(Reading time: 14 - 28 minutes)

மேலும் பேசிக் கொண்டு இருக்கும் போது, மைதிலியிடம்

“அத்தை , உங்ககிட்டே ஒன்னு கேட்கலாமா?

“கேளுமா”

“இல்லை. நீங்க ஏன் முதலில் என்னை வரவேற்பு பணியில் போட்ருக்கீங்க?

“அந்த வேலையைப் பற்றி நீ தெரிஞ்சிக்கணும்னு தான்”

“இப்படிக் கேக்கறேன்னு நினைக்காதீங்க. அவரவர் படிப்பு, திறமை அடிப்படையில் தானே அவங்கவளுக்கு வேலை கொடுப்பாங்க?

“நிச்சயமா. ஆனால் நம்ம நிறுவனம் நிகழ்ச்சி மேலாண்மை செய்வது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கும். ஒருவேளை கடைசி நேரம் யாராவது வர முடியாமல் போய்விட்டால் , அங்கே பொறுப்பேற்க நம் நிறுவனத்தில் இருந்து தயாராக இருக்கவேண்டும் அல்லவா? இப்போ உதாரணத்திற்கு நாம ஏற்பாடு செய்த அழகு கலை நிபுணர் வர முடியாமல் போய் விட்டால், நம் ரிசெப்ஷனிஸ்ட் அங்கே செல்வாள். அவள் அழகு கலை பயின்று இருக்கிறாள். அவள் அந்த இடத்திற்கு சென்று விட்டால், ஆபீஸ்சில் அந்த வேலையை பார்க்க என்று யாரையாவது வர சொல்ல முடியுமா? அந்த நேரம் யார் ப்ரீயாக இருக்கிறார்களோ அவர்கள் பிரன்ட் ஆபீஸ் பார்த்துக் கொள்வார்கள். அதனால் தான் ஒவ்வொரு பிரிவிலும் எல்லோருமே சிறய அளவில் பயிற்சி இருக்க வேண்டும் என்பது நம் நிறுவன கொள்கை.”

“அது சரிதான் அத்தை. எல்லா வேலையும் என்றால்,  ஒருவேளை சமையல்காரர் வரவில்லை என்றால் அதையும் நம்ம ஸ்டாப் செய்வார்களா அத்தை? . சற்றுக் கவலை + கலவரத்துடன் கேட்டாள் மைதிலி.

சுமித்ரா “ஆமாம் மத்து. நம்ம காண்ட்ராக்ட் எல்லாமே குறைந்தது ஆயிரம் பேருக்காவது சமைப்பது தான். அப்போ சமையல்காரர் வரவில்லை என்றால் அத்தனை பேரையும் பட்டினியாகவா அனுப்ப முடியும். நாம் தான் அண்டாவை ஏற்றி இறக்கி எல்லாம் செய்யவேண்டும்” என்று கூற,

 “ஹேய்.. என்னை என்ன ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சியா?” என்று மித்ரா சுமியிடம் கேட்டாள்.

“பின்னே என்ன கேள்விடி? நீயும் , அம்மாவும் போய் கிட்சேன்லே நிப்பீங்களா?

“நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. அதோடு சமையல்காரர் எல்லாம் நிறைய பேர் ஏற்பாடு செய்து இருப்பார்கள் என்று தெரியும். அதிலும் ஸ்பெஷல் டிஷ்க்கு தனி ஆள் என்றும் தெரியும். அதில் ஒருவர் வரவில்லை என்றால், சமைக்கத் தெரிந்தவர் தானே அங்கே போக வேண்டும். அதற்காக கேட்டேன்”

“நீ கேட்டது சரிதான் மித்ரா. அப்படி நேரங்களில் நம்முடைய சூப்பர்வைசர் நமக்குத் தகவல் கொடுத்தால் நாம வேறு ஏற்பாடு செய்து தருவோம். அல்லது கஸ்டமரிடம் பேசி மெனுவில் சேஞ் செய்ய ஏற்பாடு செய்வோம்.”

“அதற்கு கஸ்டமர் ஒத்துக் கொள்வார்களா அத்தை”

“பேசி தான் கன்வின்ஸ் செய்ய வேண்டும் மித்ரா. ஒரு சில இடங்களில் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ளாதவர்களுக்கு  வேறு மாதிரி, விலை குறைத்தோ அல்லது வேறு டிஷ் அதிகமாக சேர்த்து போட்டோ கன்வின்ஸ் செய்வோம்.”

“இதில் இவ்வளவு இருக்கிறதா அத்தை”

“நீ ஆபீஸ் வர வர இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம். “ என்று கூறினார் மைதிலி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சற்று நேரத்தில் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றிட, மித்ராவும் தங்கள் அறைக்குச் சென்றாள்.

அங்கே ஷ்யாம் அவன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருக்கவும், அவன் அருகில் சென்று

“அத்தான்” என்று அழைக்க, அவனோ

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மித்ரா. அப்புறம் பேசு” என்று விட்டான். அதை சொல்லும் போது அவன் மித்ராவின் முகம் கூட பார்க்கவில்லை.

மித்ராவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இதுவரை ஷ்யாம் இப்படி இருந்தது இல்லை. இவள் அருகில் வந்தால், போனில் பேசிக் கொண்டு இருந்தால் கூட நிறுத்திவிட்டு இவளிடம் என்ன என்று கேட்பான். இன்றைக்கு ஏன் இப்படி என்று திகைத்தாள்.

அவன் கூறியதைக் கேட்டவளுக்கு, தனிமையில் இருப்பது போல் தோன்ற, தன் வின்னியை தூக்கி கொண்டு வந்து அவர்கள் அறைக்கு பொதுவாக இருக்கும் சோபாவில் அமர்ந்தாள்.

அதனை மடியில் வைத்துக் கொண்டு, அதன் காதை திருகி ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

அவளை அப்புறம் பேசு என்று கூறி அனுப்பி விட்டாலும், ஷ்யாமின் கவனம் பூராவும் அவளிடம் இருக்கவே, அவள் வின்னியை தூக்கி வந்தது தெரிந்தது.

திருமணம் முடிந்து முதல் இரண்டு நாட்கள் தவிர, மித்ரா வின்னியை தேடவில்லை. அதிலும் ஷ்யாம் இருக்கும் போது அதன் அருகிலேயே செல்லவில்லை என்பதை புரிந்து கொண்டு இருந்தான்.

இப்போது அதை எடுக்கவும் ஷ்யாமிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. ச்சே. நாம் அவளிடம் ஒழுங்காக பேசி இருந்து இருக்காலாமோ என்று தோன்றியது.

ஏன் அத்தான் நான் உங்களிடம் பேச வேண்டும் என்று உரிமையாக பேச மாட்டாளாமா? என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

இங்கே மித்ராவோ அத்தானின் இந்த கோபத்திற்கு காரணம் ஒருவேளை மதியம் ஆபீஸ்சில் நடந்ததை யாரும் சொல்லி இருப்பார்களோ? தன்னால் தான் இத்தனை கஷ்டம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றியது.

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.