(Reading time: 22 - 44 minutes)

தீரன் தனக்கு பின்னால் நின்றிருந்த இமாமியிடம் டேக் திஸ் இமாமி இது என் நண்பன் உனக்கு கொடுக்கும் பரிசு என்று கூறி கொடுத்தான். இமாமி தாங்க்யூசார் என்று பிராங்கிடம் கூறினாலும் அவனது நன்றியை தீரனிடம் காண்பிக்கும் வகையில் அவனுக்கு மேலும் அரணாக தான் நிற்பேன் என்பதை செயலால் உணர்த்தினான் இமாமி.

இப்படியாக இமாமி தனது வசமான அந்த ஐ போனுடன் இதற்கு முன்பு தீரனுடன் பிராங்கின் வீட்டிற்கு செல்லும் போதே அந்த போனில் பிராங்கின் வீட்டில் வொய்பை ஆக்டிவாவதை கவனித்திருந்தான் .

(நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது.

உங்கள் மொபைல் போன் விற்கும் நிலை ஏற்பட்டால் உடனே அதில் உள்ள அனைத்து பர்சனல் விஷயங்களையும் கண்டிப்பாக டெலிட் செய்ய வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் பாதுகாப்பு மட்டும் உங்கள் பர்சனல் டேட்டாக்களைப் பாதுகாக்காது. முடிந்தால் போனை ரீசெட் செய்துவிடுங்கள்.

நீங்கள் உங்களுடைய வங்கியில் உள்ள பணத்தை மற்றொருவரின் வங்கிக்கணக்கிற்கு Net banking பயன்படுத்தி Transfer செய்யலாம். அவ்வாறு Transfer செய்ய வேண்டுமென்றால் நீங்கள் Beneficiary-யை Add செய்ய வேண்டும். அதாவது நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவர்களின் Bank Account Number மற்றும் IFSC number-யை இணைக்க வேண்டும். இதைத்தான் Beneficiary Add என்கிறோம்.)

மேலும் பிராங் அவசரமாக புது கோல்ட் பிளேட் போனை வாங்கி தன் பழைய போனில் இருந்த மெமரிகார்டு மற்றும் சிம் கார்டை எடுத்துவிட்டோமே என்று அசால்டாக பழைய போனை டீலுக்காக தீரனிடம் கொடுத்துவிட்டான்.

அதை கைப்பற்றிய இமாமியின் ஹேக்கிங் மூளை, பிராங்கிடம் வாங்கிய போனில் ஏற்கனவே பதிவாகியிருந்த பிராங்கின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், ரகசிய எண்கள் போன்றவை ஆராய்ந்து தெரிந்துகொண்டான் .ஆனால் அவனின் ஐ.எப்.எஸ்.சி மட்டும் அவனால் தெரிந்துகொள்ள இயவில்லை

அவன் இந்தியா வரும் ஒருவாரம் முன்பு காலையில் தீரன் நீ என்ன பெரிய ஹெக்கரா என்று கலாய்த்தலை லேசில் எடுத்துகொள்ள முடியவில்லை.

அன்றே பிராங் தீரனுடன் அவன் இந்தியா செல்வதற்கு ஒருவாரம் முன்பு இந்தியாவில் மேற்கொண்ட ப்ராஜெக்ட் செய்வதற்கு ஸ்பான்சர் செய்தவர்கள் சிலருடன் பிராங் வீட்டில் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தான் . அவர்களிடம் தங்களின் திட்டங்களை பற்றி விவரித்து தீரன் கூறிவிட்டு அந்த மீட்டிங் முடிவுற்றதும் மற்றவர்கள் வெளியேறினர் .

அவர்களுடன் இமாமியை மெயின் ஹாலில் அமரச்சொன்ன பிராங், தீரனிடம் நியூ பிஸ்னஸ் ஸ்பான்சர்கள் கொடுத்த நிதித்தொகைக்கு தனி அக்கவுன்ட் ஓபன் செய்ததை தீரனிடம் கூறியவன் இப்பொழுது வந்தவர்கள் ஸ்பான்சர் செய்த அமவுண்ட் தன் வங்கி அக்கவுண்டிற்கு டிரான்ஸ்சர் ஆகிவிட்டதா என்று பாப்போம் என்று கூறி பேங்க் அக்கவுண்ட்டை செக்செய்ய தனது நெட் பேங்க் அக்கவுன்ட்டை ஓபன் செய்தான்.

ஹாலில் அமர்ந்து இருந்த இமாமி தனக்கு பிராங்கிடம் இருந்து வாங்கிகொடுத்த அந்த ஐ போனை எடுத்து பிராங் வீட்டின் வொய்பைவில் ஏதேனும் அவனது கம்ப்யூட்டரில் இருந்த தகவலை ஹேக் செய்து அவனின் அபரிமிதமான ஹாக்கிங் திறமையை தீரன் சந்தேகிப்பதா? என்று டெம்ட் ஆன இம்மாமி, தீரனிடம் தன்னை புரூப் செய்வதற்காக அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான்.அந்த நேரம்

( வைஃபை மூலம் இணையத்தை வழங்குபவர் ஹேக்கராக இருந்தால், நம் லாக் ஃபைல்களை (log file) திருட வாய்ப்பு இருக்கிறது. இந்த லாக் ஃபைல்கள் இருந்தாலே, நம் போன் மூலம் என்ன செய்தோமோ, அதை நம் போன் இல்லாமலேயே ஹேக்கரால் செய்ய முடியும்.

, இன்று நமது செல்போனில் இருக்கும் நிதி சார்ந்த விவரங்களை மட்டும் ஹேக் செய்வதற்கும், நம் பணத்தை நம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடவும் முடியும்)

பிராங் அவனது வங்கி கணக்கை பாஸ்வேர்டு போட்டு ஓப்பன் செய்ததை ஹேக் செய்து அறிந்த இமாமி அவனது நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்கு முதலியவற்றை பிராங் இயக்குவதை தான் வைத்திருந்த போனிலேயே பாலோ செய்ய ஆரம்பித்தான் இம்மாமி.

பிராங் தீரனிடம் கூறினான், சொன்னதுபோல் ஸ்பான்சர்கள் என்னுடைய அக்கவுண்டிற்கு பணத்தை போட்டுவிட்டார்கள் தீரா! , இனி இந்த ப்ராஜெக்ட் செய்வதற்கு செலவழிக்கும் பணத்திற்கு பிரச்சனையில்லை என்று கூறியவன், சந்தோசத்துடன் தீரனுடன் சிலமணித்துளிகள் செலவழித்தான் பின் தீரன் பிரங்கிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் இமாமியுடன் காரை அடைந்து தங்களது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டான்.

கார் பிராங்கின் வீட்டை விட்டு சிறிதுதூரம் வந்த பின்பும் யோசனயுடம் இருந்த இமாமியை பார்த்த தீரன் என்ன இமாமி பலத்த யோசனை செய்துகொண்டிருகிறாய் என்று கேட்டான்

அதற்கு இமாமி கூறினான், பாஸ் சான்சே இல்லை எவ்வளவு பணம் ஒரு தீவை விலைக்கு வாங்குமளவு உள்ள உங்களின் நண்பரின் பணத்தை என்னால் என் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளும் சந்தர்பம் கிடைத்துள்ளது பாஸ். ஆனால் அப்படி செய்து நான் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை ஆனால் அவ்வளவு பணம் எதுக்கு பாஸ் அவரது கணக்கில் என்று பெயர்வாரியாக கூறி அவர்கள் கொடுத்தார்கள் என்று கேட்டான் இமாமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.