(Reading time: 14 - 28 minutes)

“வாட்? நான் கெட் டு நீலாங்கரையில் இல்லை வர சொல்லிருக்கேன்?”

“உங்க மெயில் செக் பண்ணுங்க சார். அதில் பெசன்ட் நகர் அட்ரஸ் தான் கொடுத்து இருக்கீங்க” என்று கூறவும், அவர் செக் செய்து விட்டு, ஒத்துக் கொண்டார்.

“பாருங்க சார். எடுத்த உடனே இப்படி தடாலடியா பேசாமல், கொஞ்சம் விவரம் கேட்ருந்தா, இவ்ளோ தாமதம் ஆகிருக்காது இல்லியா? அட்லீஸ்ட் எங்களை பேசவாவது விடுங்க. இப்போ எங்க பெர்சொன்ஸ், உங்க நீலாங்கரை கெஸ்ட் ஹௌஸ்க்கு போயிடுவாங்க. ஆனால் உங்க சார்ஜஸ் அதிகம் போடுவோம் சார். ப்ளீஸ் எங்களை தப்பா நினைக்காதீங்க” என்று கூற,

“ஓகே மேடம். கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க” என்று வைத்து விட்டார்.

அவர்கள் பேசியதைப் பார்த்துக் கொண்டு இருந்த மித்ராவிற்கு, இப்போது தான் கொஞ்சம் தைரியம் வந்தது.

ரிசெப்ஷனை ரமாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, மித்ராவோடு வீட்டிற்குக் கிளம்பினாள் மைதிலி.

வீட்டிற்கு வரும் வரையில் எதுவும் பேசவில்லை. அவளின் நடுக்கம் இன்னுமே தெரியவே, மைதிலி

“மித்ரா, எதுவும் நினைக்காமே, போய் ரெஸ்ட் எடு” என்று அனுப்ப, அவளும் சரி என்று தலையாட்டி விட்டு, வாசல் பக்கம் போனாள்.

மித்ராவின் பழக்கங்களில் இது ஒன்று. அவள் மிகவும் நெர்வஸ்சாக இருந்தால் , ஒன்றை செய்ய சொன்னால், வேறு ஒன்றை செய்வாள். அவளுக்கேத் தெரியாது. அவளை உணர்ந்து கொண்ட மைதிலி,

“மித்ரா, மாடியில் உன் அறைக்கு போ” என்று கூறி, அவள் பின்னாடியே சென்று அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு கீழே இறங்கினார்.

ஒரு மணி நேரம் சென்ற பின் சற்றுத் தெளிந்த மித்ரா, தான் இருக்கும் இடத்தை உணர்ந்து கொண்டாள்

தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவள், முதலில் ஷ்யாமிற்கு அழைக்க, அவன் ஜெர்மன் ப்ராஜெக்ட் விஷயமாக மெஷின்ஸ் வேலை செய்யும் இடத்தில் இருப்பதாகக் கூறினாள் அவன் பி.ஏ.

தன் தாய்க்கு அழைத்து, அன்றைக்கு நடந்தைக் கூறியவள், அத்தை தன்னை தவறாக நினைப்பார்களோ என்று பயத்தோடு கேட்டாள்.

அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது என்று தைரியம் கூறினாள்.

ஆனாலும் பெண்ணைப் பெற்றவராக சபரிக்குக் கொஞ்சம் கவலையாகவே இருக்க, தன் அண்ணனுக்கு பேச நினைத்தவள், அதைக் கை விட்டு ஷ்யாமிற்கே பேசினாள்.

அப்போதுதான் தன் ஆபீஸ் அறைக்கு வந்து இருந்த ஷ்யாம், அத்தையின் நம்பர் வரவே, இந்த நேரத்தில் அழைக்கிறாரே என்று அவரிடம் பேசினான்.

அவரும் வேறு ஒன்று கேட்கவில்லை. மித்ரா அலுவலகம் எல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும். அவளால் அதை சமாளிக்க முடியவில்லை என்று அழுவதாகக் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டதும் , அவனுக்கு மிகவும் வருத்தமும், கோபமும் கலந்து இருந்தது.

இதனை தன்னிடத்திலே கூறி இருக்கலாமே. ஏன் அத்தையிடம் கூறினாள் என்று கோபம் வந்தது. இத்தனை நாள் எதுவானாலும் தன்னிடம் பகிர்ந்தவள், இப்போது அவள் அம்மாவிடம் போகிறாளே. என்னிடம் இருந்து விலகுகிறாளா? அல்லது பயப்படுகிறாளா? என்ற சிந்தனை ஏற்பட்டது.

அவன் இருந்த யோசனையில் அவனின் பி.ஏ சொன்னதை கவனிக்கவே இல்லை.

மைதிலி கூறியபடி சற்று ரெஸ்ட் எடுத்ததோடு, தன் அம்மாவிடமும் பேசியதில் தெளிந்து இருந்த மித்ரா, மாலையில் வழக்கம் போல் எல்லோருடும் பேச கீழே இறங்கி வந்தாள்.

அவளோடு சேர்ந்து நடந்த மைதிலி

“என்னடா? இப்போ பரவாயில்லையா?

“ஓகே அத்தை. சாரி. என்னாலே தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம்”

“இது எல்லாம் ஒன்னும் இல்லை. கஸ்டமர்ஸ் அப்படிதான் இருப்பாங்க. அவங்க சத்தம் போடும்போது நாம எதிர்த்து பேசக் கூடாது. அதே சமயம் பயப்படவும் கூடாது. நம்ம பயத்தைப் பார்த்தா அவங்க சத்தம் இன்னும் அதிகம் ஆகும். “

“ஆனால் இந்த சின்ன விஷயம் கூட எனக்கு தெரியவே இல்லையே?

“இது எல்லாம் தானா தெரிய வரும் மித்ரா. கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம் சரியா?” என, அவளும் தலை ஆட்டினாள்.

எல்லோரும் ஹாலில் கூடி இருக்க, அப்போது தான் ஷ்யாம் வந்தான். அவனைப் பார்த்து சிரித்தவள், தன் பேச்சை சுமியோடு தொடர்ந்து கொண்டு இருந்தாள்.

அவன் மேலே தன் அறைக்கு செல்லப் போகவும், மைதிலி

“ஷ்யாம், காபி, டிபன் சாப்பிட்டு போயேன்? என்று கூறினார்.

“இல்லைமா. ஆபீசெலேயே முடிச்சுட்டேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. அதைப் பார்க்கப் போறேன்”

என்று விட்டு மாடி ஏறிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.