிடம், சார் உங்களுக்கு இங்கு தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்துகொடுகிறேன். என் முதலாளி இங்கு வந்து தங்கும் போது சமைக்க வீட்டை சுத்தம் செய்ய வரும் ஆட்களை காலையில் இங்கு வரவழைத்துவிடுவேன் எதுவும் தேவையென்றால் ஒரு போன் செய்யுங்கள் உங்களின் முன் வந்து நின்றுவிடுவேன் என்றபடி அந்த பங்களாவின் சாவியை தீரனிடம் நீட்டினான்.

மணி நீட்டிய சாவியை மாதவன் வாங்கிகொண்டு அவனிடம் ஓகே மணி நீங்க கிளம்புங்க. இந்த பங்களாவில் தங்கியிருப்பது உங்களின் முதலாளி மகேஷ் மல்கோத்ரா என்றே மற்றவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறி அவனை அனுப்பிவைத்தான்.

அந்த மாளிகையின் உள்சென்றவர்கள் எல்லா இடத்தையும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பாதுகாப்பையும் உறுதிபடுத்திக்கொண்டு ஹால் சோபாவில் எதிர் ஏதிரே அமர்ந்தனர் .

அமர்ந்த மறுநிமிடம் தீரன் மாதவனிடம் வானவராயரின் குடும்பத்திற்கும் யாழிசைக்கும் என்ன சம்பந்தம் அவள் எப்படி வானவராயரின் வீட்டில் குடும்பத்தார் போட்டோவில் இடம்பிடித்தாள் என்று கேள்வியை தொடுத்தான்.

மாதவன் வானவராயரையும் அவரது மகள் பிருந்தா மற்றும் மனைவி வெள்ளையம்மா ஆகியோரை பற்றி தான் தீரன் கேட்பான் என்று நினைத்திருக்க திடீரென்று புதிதாக யாழிசையை பற்றி கேட்டதும் குழம்பிவிட்டான். யாழிசையின் பேரை கூட அவன் சரிவர நினைவில் கொள்ளவில்லை அவள் வானவரயரின் கணக்குப்பிள்ளையாகிய கணேசப்பிள்ளையின் மகள் என்பதை தவிர வேறு ஒன்றையும் அவன் தெளிவாக யாழிசையை பற்றி விசரிக்கததால் யாரை பாஸ் கேட்கிறீர்கள் என்று கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.