(Reading time: 11 - 22 minutes)

“அதற்கு காரணம் திருநங்கைகள் இப்பொழுது இருக்கும் நிலையே.. நமக்கு இங்கு சமூகத்தில் இடம் இல்லை.. அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.. அதை நாம்மாற்ற வேண்டும்.. அந்த மாற்றத்தால் மட்டுமே நம்முடைய மதிப்பு உயரும் இந்தச் சமூகத்தில்.. ஆனால் நீ நினைப்பதுபோல் ஒரு திருநங்கை படித்திருந்தால் அவளது நிலை சமூகத்தில் உயரும் என்பது தவறு.. நாம் என்னதான் படித்திருந்தாலும் நம் சமூகம் நம் நிலையைப் புரிந்துகொள்ளாது.. நம்மை அது வித்யாசமாக ஒரு ஆச்சர்யமாகப் பார்க்கும்.. ஆனால் அங்கீகாரம்..?? கேள்விக்குறியே.. காரணம்.. நமது செயல்கள்.. நாம் நம்மைப் பற்றி அவர்களிடம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நம் பிம்பம்..”

“ஏன் மொழி அந்தக்காலத்தில் எல்லாம் நம் நிலை இப்படி இல்லையே.. இடையில் அது எப்படி இப்படி மாறிப் போனது..??”

“அந்தக் காலத்தில் நம் நிலை முழுவதும் வேறு.. மக்களோடு மக்களாக கலந்திருந்தோம்.. கல்வி பயில்விக்கப்பட்டது.. நாட்டியம், சமையல், அரசுக்கு உளவு வேலைகள் பார்ப்பது என நமக்கு அத்தனை அதிகாரங்கலும் சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது.. ஆனால் அதெல்லாம் 1700 வரை மட்டுமே.. அதுவரை நம் நிலை நன்றாகத்தான் இருந்தது.. அதற்கு பின் ஏன் மாறியது..?? எப்படி மாறியது என்பதெற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை சமூ.. ஆனால் ஒன்றுமட்டும்.. இப்பொழுதும் காலம் தாழ்ந்து போகவில்லை.. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து முயற்சிசெய்தால் இன்றைய நம்நிலை நிச்சயமாகமாறும்.. அதற்கான முதல்படியை எடுத்துவைப்போம் நாம்.. நீ கவலைப்படாதே..”, மொழி ஆறுதல் கூற சமுவால் அப்பொழுதுதான் சிந்திக்கவே முடிந்தது..

தான் படித்து முடித்தபின் தன் சமூகத்தினரை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லவேண்டும் என்ற உத்வேகமும்..

“கண்டிப்பாக மாற்ற வேண்டும் மொழி.. எல்லாவற்றையும்..”, என்ற சமுவின் குரலில் அத்தனை தீவிரம்..

முடியுமா சமுவால்..??

த்தாம் வகுப்பை நல்லமதிப்பெண்களுடன் முடித்த இறுமாப்பில் சந்தோஷமாகச் சுற்றிக்கொண்டிருந்தான் தரண்யன்..

புதிது புதிதாக நண்பர்கள் கிடைக்க ஆர்ப்பாட்டமாய் சென்றுகொண்டிருந்தது அவன் வாழ்வு..

ஆசிரியர் அன்று வராததால் தரண்யனின் வகுப்பு அல்லோல்பட்டுக் கொண்டிருந்தது அன்று..

ஒருபக்கமிருந்து மறுபக்கம் பேப்பர் விமானங்கள் பறக்க மழலைகளாகி விளையாடிக்கொண்டிருந்தனர் அனைவரும்..

“தரண்.. நம்ம மாத்ஸ் மிஸ்ஸை இமிட்டேட் பண்ணேன்..”, மாணவர்களுக்கிடையில் ஒருவன் கேட்க தனது கணக்கு டீச்சரைப் போலவே செய்துகாட்டினான் அவன்..

அவனது அழிச்சாட்டியத்தில் வகுப்பறையில் விசில் பறக்க அலங்கோலமாகமாறியது வகுப்பறை..

சத்தம் காதை அடைக்க அதுதாங்காது பக்கத்து வகுப்பு ஆசிரியர் இவர்களுக்குப் பனிஷ்மென்ட்டாக தலைமை ஆசிரியரின் அறையின் முன்பு அனைவரையும் நிறுத்தினார்..

இதனால் மாணவிகளிடையே சலசலப்பு..

அந்த வகுப்பின் துடுக்கான மாணவி லாவண்யா, “நீங்க விளையாடிட்டு இருந்ததுக்கு எங்களுக்கும் சேர்த்திப் பனிஷ்மென்ட்டா..??”, கொதிப்பாக கேட்டிருந்தாள் பொதுவாக..

கொஞ்சம் சத்தமாக..

சுறுக்கென தைத்தது தரணுக்கு..

“நாங்க மட்டும்தான் சத்தம் போட்டோமா லாவண்யா..?? நீங்க எல்லோரும் தான் சத்தமா பேசி சிரிச்சுட்டு இருந்தீங்க..??”, தரண் எதிர் கேள்வி கேட்க..

அன்றிலிருந்து முட்டி மோதத் துவங்கினர் இருவரும்..

இருவரும் எப்பொழுதும் இருதுருவங்களே அப்பொழுது முதல்..

எதற்கும்போட்டி.. அனைத்திலும்போட்டி..

எப்பொழுதும் சண்டை போட்டுக்கொள்ளத் துவங்கினர் இருவரும்..

“தரண்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஸ்கூல் பீப்பிள் லீடர் போஸ்ட்டுக்கு உனக்கு எதிரா லாவண்யா நிற்கிறாளாம்..”, என்றான் நிதின்..

அன்று தரண்யன் அடித்திருந்த அதே நிதின்தான்..

இருவரும் இவ்வருடமும் ஒரே வகுப்பு..

இருவருக்கும் பெரிதாக நட்பு இல்லையென்றபொழுதும்.. பகையொன்றும் இல்லாமல் இருந்தது..

பகையில்லாத்தது போல் காட்டிக்கொண்டிருந்தனர் இருவரும்..

“ஓ.. அப்படியா..??”, சாதரண செய்திபோலவே தான் சொல்லும் செய்தியைக் கேட்ட தரணைக் கண்டதும் தனது திட்டமெல்லாம் தவிடுபொடியானது போல் உணர்ந்தான் நிதின்..

ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாவில்லை அவன்..

“நான் இவ்ளோ பெரிய நியூஸ் சொல்லியிருக்கேன்.. நீ ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க..??”

“என்ன ரியாக்ஷன் கொடுக்கனும் நிதின்..??”, கூர்மையாக தரண் கேட்க தடுமாறியிருந்தான் நிதின்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.