(Reading time: 9 - 18 minutes)

"கார் ..மு..கி.. லன்" ஒரு சிறுவனின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே பெயரை உச்சரித்தாள்  நித்யா. "நான் நினைக்கிறது ரைட்டா ? இவனா அவன் ? அவன் இடது கன்னத்தில் இருந்த தழும்பை இப்போதும் கார்முகிலனின் முகத்தில் காண முடிந்ததோ ? ஏற்கனவே சாமி ஆடுறான் .. இனிமே அவன் விஷயத்துல எந்த முடிவா இருந்தாலும் ஆயிரம் தடவை யோசிச்சீட்டு தான் பண்ணனும் .. " என்று வாய்விட்டே சொன்னவளுக்கு அப்போதுதான் தன்னை அழைத்த குரலின் ஞாபகம் வர, "அச்சச்சோ " என்றபடி கீழிறங்கி சென்றாள் .

"அப்பா "

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"நித்யாம்மா " கட்டிலில் படித்திருந்தவாறு அவளை வாஞ்சையுடன் பார்த்தார் ரமணன் .

"அப்பா .. சாரிப்பா  " என்றவள் , அவரை சுவரில் சாய்வதற்கு ஏதுவாக அமர வைத்தாள் .

"ஏதும் பிரச்சனையா ? நான் கூப்பிட்டது கூட கேட்கலையேம்மா உனக்கு ?"

"அது ..அது .. என்னவோ யோசனையில் இருந்தேன் பா.. "

"என்ன ஆச்சு மா .. அப்பா கேட்குறேன்ல ?"

"ஒண்ணுமில்லப்பா.. என் பையில்ல ஒரு சர்டிபிகேட் காணோம் ..அதான் மேல இருக்கானு தேட போனேன் .."

"மேல வீட்டுல எப்படிடா இருக்கும் ?"

"என்னவோப்பா .. கொஞ்சம் பொருள் அங்க வெச்சப்போ அதுல வெச்சதா ஞாபகம் .."

"ஹ்ம்ம் தேடினது கிடைச்சதா ?"

"தெரியலப்பா "

"என்னது?"

"ஆங் ..தேடிட்டே இருந்தேனா ..உங்க ஞாபகம் வந்துருச்சு ..அதான் இறங்கி வந்துட்டேன் .. " என்றவளை ரமணன் சந்தேகமாய் பார்க்க ,

"சரி சரி .. போதும் என்னை லுக் விட்டது .. இன்னைக்கு என்ன சமைக்கட்டும் சொல்லுங்க "என்று பேச்சை மாற்றினாள் . இயல்பான பேச்சில் ரமணனையும்  இழுத்துக் கொண்டவளின்  மனதின் ஓரத்தில் மர்மமாய் சிரித்து கொண்டிருந்தான் கார்முகிலன் !

ற்றுமுன் ஆரம்பித்த மழை நின்ற பாடில்லை.. அந்த மழையில் உடல் விறைத்து விடுமோ என்ற பயமே இன்றி அப்படியே அமர்ந்திருந்தாள் பிரசன்னலீலா . ஏன்  ? அப்படினு அடுத்த பதிவில் சொல்லுறேன்

தொடரும்...

Episode # 08

Episode # 10

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.