(Reading time: 22 - 44 minutes)

அவன் கூரியத்தை கேட்டு சாக் ஆன தீரன், ஏய் இமாமி! நீ வெளியில் தானே இருந்தாய்... அதுவும் நீ சொன்னதுபோல் டீடெய்ல்டாக என்னிடம் தீரன் கூட சொல்லவில்லை, உனக்கு எப்படி அவனது அக்கவுன்டில் ஸ்பான்சர்கள் போட்ட பணத்தை பெயர்வாரியாக போட்ட அமவுன்ட் முதல்கொண்டு சொல்லமுடிந்தது என்று கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த போனை தூக்கி காண்பித்த இமாமி, பாஸ் இந்த போனில் பிராங் சார் வீட்டு வோய்பை பாஸ்வேர்ட் ஆக்டிவ் ஆவதால் அவர்வீட்டில் அவர் வொய்பையில் செய்யும் அனைத்து வேலைகளையும் என்னால் கண்காணிக்கவும் அதை இயக்கவும் முடியும் மேலும் அவரது நெட்பேங்கிங் அக்கவ்ன்ட் பாஸ்வேர்ட், அக்கவ்ன்ட் நம்பர் ,மற்றும் ஐ.எப்.சி குறியீடு எல்லாம் இப்போ என் பாக்கெட்டில் அதை வைத்து அவரது வங்கி அக்கவுண்டை ஹேக் செய்து அந்த பணத்தை என்னால் திருட முடியும். ஆனால் என் கணக்கில் அதை டிரான்சர் செய்தால் பணம் திருடு போவதை உணர்ந்து பிராங் தோண்டி துருவினால் நான் மாட்டிகொள்வேன் ‘சோ’ அந்த தப்பை நான் செய்யமாட்டேன். பட் அந்த அக்கவ்ன்ட் பற்றி எந்த தகவலாவது உங்களுக்கு தேவைபட்டால் நான் அவரின் இந்த போனை யூஸ் செய்து என்னால் ,உங்களுக்கு கொடுக்கமுடியும் என்று கூறிய இமாமி பாஸ் இப்போதாவது நான் பெரிய ஹேக்கர் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என்று கேட்டான்.

அவனின் இந்த செயலில் வியந்துபோயிருந்த தீரன். எஸ்... இமாமி யு ஆர் தெ ஹேக்கர் கிங். என்றி கூறியிருந்ததை எல்லாம் இப்பொழுது நினைத்துப்பார்த்தான் தீரன் .

இதை வைத்து பிராங்கை மடக்க பிளான் போட்ட தீரன் இமாமியை பட்டன் போனில் தொடர்பு கொண்டான்.

இமாமி போனை அட்டன் செய்ததும், இம்மாமி உன்னால் பிராங்கின் பேங் அக்கவ்ண்டை ஹேக் செய்து பணத்தை வேறொரு அக்கவுண்டிற்கு டிரான்ஸ்சர் செய்ய முடியுமல்லவா? என்று கேட்டான்.

எஸ் பாஸ், ஐ கேன் டூ இட். பிராங்கின் அந்த அக்கவ்ண்டின் பணத்தை யார் வித்ரா செய்தார்கள் என்று பிராங் அறியாமல் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் மொபைல் பேங்கிங் டிரான்செக்சன் மூலம் பணத்தை திருடிக்கொள்ள என்னால் முடியும் .

இமாமி, நீ என்ன செய்ற அந்த அக்கவுன்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதனை இந்த ஒருவாரத்தில் எங்கிருந்தெல்லாம் அந்த அக்கவுண்டிற்கு பணம் வந்திருக்கிறது என்ற டீடைல்ஸ் எல்லாம் அவனின் அக்கவுன்ட் பாஸ்வேர்ட் மூலம் கேதர் செய்து வை. நான் சொல்லும் போது சொல்கின்ற அக்கவுண்டில் அந்த பணத்தை அவனது அக்கவுண்டில் இருந்து டிரான்ஸ்பர் செய்திடு என்று கூறினான்.

பாஸ் நான் சொல்வதுபோல் அந்த அக்கவுன்டில் இருந்து பணத்தை யார் எடுத்தார்கள் என்ற விஷயத்தை சாதாரண மனிதர்களால் கண்டுபிடிப்பது கடினம்தான்

ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ளவர்களை கூட தெரிந்துவைத்திருக்கும் பிராங் போன்ற ஆட்களால் முயற்சிசெய்தால் உலகத்தின் எந்த மூளையில் உள்ள அக்கவுன்ட் யார் கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்குது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினான்.

ஆமாம் இமாமி. நீ சொல்வதுபோல் பிராங் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்துகொண்டு ஆக்சன் எடுக்கத் தொடங்கும் இடைவெளிக் காலம் நம்மளுடயது. ப்ராங் என்னை அடக்கப்பார்கிறான் அதை அவனுக்கே குழிபறிப்பதற்கு சமானம். அவனுக்கு எனக்கும் இடையில் ஒரு தீர்க்கப்படாத கணக்கு இருக்கு இதன் மூலம் அந்த கணக்கை நான் நேராக்கிகொள்வேன் என்றான் தீரன். மேலும் இமாமிக்கு சில கட்டளைகளை பிரபித்தவன் தொடர்பை துண்டித்தான்.

தொடர்பை துண்டித்தவன் லேப்டாப்பை சட்டவுன் செய்து எடுத்து மீண்டும் தனது பேக்பேகினுள் வைத்தவன் தனது திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் செய்து எடுத்துகொண்டான். பின் ரூமிற்கு வந்த இரவு உணவை உண்டவன் . வேறு புதிய ட்ராக்சூட் மற்றும் டீசர்ட் போட்டுகொண்டு ரூமை உள்பக்கம் தாளிட்டான். ரூமின் பால்கனிக்கு வந்து சுற்றிலும் கூர்ந்து கவனித்தான். அங்கிருந்த இரவின் இருளை அங்கு போடப்பட்டிருந்த விளகுகளின் வெளிச்சம் விரட்ட முயன்றுகொண்டிருந்தது. அவனின் ரூமின் பால்கனியில் அருகில் மரத்தின் கிளை நீண்டு இருந்தது பேக்பேக்கை தனது தோள்களில் மாட்டியவன் பால்கணி சுவற்றில் ஏறி கையில் வைத்திருந்த கொக்கியுடன் கோர்த்திருந்த கயற்றின் நுனியை பிடித்தபடி கொக்கியை தூக்கி அடர்ந்திருந்த அந்த மரத்தின் மீது விட்டெறிந்தான்

அந்த கொக்கி அதன் பெரிய கிளையில் லாவகமாக மாட்டிகொண்டது அதன் கையிற்றை இழுத்துப்பார்த்தவன் பின் அதனை தன் இடுப்போடு சுற்றி நாட்போட்டுக் கொண்டான்.

அந்த கிளையை பிடித்து அதில் தொத்தி அந்த மரத்தின் கிளையின் வழியே சென்று கொக்கியயையும் எடுத்துகொண்டவன் மரத்தின் வழியே கீழிறங்கினான்.

அவனின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுசெய்திருந்த செக்யூரிட்டி டீம் அவன் ரூமிற்குள் இருப்பதாக நினைத்து உள்ளேயிருக்க அவன் ஹோட்டலைவிட்டு வெளியேறியிருந்தான்.

அவன் ஹோட்டல் இருந்த தெருவை கடந்ததும் கருப்புநிற வால்வோS60 காருடன் மாதவன் அவனுக்காக காத்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.