Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியின் அன்றைய இரவு உறக்கமில்லாமல்  கழிந்தது. விடியும் வேளையில் அயர்ந்துபோய் உறங்கியபோது வைசாக்கின் இறப்பு கனவாக வந்து தூக்கத்தை கலைத்தது.  தோட்டத்தில் நட்டு வைத்த ரோஜா செடி வாடிப்போனாலே தாங்கிக் கொள்ள முடியாத அவளுடைய மெல்லிய மனம் இந்த நினைவுகளை தாங்க முடியாமல் தளர்ந்து போனது.

மிடிமையும் அச்சமும்  மனம் சம்பந்தப்பட்ட உணர்வுகள். ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பின்விளைவுகளை ஆராயாமல் ஒரு தவறிழைத்துவிட்டு  அதன் பாதிப்பை  உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்ல முடியாத  துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த நெஞ்சம் படும் வேதனை சொல்ல முடியாது.

அதிலும் தன்னுடைய  செயல் தவறு என்று புரிந்து எண்ணித் தவித்து அதனால் மேலும் ஏதாவது துன்பம் விளையுமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டால் 'ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல அமைதியிழந்து அலைகழித்துவிடும்.  இதனைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் என்று சொல்வது.

அன்றைக்கு நடந்த அந்த சம்பவம் ஒரு கனவுபோல கலைந்து போக வேண்டும் என்று அவள் விரும்பினாலும்,  கனவு காணும் நிலையில் இருந்து அவளை யார் எழுப்ப முடியும்?

“சதா… எழுந்து வா… நாம் தோட்டத்தில் ஒரு வாக்கிங் போய்வரலாம்” பானுமதி அத்தை எழுப்பினார்.

“இல்லை அத்தை எனக்கு வெளியே வரவே பிடிக்கவில்லை”

“இப்படியே இருந்தால் எதுவும் சரியாகி விடாதும்மா… எந்த பிரச்சினையையும் எதிர் நோக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்”

“------“

“ நீ பயப்படும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. அந்த தற்கொலைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று போலீஸ் விசாரித்து பதிவு செய்து விட்டார்கள். அவனுடைய அம்மாகூட உன்மேல் எந்த தவறும் இல்லை என்று ஒப்புக் கொண்டார்களாம்”

“பொய் அத்தை… அப்பா ஏதாவது செய்து அப்படி சொல்ல வைத்திருப்பார். ஐஜி அல்லவா?”

“அந்தம்மா கலெக்டராம். ஐஜிக்கெல்லாம் பயப்படனும்னு இல்லையே. அவங்க கம்ப்ளெய்ண்ட் செய்தால் கேஸ் பதிவாகி இருக்குமே. ஆனால் உன் மீது எந்த தவறும் இல்லை… அவருடைய மகன் அதாவது அந்த வைசாக்தான் எமோஷனாலாக இப்படி செய்து விட்டான் என்று சொன்னார்கள். புரிகிறதா?”

அவள் நம்பாத பார்வை பார்க்கவும்,

“ம்… உன் அப்பா, உனக்காக இது போன்ற செயல்களை செய்வாரா என்ன? அவர் எவ்வளவு நேர்மையானவர் என்று தெரியுமல்லவா?. அவருடைய  நேர்மையினால்தானே உன் அம்மாவை இழந்தார். அண்ணி இறந்தபோது நீ சிறு குழந்தை. உன்னை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டோம் தெரியுமா?”

“தெரியும் அத்தை! அப்பாவிற்கு என்னைபற்றிய கவலையே வராமல் நீங்களும் மாமாவும்தான் என்னை வளர்த்தீர்கள். அ…த்தை… மாமாவிற்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?”

“தெரியும் தெரியும்… அவர் என்ன சொல்வார்… மிலிட்டரிகாரர்… உயிரோட வேல்யூ, குடும்பத்தின் அருமை தெரியாத ஒரு முட்டாள்தான் இப்படி செய்வான்… என்று சொன்னார். சதாவை இதையெல்லாம் விட்டு விலகி இருக்கனும்னு சொன்னார். போதுமா?” என்றவர் தொடர்ந்து,

“அவனுக்கு அம்மா அண்ணன்மீது பாசம் இருந்திருந்தால் இப்படி செய்வானா? பிடிக்கலைன்னா போடின்னு சொல்லிட்டு போயிருக்கலாம்… அந்தம்மா பாவம்… அவனை அப்படி செல்லமா வளர்த்தாங்களாம்”

