ஆதி மாதம் மாதம் எனக்குனு ஒரு தொகையை என் வங்கி கணக்கில போட்டுடுவான் சுசி.. நான் ஏதாவது செலவு பண்ணட்டும் என்று.. நான் என்னத்தை செலவு பன்றேன்... அந்த பணம் அப்படியேதான் தூங்கிட்டு இருக்கு.... “
"இருந்தாலும்…"
"இங்க பார் சுசி.. அவள் போக இருந்த என் உயிரை காப்பாற்றி கொண்டு வந்திருக்கா.. அவ செஞ்ச உதவித்து முன்னாடி இந்த பண உதவி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை...எவ்வளவு பணம் இருந்தும் என் ராம் உயிரை காப்பாற்ற முடியலையே... இந்த பொண்ணோட அப்பாவையாவது காப்பாற்றட்டும் இந்த பணம்..
நீ தயங்காம ஆபரேஷனுக்கு ரெடி பண்ணு... எவ்வளவு ஆனாலும் நான் தர்ரேன்...
ஆனால் ஒன்னு.. நான் தான் கொடுத்தேன் என்று அவளுக்கு தெரிய வேண்டாம்... தெரிந்தால் மனசு கஷ்ட படுவா... எங்கிட்ட அப்புறம் சரியா பேச மாட்டா.. "
“ஹ்ம்ம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் என்னை உங்க தங்கச்சினு சொன்னீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?? உங்க தங்கச்சி ஊர்ல வந்து இருந்துகிட்டு வெளில சாப்பிடுவீங்களா??..அதனால தினமும் மதியம் நானே சாப்பாடு எடுத்து வர்ரேன்.. எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்..பாரதி கூட பேசிகிட்டு இருக்கலாம் “ என்று அவர் வாயை அடைத்தார் ஜானகி