(Reading time: 16 - 31 minutes)

அதைப் பார்க்கவே சாருமதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் முதுகில் மென்மையாகத் தட்டிக்கொடுத்தாள்.

“சரி. வா. அவங்களுக்கு டீ கொண்டு கொடுப்போம்.”

சாருமதி சமையல் அறைக்குள் நுழைய அவளும் பின்னேயே வந்தாள்.

“அக்கா. நீங்க இருங்க. நான் செய்யறேன்.”

“இல்லை கிருஷ்ணா. நானே போடறேன். நீ சும்மா என்கிட்டே பேசிக்கிட்டேயிரு.”

டீ போட்டு எடுத்து வந்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் கிளம்பினர்.

“உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்க அக்கா.”

“சரி.”

அவர்கள் காரில் ஏற கையாட்டி விடை கொடுத்தாள் சாருமதி.

கிருஷ்ணவேணிக்கு மிகவும் மகிழ்ச்சியே. எப்படியோ சாருமதி சந்தோசமாய் இருக்கிறாள்.

ஆரம்பத்தில் அவள் மகேந்திரனைத்தான் விரும்புவதாக நினைத்தாள். ஆனால் யுகேந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தையா வரப்போறான்னு தோணுது மாமா.”

அவள் சொல்ல அவரும் ஆமோதித்தார்.

பொன்னியும் அவளை அணைத்துக்கொண்டாள்.

“நீங்க கவலைப்படாதீங்கய்யா. நான் கிருஷ்ணாவை நல்லா கவனிச்சுக்கிறேன்.”

சொன்னதோடு மட்டுமல்லாமல் தன் பொண்ணைப் போல் கவனித்துக்கொண்டாள்.

நாட்கள் மெல்ல நகர்ந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.