“என்னால நம்பவே முடியவில்லை அத்தை. அவங்க இடத்தில் யாராக இருந்தாலும் என் மீது கோபப்பட்டு பழி போட்டிருப்பார்கள். என்னை பற்றி அவ்வளவாக தெரிந்து கொண்டிராத மீடியாகூட எப்படி செய்திகளை போட்டிருக்கிறார்கள் பாருங்கள்”

 “அதையெல்லாம் நீ ஏன் படிக்கனும்… அந்தம்மா உண்மையை சொல்லி இருக்காங்க. அவங்க  நேர்மையாக இருக்கறவங்கன்னு தோணுது. சரி… சட்டப்படி ஒரு சிக்கலும் இல்லை.. நீதான் அந்த சம்பவத்தை மறந்துட்டு இயல்பாக மாறனும்”

“என்னால் முடியல அத்தை. கண்ணை மூடினாலே அந்த காட்சிதான் வருது. என்னை கொலைகாரியாக்கிட்டு நிமிசத்துல செத்து போயிட்டான்…” என்று அழ ஆரம்பித்தாள்.

“இப்படி நினைப்பது உனக்கு நல்லதல்ல சதா செல்லம். எனக்கு வேதனையாக இருக்கிறது. உன் அம்மாவிற்கு நான் தந்த வாக்கை காப்பாற்றாமல் போய் விட்டேனோ என்ற பயம் வருகிறது”

“அப்படி கிடையாது அத்தை. நீங்கள் என்னை ஒழுக்கமாகத்தான் வளர்த்தீர்கள் நான்தான் கொஞ்சம் சுதந்திர உணர்வுடன் நடந்து தவறு செய்து விட்டேன். “

“என்னுடைய சதா தைரியமானவள் என்று நினைத்தேனே. உன்னை ஐபிஎஸ் ஆக்கணும்னு அண்ணா சொல்லிக் கொண்டே இருந்தார். இப்படி எல்லாம் மனம் தளர கூடாது”

“என்னோட அந்த முட்டாள்தனமான தைரியம்தான் இப்படி சிக்கல்ல மாட்டி விட்டிருச்சு. என்னால ஒரு உயிர் போயிடுச்சு.  நேத்துவரைக்கு இருந்தவன் இன்னிக்கு இல்லாமல் போயிட்டான்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்AdharvJo 2018-10-05 21:33
So indha cover pic la indha female figure oda state oru alavukku vilangidichi but adhu thaa fact-n therindhu kola wil read the coming updates. Yaro oru loose-n ninaithu ignore seiradhu oru cat na namalala ena pana mudiyumn ignore seivathu inoru group....ippadi nanga ignorant irukkamal ena pananumn solli kodukura group la ninga irukinga I welcome your views and ready to learn new things Ms Sagampari :yes: Adhukkun teacher aga maridadhinga unga humor miss panamaten :no: :D Interesting kick off first epi laye oru suicide idhu interesting ah-n ketkuringalo :P Viji aunty sadha-va console pana varuvadhu superb :hatsoff: wonder if ppl would be like this. Sadha oda anxiety-i romha elegant aga depict seithu irukinga ini ena agumn therindhu kola waiting. :hatsoff: to u, for choosing this theme. THank you and :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-09-15 16:49
Good update (y)
Sadha alatti kolvathaga solluvorku kutra unarvai patri theriyamal irukka vayppundu. Avargalukku ellame easy go aga irukkum. Ningal kurippittathu pol Siddhargal pullirunthu, kal, mann, visham, metal nu ellathaiyum maruntha payanpaduthi irukkanga.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்saaru 2018-09-12 17:23
Arpudam sagambari
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-09-12 11:34
வித்தியாசமான தொடர்..... :clap: :clap:
மனித மனங்களை பயிலும் தொடராக அமையும் என எனக்கு தோன்றுகிறது...
உங்க ஒவ்வோரு கதையும் தனித்துமா இருக்கு...
ஒவ்வோன்னும் ஒவ்வோரு வகை...
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்madhumathi9 2018-09-11 20:05
wow mam :clap: :clap: :clap: ippadipatta information ellaam kodukkirathukku big big :thnkx: mam.intha maruthuva muraiyai patritherinthu kolla miga aavalaa kaathu kondu irukkirom. :GL: mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்Indhusri 2018-09-11 19:40
Nice update mam, waiting to read more.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top