(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 08 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

தீரன் ஹோட்டலுக்குள் நுழையும்போது ரிசப்சனில் இருந்த பெண் தீரனின் பாதுகாப்புக்கு நியமித்த டீம் ஹெட்டுடன் ஏதோ பேசுவதையும் அதனை தொடர்ந்து அந்த பெண் கையில் சாவிகொத்துடன் அவனுடன் செல்வதையும் பார்த்த தீரன், அவர்கள் இருவரின் பின்னேயே சென்றான் அவர்கள் அவனின் ரூம் கதவை தட்டிவிட்டு பதில் இல்லாததால் அதை திறந்த நொடி அவர்களின் முன் சென்று நின்று, வாட் தெ ஹெல் யூ ஆர். எப்படி நீங்க என் அனுமதியில்லாமல் நான் தங்கியிருக்கும் ரூமை ஓபன் செய்யல்லாம் என்று கர்ஜித்தான்.

தீரன் காரை விட்டு இறங்கும்போது தொப்பி மற்றும் கண்ணாடியால் தன்னை பார்த்ததும் அடையாளம் தெரியாதவிதமாக மறைத்து இருந்தான். மேலும் தனது பேக்பேக்கை முதுகில் சுமந்த படி நீண்ட நாள் பழகிய இடம் போல விருவிருவென உள்ளே நுழைந்தான் .

அவனை பாதுக்காக சி என் ஜி போட்டிருந்த காவல் படையில் உள்ள சிலர் நின்றிருந்த பகுதியை தவிர்த்து, மாற்றுவழியில் உள்ளே நுழைந்தான்.

அதன் பின்பே அவனின் அறையை ரிசப்சனிஸ்ட் ஓபன் செய்ததும் திடீர் என்று தீரன் அங்கே பிரசன்னமானதுபோல் நின்றான்.

தீரனை பார்த்ததும் சார் என்று சல்யூட் அடித்த பாதுகாப்பு துறையின் ஹெட், சாரி... சார், டைம் மார்னிங் நைன் ஓ கிளாக் மேல ஆகியும் நீங்க ரூம் விட்டு வராததால் தட்டி பார்த்தோம், ரெஸ்பான்ஸ் இல்லையென்றதும் உங்களுக்கு எதுவும் உள்ளே ஆபத்தோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.எனவே ரிசப்சனில் சொல்லி மாற்றுச்சாவி போட்டு நீங்க சேப்பாக இருகிறீர்களா? என பார்பதற்கு கதவை ஓபன் செய்தோம் என்றான்.

நான் உள்ளே இருந்தால்தானே! டோரை நாக் செய்யும்போது ரெஸ்பான்ஸ் செய்ய முடியும். நான் காலையில் 6’ஓ கிளாக் ஜாகிங் போய் முடித்துவிட்டு, கொஞ்சம் பக்கத்தில் சுற்றிவிட்டு வந்தேன் என்றான்.

தீரன் கூறியதை அவன் நம்பவில்லை என்பதை அவனின் முக பாவனையிலேயே உணர்ந்து கொண்டான் .

ஆனால் என்னிடம் நீ கேள்வி கேட்டுவிடுவாயா? என்று தீரனின் மிரட்டும் பார்வையிலேயே தனது சந்தேகத்தை தனக்குள்ளேயே அவன் புதைத்துக்கொண்டான்.

சாரி..... சார், இனி அலார்ட்டா இருப்போம் என்று கூறியபடி அவன் ஒரு எட்டு பின் எடுத்துவைத்து ஸ்டான்டர்டீசில் நின்று கொண்டான் தீரன் அந்த ரிசப்சனிஸ்டிடம்,கோபமாக “வுட் யூ திங் ஆப் தெ ட்ரூத்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வித்அவுட் எக்ஸாம்னீங் அதர்ஸ்?. இப் ஐ டெல் யூ திஸ் டு யுவர் ஹோட்டல் அட்மினிஸ்டிரேசன், யூ வில் பீ பணிஸ்ட் “ என்று கண்ணில் கோபம் தெரிக்க கூறினான்..

அந்த ரிசப்சனிஸ்ட் அவனின் கோபம் கண்டு பயத்துடன் சார் ப்ளீஸ் டோன்ட் கம்ப்ளைன்ட் மீ. இவர்கள் பேசியததை ட்ரூத் என்று நினைத்து அவசரப்பட்டுவிட்டேன் இனிமேல் இதுபோன்ற தவறை நான் செய்யமாட்டேன் என்று கூறினாள்.

அவன் ஓகே என்னும் விதமாக தலையை அசைத்தும் ஆசுவாசம் அடைந்த அந்த பெண் தாங்க்ஸ் எ லாட் சார். ஹேவ் எ கிரேட் டே என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அவள் போனதும் உள்ளே சென்று டோரை லாக் செய்துகொண்டான் தீரன்.

உள்ளே வந்தவன் வேகவேகமாக தான் அங்கே விட்டு போயிருந்த தனது ஐ போனை எடுத்து சுவிட்ச் ஆன் செய்தான்.

அவன் ஆன் செய்த மறுநிமிடம் பிராங்கிடம் இருந்து அழைப்பு வந்தது அவன் அதை காதில் வைத்த மறுநிமிடம். வேர் டிட் யூ கோ? வாட் ஹவ் யூ புட் ஆப் யுவர் போன்? தீரா நீ நினைக்கிறமாதிரி நடந்துக்க இது ஒன்றும் சாதாரண ப்ராஜெக்ட் கிடையாது என்று கூறினான் பிராங்.

மேலும் இப்போ நான் ஒரு உண்மையை சொல்கிறேன் கேட்டுக்கோ. இந்த ப்ராஜெக்டை சக்சஸ் புல்லா முடிக்க ஸ்பான்சர் செய்தவர்களில் முக்கியமானவரை பற்றி நான் இன்னும் உனக்கு கூறவில்லை அது....அமெரிக்க பிஸ்னஸ் உலகின் டெவில்... மிஸ்டர் மார்க் ரூபன்ஸ் என்றான்.

அவன் கூறிய மறுநிமிடம் தீரன் மனதிற்குள் தான் நெருப்புடன் விளையாட ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தான். இருந்தபோதிலும் தேங்க்ஸ் பிரான்ஸ் இப்போவாவது உனக்கு என்னிடம் இதை தெரிவிக்கணும் என்று நினைத்தாயே ! .

நீ என்னை இந்தியா அனுப்புவதற்கு முன்பே யோசித்திருக்கணும் என் உடன் சிறுவதில் இருந்து பழகும் உனக்கு தெரிந்திருக்கனும் இந்த தீரனுக்கு ஆபத்துக்களுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்கும் என்பது.

இதில் எனக்கொன்றும் ரிஸ்க் இல்லை பிராங், (மனதிற்குள் அந்த டெவில் மார்க் ரூபன்சை உனக்கு எதிராக திருப்பிவிடுகிறேன் பார் என்று கூறிக்கொண்டான் ) நான் ஏற்றுவந்த ப்ராஜெக்ட்டை நல்ல முறையில் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எனக்கான நேரத்தை நீ மட்டுமல்ல அந்த பிஸ்னஸ் டெவில் மார்க் ரூபன்ஸ்ஸை கூட தொட்டுபார்க்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.