(Reading time: 14 - 28 minutes)

“ஆமா, உங்க கஸ்டமர் கேர் விளம்பரம் எல்லாம் கேட்கனும்னு எனக்கு தலை எழுத்து இல்லை. இன்னும் ஒரு ஐந்து நிமிஷத்தில் எனக்கு திருப்பி கால் பண்றீங்க. இல்லைனா டிவி, சோசியல் மீடியா எல்லாத்திலும் போட்டு உங்க கம்பெனிய நாரடிச்சுடுவேன் பார்த்துக்கோங்க” என்று அவர் வைக்கவும், இங்கே மித்ரா நடுங்கி விட்டாள்.

முதலில் எல்லாம் சாதரணமாக தான் பேசினாள். அவர் டிவி, மீடியா எனவும் ஐயோ நம்மால் அத்தைக்கு, ராம் மாமாவிற்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயந்து விட்டாள்.

அவள் பார்க்கும் வேலைக்கும், இப்போது போனில் பேசியவர் சொன்ன வேலைக்கும் சம்பந்தம் கிடையாது என்பது கூட அவளுக்குத் தோன்றவில்லை.

ஐயோ ஐந்து நிமிடத்திற்குள் அவரிடம் பேசியாக வேண்டுமே என்ற டென்ஷனில் அவளுக்கு படபடப்பாய் வந்தது. கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து இருந்தது.

நல்ல வேளையாக அப்போது அந்த ரிசெப்ஷனிஸ்ட் வந்து, மித்ராவின் நிலைமையை பார்த்து விட்டு, மைதிலியை அழைத்து வந்தாள்.

வேறு யாரும் அங்கே இருக்கவில்லை. மித்ராவைப் பார்த்து விட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டும் எடுத்து வரப் பணித்து விட்டு, மித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

“மித்ரா, என்ன ஆச்சு? “ என்று கேட்டார் மைதிலி.

“அத்தை. எனக்கு பயமா இருக்கு. என்னாலே நம்ம கம்பனிக்கு கெட்ட பெயர்” என்று நடுக்கத்தோடு கூற, மைதிலி விழித்தாள்.

“என்ன சொல்ற?

“இல்லை ஒருத்தர் போன் பண்ணி, அவர் கிட்டே ஒத்துகிட்டதை நாம செய்யலையாம். அதனால் மீடியாலே எல்லாம் நம்மள பத்தி தப்பு தப்பா சொல்லிடுவாராம்.”

“யார் அது? என்ன விவரம்?”

நேற்று அவர் விசாரித்ததைக் கூறிவிட்டு, இன்றைக்கு அவர் சொல்லியதையும் சொன்னார்.

“ஹேய்.  இதிலே நீ என்ன செய்த?

அவள் சொல்லும்போதே அந்த ரிசெப்ஷனிஸ்ட் விவரங்களை குறித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரிவின் மானேஜரை பிடித்தாள்.

“நான்தானே அத்தை போன் அட்டென்ட் செய்தேன். அப்போ என்னால் தானே பிரச்சினை”

“மித்ரா, இங்கே பார். நீ போன் அட்டென்ட் பண்ணி சம்பந்தப்பட்ட ஆபீசர்ஸ் கிட்டே கொடுத்துட்ட இல்லியா? இனிமே அதுக்கு அவங்க தான் பொறுப்பு. உன் வேலை அந்த கஸ்டமர் எப்போ போன் செய்தாலும், அவர் கிட்டே கொடுக்கிறது தான். “

“ஆனால் ..” என்று குழம்பியவள்  மீண்டும் “இதுவரைக்கும் இப்படி நடந்து இல்லைதானே. இப்போ நான் வந்தவுடனே இந்த மாதிரி நடந்து இருக்கே. ஏதாவது ஆச்சுன்னா, எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கும் அத்தை.”

“அது எல்லாம் ஒன்னும் ஆகாது. இந்த தண்ணிய குடி. இங்கியே உட்காரு. நான் என்ன செய்யறேன்னு பாரு” என்று மைதிலி கூற, சற்றுக் கலக்கத்துடனே என்றாலும் சொன்னதை செய்தாள் மித்ரா.

“ரமா, அந்த கஸ்டமருக்கு அடித்து பேசிக் கொண்டு இரு. நான் சொல்லும் போது என்னிடம் கொடு” என்று கூறியவள், அங்கே வந்த பிளானிங் ஆபீசரிடம்,

“என்னாச்சு சார்? கஸ்டமர் எத்தனை மணிக்கு எவென்ட் அரேஞ்ச்மென்ட்டிற்கு சொல்லி இருந்தார்?

“சார் ஆறு மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்கணும்னு சொன்னார்?

“என்னிக்கு பேசினார்?

“நேற்றைக்கு தான் மேடம்.”

“நேற்று சொல்லி இன்று செய்ய முடியுமா? எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?

“இல்லை மேடம். அவர் கேட்டரிங் ஏதோ ஹோடேலில் ஏற்பாடு செய்து விட்டாராம். இன்டீரியர் வொர்க் மட்டுமே. அதற்கும் நம் ஆட்கள் கிளம்பி விட்டார்களே?

“பின்னே ஏன் இன்னும் வரவில்லைன்னு கம்ப்ளைன்ட் செய்கிறார்?

“ஒரு நிமிஷம் செக் செய்யறேன்” என்று அவர் செல்லில் பேசி விட்டு,

“மேடம் , அவர் கொடுத்த அட்ரஸ்சில் உள்ள கெஸ்ட் ஹௌஸ் வாட்ச்மன் உள்ளேயே விடவில்லையாம். இங்கே எதுவும் நிகழ்ச்சி இல்லை என்று கூறுகிறாராம்?

“அட்ரஸ் சரிதானா?

“எஸ் மேடம். அவர் மெயில் அனுப்பிய அட்ரஸ். “ என்று காட்டவும், அத்தனை நேரம் அந்த ரமா கஸ்டமரிடம் சமாளித்துக் கொண்டு இருந்தவளிடம் போனை வாங்கி,

“வணக்கம் சார், நான் இந்த நிறுவனத்தின் ஒன் ஒப் தி டைரக்டர் மைதிலி பேசறேன்” எனவும்,

எதிரில் பேசியவர் சற்று நிதானமானர்.

“வணக்கம் மேடம். என்ன உங்க சர்வீஸ் பற்றி வெளியில் பெரிசா சொல்றாங்களேன்னு உங்க கிட்டே ஏற்பாடு செய்தேன். இப்படி சொதப்பராங்களே”

“ஒரு நிமிஷம் சார். எங்க பெர்சொன்ஸ் உங்க கெஸ்ட் ஹௌஸ் போயி இருபது நிமிஷம் ஆச்சு. உங்க வாட்ச்மன் தான் உள்ளே விடமாட்டேங்குராராம்”

“என்ன சொல்றீங்க மேடம்? நான் கெஸ்ட் ஹௌஸ்லே தான் இருக்கேன்.”

“நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க?”

அவர் கூறவும் , மைதிலி “எங்க ரெப்ஸ் பெசன்ட் நகர்லே போயிருக்காங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.