தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 06 - அஸ்ரிதா ஸ்ரீ

ஹாய் சரவனன்.
வாங்க டா .ட்ராவல் எப்படி இருந்தது.
பைன் டா.
ஹாய் கெவின்.
எஸ் சரவணன்.
ஹொவ் இஸ் இந்தியா மேன்.
நைஸ் கண்ட்ரி.
வேலவா இது என்னோட பிரண்ட்ஸ்.
பிரண்ட்ஸ் இது என் தம்பி என்று அறிமுகம் செய்தான்.
வேலவனுக்கு பூரித்து போனது. சஹிஷா வின் அத்தை மகனாக அறிமுகம் செய்யவேண்டியவனை தம்பியாக அறிமுகம் செய்ததால். ஷக்தி என்ன நினைப்பானோ நேற்று வந்தவன் தன் அண்ணனை உரிமை கொண்டாட பிடிக்காதோ என்று பலவாறு யோசித்தான்.
ஹாய் அண்ணா நான் ஷக்தி வேலவனுக்கு எல்டெர் பிரதர் என்று தோளில் கை போட்டான்.சரவணனுக்கு பூரித்தது இந்த முறை அண்ணன் வீட்டு உறவுகளை அவன் உறவாக்கியதால் அவன் சகோதரனை புரிந்து கொண்டதால்.
சரவணன் வீட்டில் இருந்து அனைவரும் வர ஆரம்பமானது சஹியின் நிச்சயதார்த்தம்.கண்கவர் வண்ண மலர்கள் அந்த வீட்டு சுவற்றின் சித்திரமாகின. மனதை கொள்ளையிட்டு போகும் பின்னணி இசை.மழலைகளின் சிரிப்புகளும் கொலுசொலியும் கிண்கிணி நாதம் போல் ஒலித்தன.வீட்டில் இருக்கும் பெரியவர்களின் மனதில் மணமக்களை பற்றிய பிராத்தனைகள் குடி ஏறின.அழகான சாண்டல் சேர்வானியில் அட்டகாசமாய் அமர்ந்திருந்தான் சஹியின் சரி பாதி.அவனை மயக்கம் கொள்ள செய்வதற்காகவே மெரூன் நிற காஞ்சி பட்டில் சர்வ அலங்கார பூஷிதையாக வந்து அமர்ந்தாள் சரணின் மறு பாதி.
நிச்சய பத்திரிகை படிக்கட்டுமா என்று ஐயர் கேட்க படிங்க சாமி என்று மித்ரன் கூற நிகழும் மங்களகரமான
ஹஹஹன் ஹஹஹஹன்
இது தான இது தான எதிர் பார்த்த
அந்நாளும் இது தான
இவன் தான இவன் தானா மலர் சூட்டும்
மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள்
நினைவாக உனதானேன்
நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் ..
சஹி சஹீஈஈஈ ஏ லூசு என்று அவள் தோழி சீதா உலுக்க தன்னிலை பெற்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.என்ன டி கனவா.கொஞ்சம் நினைவுக்கும் வா.
சரவணன் அவன் நண்பர்களோடு சிரித்து பேசி கொண்டிருந்தான்.இதை கவனித்த சஹியின் நண்பர்கள் அவளை இழுத்து கொண்டு சென்றனர்.
என்ன சரவணன் சார் சஹியை விட்டுட்டு உங்க பிரண்ட்ஸ் கூட்டத்தோடு சேர்ந்துட்டீங்க. அண்ணா இவள் உங்களை பாத்து சைட் அடித்தாள் நான் பார்த்துட்டேன் என்று சவி சஹியை தர்ம சங்கடத்தில் தள்ளி விட்டாள்.
அய்யோ பொய் சொல்றா நான் பாக்கலை.
நண்புங்க அண்ணா உண்மை என்று நண்பர்கள் கோரஸ் பாடினர். இப்படி அன்பு தங்கைகள் சொல்லும் போது நம்பித்தானே ஆகணும் என்று இழுத்தான் சரவணன்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
பியூட்டிபுல் கர்ல்ஸ் என்று அவனின் வெளிநாட்டு நண்பன் கவின் வந்து சேர்ந்து கொண்டான். டியூட் பங்சன் கோஷ்டியும்(costume) ல உங்க நாட்டு பொண்ணுங்க சூப்பரா இருக்காங்க.
எங்கள் பெண்கள் ஒவ்வொரு நிமிஷமும் அழகு தான்.
தத்தி தத்தி நடந்து தந்தையின் காலை பிடித்து
அப்பா தூக்கு னு சொல்லும் போதும்.
அழகா அம்மாபின்னி விட்ட
ரெட்டை சடையில் பாக்கும் போதும்.
வயசுல அம்மாவுக்கு உதவி செய்யும் போதும்.
தம்பி தங்கச்சியோட சண்டை போடும் போதும்.
அண்ணனை சீண்டி விளையாடும் போதும்.
தன்னோட தோழனுக்கு தோழியாய்
தோள் குடுக்கும் போதும்
.புகுந்த வீட்டு மனுஷங்களை
புரிஞ்சு நடக்கும் போதும்.
கணவனோடு சேர்ந்து குடும்ப பாரம்
தாங்கும் போதும்.
தாய்மை உணர்வில் பூரிக்கும் போதும்