(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - தாரிகை - 08 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : தூங்கா நகரம் மதுரை..

ம்மா..எனக்கு காலேஜில் சீட்கிடைத்துவிட்டது..”, முகம் முழுதும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க மழலையாய் தனது அன்னையைக் கட்டிக்கொண்டாள் சமுத்திரா..

மகளது சந்தோஷத்தில் தனது மனமும் ஒருவகை நிம்மதியைத் தத்தெடுத்துக்கொள்ள வார்த்தைகள் இன்றி தவித்தவர், “எனக்கும் இப்பொழுதுதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கறது..”, என்றவர் சற்றே இடைவெளிவிட்டு, “நீ நினைத்த காலேஜில் கிடைத்துவிட்டதல்லவா..??”, என்று தயக்கத்துடன் அவர் கேட்க மௌனம் காத்தாள் சமுத்திரா..

“என்னடாம்மா கிடைக்கவில்லையா..??”

“எப்படீம்மா கிடைக்கும்..?? அங்க அதர்ஜென்டர்க்கு சீட் இருக்குன்னு போட்டிருந்தாலும் எங்களுக்கெல்லாம் சீட் கொடுக்கமாட்டாங்க.. சும்மா அப்ளிகேஷன் வாங்க போனப்பவே ரொம்ப தீண்டதகாதவங்க மாதிரி என்னை ட்ரீட் பண்ணாங்கம்மா அவங்க.. சோ கவலைப்படாதீங்கம்மா.. அங்க கிடைக்காத வரைக்கும் சந்தோஷம்னு விட்டுத்தள்ளுங்க..”, விரக்தியாக புன்னகைத்தபடி..

“நம்ம வேணும்னா யார்கிட்டயாவது சிபாரிசு பிடிச்சு அந்த காலேஜில் சேர்த்துவிட முடியுமான்னு கேட்கலாமா..??”

“வேண்டாம்மா.. எனக்கு இப்போ இந்த காலேஜில் கிடைச்சிருக்க சீட்டே போதும்.. என்னால் மேனேஜ் செஞ்சுக்க முடியும்..”

அவள் நினைத்த கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்று அவள் சொல்லும்பொழுது மனது கஷ்ட்டப்பட்டாலும் அவளது பேச்சில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவராக, “இப்போ எந்த காலேஜில் உனக்கு சீட் கிடைச்சிருக்கு சமூ..??”, என்று கேட்டார் கேள்வியாக மகளின் துக்கத்தை முழுங்கிக்கொண்டு..

“*********** காலேஜ்.. இங்கிருந்து பக்கம்தான்.. பத்து பதினைந்து நிமிஷம்.. அதனால்பரவாயில்லை..”

வழக்கம்போலவே கல்லூரியிலும் பலவித பார்வைகள் சமுவைத் தொடரத்தான் செய்தன..

இப்பொழுதும் அதையெல்லாம் உதரித்தள்ளி கடந்து செல்பவளுக்கு தன்னுடன் படிப்பவர்களின் பார்வையை ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது..

இவர்களைப்போல நாமும் இங்கு படிக்கத்தானே வந்திருக்கிறோம்..

பிறகு ஏன் இப்படிப் பார்க்கிறார்கள் என்னை..??

வெளிவட்டாரங்கள் என்னை ஒருமாதிரி பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என்னைப்பற்றி ஒன்றும் தெரியாது..

என்னுடன் யாரும் பழகவில்லை..

இவர்கள் அப்படி இல்லையே.. ஒருவருடமாக் நான் இவர்களுடன் அல்லவா பயில்கிறேன்.. இன்னும் என்னை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா..??

வெளியாட்கள் எல்லாம் படிக்காதவர்கள்.. அதனால் என்னை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைத்திருக்க இங்கிருக்கும் படித்தவர்களும் என்னை புரிந்துகொள்ளவில்லையே..

மாணவர்கள் தான் அப்படி என்றால் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் கூடவா..??

தங்களிடம் படிக்கும் ஒரு மானவி என்று அவர்கள் என்னைப் பார்க்கலாம் அல்லவா..??

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதற்கு கூட தகுதி இல்லையா எனக்கு..??

படிப்பவர்களுக்கு கொஞ்சம் மெட்ச்யூரிட்டி இருக்கும் அல்லவா..??

அந்த மெட்ச்யூரிட்டி என்னைக் கண்டு மட்டும் ஒளிந்துகொள்கிறதோ மற்றவர்களிடம்..??

யாரிடமாவது ஏன் தன்னை இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்க ஆசை எழுந்தது அவளுக்கு..

அந்த கேள்வி கேட்க அவள் காத்துக்கொண்டிருந்தாள் என்றே சொல்லவேண்டும்..

ஒருதடவை தன்னுடன் பயிலும் சில நபர்களிடம் கேட்டும் விட்டாள் அதை..

அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில்தான் உவப்பாக இல்லை..

“நீங்க எல்லாரும் எங்க போனாலும் காசு கேட்கறீங்க.. கொடுக்கலீன்னா சாபம் விடறீங்க.. உங்களைப் பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு..”, என்று ஒருத்தி சொல்ல..

“நீங்க தப்பானவிஷயம் எல்லாம் பண்ணூவீங்களாமே.. அப்போ எப்படி உங்க்ககூட எல்லாம் பேசறது..??”, வேறொருவர் சொல்ல..

ஒரு பெண்ணிடம் சமுத்திரா பேசப் போக அவள் தெறித்து ஓட..

“சேரியில் வசிக்கும் உங்களிடம் எனக்கு பேசவிருப்பம் இல்லை..”, என்று மற்றொருவர் கூற ஏன் கேட்டோம் என்று வெறுத்துப்போனது சமுவிற்கு..

தீவிர சிந்தனைக்குத் தள்ளப்பட்டாள் அவள்..

மூன்று நாள் லீவிற்கு வந்த மொழியிடம் கல்லூரியில் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லியவள், “ஏன் மொழி இப்படி..?? திருநங்கைகளின் அந்த பிம்பத்தை மாற்ற நினைக்கிறேன் நான்.. ஆனால் இங்குள்ளவர்கள் அதையே திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள்..”, என்று புலம்பினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.