(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 01 - ஜெய்

Gayathri manthirathai

த்தாளை,  எங்கள் அபிராமவல்லியை,  அண்டம் எல்லாம்

பூத்தாளை,  மாதுளம் பூநிறத்தாளை,  புவிஅடங்காக்

காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும்,  கரும்பும்,  அங்கை

சேர்த்தாளை,  முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே”

தன் தேனினும் இனிய குரலில் அபிராமி அந்தாதி சொல்லி முடித்து கற்பூரம் காட்டிய காயத்ரியை சமையலறையிலிருந்து நோட்டம் விட்டார் அவள் அன்னை கற்பகம்... கற்பூரம் காட்டி முடித்து நமஸ்கரித்த காயத்ரி சோகமே உருவான முகத்துடன் வந்து ஹாலிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.... கடந்த ஒரு மாத காலமாக அவளின் இந்த சோக முகத்தையே பார்த்து கடுப்பு ஏறியிருந்த கற்பகம் கத்தியபடியே சமையல் உள்ளிலிருந்து வெளியில் வந்தார்....

“ஏண்டி காயத்ரி இப்படி இருக்க....  அவா அவா மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைக்காதான்னு அலையறா.... உனக்கு மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு... அதுவும் வேற ஊருக்கு கூட போகவேண்டாம்.... இங்க சென்னைலயே கிடைச்சிருக்கு.... நீ என்னடான்னா இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்க...”

“அம்மா அந்த காலேஜ் பத்தி ஒரு ஒருத்தரும் சொல்றதை கேக்கறச்ச பயமா இருக்கும்மா... இதுக்குத்தான் நான் வைஷ்னவாலையோ, மீனாக்ஷிலையோ ஹோம் சயின்ஸ் படிக்கறேன்னு சொன்னேன்... நீயும் அண்ணாவுமா சேர்ந்துதான் என்னை அதை எழுது இதை எழுதுன்னு படுத்தி எடுத்து இப்போ medicine சேர வச்சுட்டேள்.... நோக்கே தெரியும் நேக்கு எத்தனை பயந்த சுபாவம்ன்னு.... யாரோடையும் பேச மாட்டேன்... எதைக் கண்டாலும் பயந்துப்பேன்னு... என்னைப் போய் ரெண்டு பேருமா இப்படி டாக்டர்க்கு சேர்த்து விட்டுருக்கேளே.... அம்மா அங்க செத்தவாளெல்லாம் கொண்டு வந்து காட்டி கிளாஸ் எடுப்பாளாம்மா... என் friend சொன்னா... கேக்கறச்சையே நேக்கு தூக்கி வாரிப்போட்டது....”

“உன் friend உளறினா அதை நீ நம்புவியா... டாக்டர் தொழில் எத்தனை உன்னதமான தொழில் தெரியுமா காயத்ரி.... கடவுளுக்கு அடுத்து நாம கையெடுத்து கும்புடறது டாக்டர்களைப் பார்த்துத்தான்.... நானும் உன்னோட அண்ணாவும் எதுக்காக உன்னை இதுல சேர்த்தோம்... நம்மக்கிட்ட  காசில்லாம உங்கப்பாவை காப்பாத்த முடியாம போனா மாதிரி வேற யாரும் கஷ்டப்படக்கூடாது.... அந்த மாதிரி கஷ்டப்படறவாளா பார்த்து நீ ட்ரீட்மெண்ட் பண்ணனும்..... அதனாலதான்.... அதுவும் தவிர உனக்கு படிப்பு நன்னா வரும்... நீ எதைப் பண்ணினாலும் அதுல நூறு சதவிகித அர்பணிப்பு தன்மையோட பண்ணுவ... அதோட நோக்கு  பொறுமை ரொம்ப ஜாஸ்தி... இதெல்லாம்தான் ஒரு டாக்டர்க்கு வேணும்...”

“நீ சொல்றது புரியறதும்மா... ஆனாலும் பிறவி பயம் போக மாட்டேங்கறது.... அட்லீஸ்ட் நான் B.pharm சேர்ந்திருப்பேன்.... அப்படியே ஏதானும் மெடிக்கல் ஷாப்ல வேலைக்கு போய் இருக்கலாம்...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏண்டி +2-ல  1196/1200,  NEET எக்ஸாம்ல முதல் முப்பது பேர்ல ஒருத்தி இப்படி மார்க் வாங்கினவ பேசற பேச்சா இது....”

“அம்மா படிக்க கஷ்டப்பட்டுண்டா வேண்டாம்ன்னு சொல்றேன்.... படிக்கப் போற படிப்பும், போகப்போற காலேஜும்தான் பிரச்சனை.... சாதாரண டிகிரிக்கு girls college இருக்கறா மாதிரி medicineக்கும் வச்சிருக்கலாம்.... அட்லீஸ்ட் ஒரு பயம் இல்லாம இருந்து இருக்கும்.... இப்போ அங்க வர்ற பசங்க எப்படி இருப்பாளோன்னு அதுவேற பயமா இருக்கு...”

அம்மாவும் பெண்ணும் வழக்காடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் வீட்டு தொலைபேசி அழைத்தது.....

“அம்மா எப்படி இருக்க... காலேஜ் போக காயத்ரி ரெடி ஆயிட்டாளா....”

“எங்கடா ரகு... இன்னும் அதே பயமா இருக்கு பாட்டைத்தான் பாடிண்டு இருக்கா.... இரு அவக்கிட்டயே தரேன்.... நீயே பேசு....”

“சொல்லுண்ணா எப்படி இருக்க....”

“நன்னா இருக்கேண்டா... என்ன காயத்ரி இது... இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் தொறக்கறது... இன்னும் போ மாட்டேன்னு மொரண்டு பண்ணிண்டு இருக்க.... அவா அவா அந்த காலேஜ்ல சீட் கிடைக்காதான்னு அல்லாடறா... நோக்கு கிடைச்சதுக்கு சந்தோஷப்படாம இப்படி எங்களை படுத்தி எடுக்கற...”

“அண்ணா உனக்கு டாக்டர் தொழில் அத்தனை பிடிக்கும்ன்னா நீ படிக்கறதுதானே... நீயும்தானே +2 ல நல்ல மார்க் எடுத்த.... நீ மட்டும் டிகிரி படிச்சுட்டு உடனே வேலைக்கு சேர்ந்து கரெஸ்ல தானே மேல படிச்ச.... என்னையும் அதே மாதிரி படிக்க விடலாம் இல்லை...”

“நம்மாத்து நிலைமை தெரிஞ்சுண்டே இப்படி பேசறியே... அப்பா சடார்ன்னு நம்மளை விட்டு போனவுடனே யாரானும் ஒருத்தர் வேலைக்கு போயே ஆகவேண்டிய நிலைமை... அம்மாதான் பாவம் அக்கம் பக்கம் வீடுகள்ல சமைக்க போய் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு கொண்டுவந்தா... எத்தனை வருஷம் அம்மாவை அப்படி கஷ்டப்பட விட சொல்ற... அதுதான் உடனடியா எனக்கு வேலை கிடைக்கறா மாதிரி டிகிரி படிச்சேன்... ஆனா இப்போதான் நான் நன்னா சம்பாதிக்கறேனே.... அதனால எந்த கஷ்டமும் இல்லாம நீ படிக்கலாம்.... சரி கண்டபடி எதையானும் யோசிச்சு குழம்பாம காலேஜ்க்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் இருக்கான்னு பாரு... நான் நாளைக்கு கார்த்தால வரேன்... முதல் நாள் உன்னோட காலேஜ்க்கு வந்து உன்னை விட்டுட்டு வரேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.