(Reading time: 11 - 22 minutes)

“என்ன நிதின் அமைதியாயிட்ட..??”

“ஒன்னும் இல்லை தரண்.. இந்த நியூஸ் கேள்விப்பட்டு நீ சுதாரிப்பா நடந்துப்பேன்னு சொல்லுவீன்னு நினைத்தேன்..”, சுதாரிப்புடன் அவன் கூற..

உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் என்பதாய் பார்த்திருந்த தரணுக்குள் இவன் எதையாவது செய்வான் என்ற எண்ணம் மனதிற்குள்..

லாவண்யாவுடன் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..

மாலை வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் தரண்..

“தரண்யன்.. ஒருநிமிஷம்.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”, சைக்கிள் எடுத்துக் கொண்டிருந்தவனை இடைமறித்திருந்தாள் லாவண்யா..

“சொல்லு லாவண்யா..”, வெகு இயல்பாக அவளிடம் கேட்டிருந்தான் தரண்யன்..

“நான் ஸ்கூல் எஸ்பிஎல் போஸ்ட்க்கு நிற்கறேன்.. தெரியுமா உனக்கு..??”

“தெரியுமே..”, இன்னும் சாதரணமாக..

“என்னிடம் நீ சண்டைப் போடுவான்னு நினைத்திருந்தேன் நான்..”, இவளும் வெகு இயல்பாகக் கேட்க சிரித்த தரண்யன், “எதற்கு..??”, என்று கேட்டான்..

“உனக்கு எதிரா நான் நிற்கறதுக்கு..”

“இதுல என்ன லாவண்யா இருக்கு.. உனக்கு எஸ்பிஎல் ஆகணும்னு ஆசை.. நீ நிற்கற.. தட்ஸ் ஆல்..”

தன்னுடன் இவன் சண்டையிடுவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க இவன் செய்கையெல்லாம் இவளுக்கு வெகு அதிசமாக..

இவன் இவ்ளோ மெட்ச்சுவர்டா என்ற சிறு வியப்பும்..

“அ வெரி பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் தரண்யன்.. உன்கிட்ட நான் இதை சுத்தமாக் எதிர்பார்க்கவில்லை..” என்றவள், “நிதின் உன்கிட்ட ஏதாவது சொன்னானா..??”, என்று கேட்டாள்..

“ஹ்ம்.. சொன்னான்.. எனக்கு எதிரா நீ நிற்கப்போவதாய் சொன்னான்..”

“என்கிட்டயும் சொன்னான்.. அவன் பேச்சு ரொம்ப வித்யாசமா இருந்துச்சு தரண்யன்.. அவன் என்னை உனக்கு எதிரா டர்ன் பண்ணிவிடுவது போல் பேசினான்.. அவனுக்கு நீ இந்த போஸ்ட்டில் நிற்பது பிடிக்கவில்லை போல.. அது அவன் பேச்சிலே தெரிகிறது.. கொஞ்சம் அவனிடம் கேர்புல்லா இருந்துக்கோ..”

“எஸ்.. தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் லாவண்யா.. நீயும் கொஞ்சம் கேர் புல்லா இரு.. அவனை நம்ப முடியாது..”, என்று அவளையும் எச்சரித்தவன் வருகிறேன் என்பதாய் தலையசைப்புடன் விடைப்பெற்றான்..

இருவரின் எண்ணப்படியே நிதினின் போக்கு சரியில்லாலதாகவே இருந்தது..

தரண்யனுக்கு எதிராக லாவண்யாவிடமும் லாவண்யாவிற்கு எதிராக தரணிடமும் நிதின் ஏற்றிவிட என எஸ்பிஎல் எலெக்ஷன் வரை சிறு சிறு குளறுபடிகள் செய்துகொண்டிருந்தான் நிதின்..

நிதினின் பேச்சுக்களை தரண்யனும் லாவண்யாவும் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றபொழுதும்.. இருவருக்கும் சப்போர்ட்டாக இருந்தவர்கள் மற்றவர்களின் மீது சிறு கோபத்தை வளர்த்துக்கொண்டனர்..

அதன் பலனாக சிறு சிறு மோதல்கள் இருக்குழுக்குள்ளும் நிகழ அதைத் தடுப்பதே பெறும் வேலையாகிப்போனது லாவண்யாவிற்கும் தரணுக்கும்..

எப்படியோ தட்டிமுட்டி எலெக்ஷன் இனிதே நடந்து முடிந்திருந்தது..

தரண்யன் லாவண்யாவைவிட முப்பத்தி ஐந்து ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெய்த்துவிட.. தரண்யன் எஸ்பிஎல்லாகவும் லாவண்யா ஏஎஸ்பிஎல்லாகவும் நியமிக்கப்பட்டனர்..

இந்த எலெக்ஷனால் ஏற்பட்ட ஒரே நல்ல விஷயம்.. தரண்யனும் லாவண்யாவும் நண்பர்களானது..

தனது திட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக.. தாங்கிக்கொள்ளவே முடியவில்லை நிதினால்..

நரி போலவே அடுத்த தாக்குதலுக்கு ரெடியாகத் துவங்கியிருந்தான் அவன்..

லெக்ஷனுக்குப் பிறகு இப்பொழுதெல்லாம் லாவண்யாவின் நண்பர்களும் தரணின் நண்பர்களும் ஒன்றாக இருந்தனர்..

இரு குழுக்குள்ளும் ஒரு அழாகான நட்பு பிறந்திருந்தது..

எப்பொழுதும் ஒன்றாக சுற்றுவது.. ஒன்றாக வேலை செய்வதென நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்காத குறைதான்..

“நாளைக்கு உனக்கு பிறந்தாளாமே..??”, தரண்யன் கேட்க சிரித்த லாவண்யா, “பிரியாணி வேனுமா உனக்கு..??”, கண்ணடித்தாள்..

“நண்பி லாவி நீ..”, என்று சிரித்தவன், “மறக்காம கொண்டுவா என்ன.. உங்க அம்மா சூப்பரா சமைக்கறாங்க..”, சப்புக்கொட்டியபடியே..

“தின்னிமாடு..”, அவன் தலையில் தட்டியவள், “கொண்டு வரேன் டா.. கொண்டு வரேன்..”, என்றாள் சிரித்தபடி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.