Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கௌவுதமிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெண்ணிலா அவுட்கவுஸ்க்கு ஓடிவந்துவிட்டாள். அவுட்கவுஸின் ஹாலில் அமர்ந்த பின்புதான் இயல்பாய் மூச்சுவிட முடிந்தது அவளாள்.

'கௌவுதம் காதலிப்பது தனக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்' என்று திரும்ப திரும்ப யோசித்து தலை வலிப்பது போலத் தோன்றியது வெண்ணிலாவிற்கு.

வெண்ணிலா கௌவுதமின் வீட்டிற்கு வரும்போது அவளுக்கு ஐந்து வயது.  அச்சிறு வயதில் தாயை இழந்த அவளுக்கு கௌவுதமின் அம்மா நிர்மலாவின் அன்பும் பாசமும் வரமாக கிடைத்தது.  வெண்ணிலா நிர்மலாவிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள்.  பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அவள் நிர்மலாவுடனும் கௌவுதமுடனும் தான் இருப்பாள்.  நிர்மலாவின் இழப்பு கௌவுதமை எந்த அளவுக்கு பாதித்ததோ அதே அளவு வெண்ணிலாவையும் பாதித்தது. 

அச்சிறு வயதில் என்ன செய்வது என்று தெரியாவிட்டாலும் இனி நிர்மலா இருந்தால் கௌவுதமிற்கு என்னவெல்லாம் செய்வாரோ அதில் பாதியாவது தான் செய்யவேண்டும் என்று வெண்ணிலாவிற்கு அப்போதே தோன்றிவிட்டது.  அவள் வளர வளர அந்த எண்ணமும் வழுபெற்றுக் கொண்டேதான் வந்தது.  கௌவுதமின் அப்பா இறந்த பிறகு எஸ்டேட் பொறுப்பு முழுவதும் அவன் வெண்ணிலாவிடம் கொடுத்துவிட்டான்.  வெண்ணிலா சூட்டிகையான பெண் என்பதால் கௌவுதம் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் உடனே புரிந்துகொண்டு இன்றுவரை ஒரு குறைகூட கூறமுடியாத அளவிற்கு அதை நன்றாக பார்த்துக்கொள்கிறாள்.

எஸ்டேட் ஆபிஸையும் சரி கௌவுதமின் ஊட்டி பங்களாவையும் சரி அவனுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைத்தாள்.  அவன் ஊட்டிக்கு வரும்போதுதெல்லாம் டயினிங் டேபிளில் அவனுக்கு பிடித்த மெனு இருக்குமாறு பார்த்துக்கொண்டாள். 

அவள் பிறந்தநாளை அவள் அப்பா இருந்த வரை கொண்டாடியதோடு சரி அதற்கு பிறகு அவள் தனது பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை.  ஆனால் கௌவுதமின் பிறந்தநளைக் கொண்டாட மறந்ததே இல்லை.  அவன் இங்கு இருந்தாலும் சரி சென்னையில் இருந்தாலும் சரி அவன் பிறந்தநாளன்று வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் பரிசு கொடுத்து அனாதை ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு கௌவுதமின் பெயரில் விருந்து கொடுப்பாள்.  இவையனைத்தையும் அவள் கௌவுதம் அவளுக்கென்று கொடுக்கும் சம்பளத்தில்தான் செய்வாள்.  எஸ்டேட் பணத்திலிருந்து இதுவரைக்கும் ஒரு பைசாகூட எடுத்தது கிடையாது.

வெண்ணிலா தன்னுடைய மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் புரிந்தது 'ஆக என்னோட இத்தன வருச வாழ்கையும் கௌவுதமை சுற்றி மட்டும்தான் இயங்கிக்கிட்டு இருந்திருக்கு. அப்படினா...... நான் கௌவுதம காதலிக்கிறேனா'

வெண்ணிலா கௌவுதமை காதலிப்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டாள்.  அவள் காதலை உணர்ந்தம் அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

"வெண்ஸ் நான் கௌவுதம காதலிக்குறேன்.  ஐ லவ் ஹூம் வெண்ஸ்" என்று கண்ணாடி முன் நின்று கைகள் இரண்டையும் கோர்த்து கண்ணகளில் காதல் பொங்க சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஏய் வெண்ணிலா உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா ஏன்டி இப்பிடி அக்கப்போர் பண்ணிட்டிருக்க" என்றது வெண்ஸ்.

"போ வெண்ஸ் காதல் வானத்தில் சிறகடித்து பறக்கும் என்னை டிஸ்டர்ப் செய்யாதே"

"நீ மட்டும்தான்டி அவன நினைச்சு பறந்துட்டு இருக்க.  அங்க அவன் வேற யார்கூடவோல்லடி பறந்துட்டு இருக்கான்"

வெண்ணிலாவின் சிரிப்பு மொத்தமும் பறந்துபோய் அவள் தொப்பென்று ஸோபாவில் அமர்ந்தாள்.

"ஆமால நான் மட்டுந்தான் கௌவுதம லவ் பண்றேன் ஆனா அவன் என்ன லவ் பண்ணலல்ல" என்று சொல்லும்போதே குரல் கம்மியது கண்களிலிருந்து பொலபொலவென கண்ணிர் வடிந்தது.

"வெண்ணிலா எதுக்கு இப்போ கண்ணுல இருந்து வாட்டர் பால்ஸ்ஸ திறந்துவிடுற"

"என் காதலுக்கு ஆயுள்காலம் ரொம்ப குறைவுல வெண்ஸ்.  எனக்கே இன்னைக்குத்தான் நான் கௌவுதம காதலிக்குறது தெரிஞ்சது ஆனா அதுக்குல்ல பாரு அந்தக் காதல் நிறைவேறாதுனு தெரிஞ்சுபோச்சு"

"நீ ஏன் நிறைவேறாதுனு நீயா முடிவு பண்ணிக்குற கௌவுதம் தான அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லியிருக்கான் இன்னும் அந்தப் பொண்ணு பதில் சொல்லலைல"

"இல்ல வெண்ஸ் கௌவுதம் ரொம்ப பாவம் அவனுக்கு அவன் ஆசப்பட்ட வாழ்க்கை கிடைக்கட்டும்.  அவனுக்கு எதுவும் நெகட்டிவ்வா நடக்கக்கூடாது"

"ஓஓ....  சரி லீவிட் "

"நான் கௌவுதம காதலிக்குறதே தப்புதான் இல்லையா வெண்ஸ்"

"வெண்ணிலா நீ என்ன ரொம்ப கடுப்பேத்துற. நீ ஏன் கண்டதையும் நினைச்சு மனச குழப்பிக்கிற.  இந்த நிமிசம் நீ கௌவுதம காதலிக்குற அது மட்டும்தான் நிஜம்.  நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.  இந்த நிமிசத்த நல்லா ஆழ்ந்து அனுபவி.  நீ யார் குடியையும் கெடுக்கல.  யாருக்கு எந்த கெட்டதும் செய்யல.  கௌவுதம்கிட்ட உன் காதலை சொன்னா தப்பா நினைப்பான்னு நீ நினனச்சேனா அவன் கிட்ட சொல்லாத.  இது உன் காதல் இத முழுக்க முழுக்க உணர்ந்து அனுபவிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.  என்ன புரிஞ்சதா"

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Meenu Jeeva

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாsaaru 2018-09-12 17:30
Vens ha ah cute meenu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-09-15 12:43
Ha...ha...thank u
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாTamilthendral 2018-09-11 23:48
Good episode (y)
Vennila avanga kadhal-i therinjukkittanga aana Gowtham Enna seyya poraru :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-09-15 12:44
:grin: wait and watch frd
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாmadhumathi9 2018-09-11 19:18
:clap: nice epi.vensoda manam vaadaamal mithra kaappaatrapovathai ninaithaal magizhchi alikkirathu.waiting to read more. (y) :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-09-15 12:45
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாSrivi 2018-09-11 05:36
Cute update..venila manasatchi vennsa. Sweet.. mithra reaction ennava irukkum? Like vennila, will she be loving Pranav?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-09-11 10:10
Thank u frd :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top