(Reading time: 23 - 46 minutes)

கணவன் இல்லாத அழகிய சுந்தரி ஒருத்தியை வீட்டோட மாடியில தங்க வைப்பதா ? என்ற எரிச்சலில் இருந்த பட்டுமாமிக்கு பத்மினியும் அவள் மகன் தீரனும் கண்ணில்படும்போது எல்லாம் கரித்துக் கொட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தாள்.

பத்மினி அமெரிக்காவிற்கு வந்த சமயம் அவள் மாசமாக இருந்ததை அறிந்து கண்ணும் கருத்துமாக தனது கணவன் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே வைத்து கவனித்துக்கொண்ட தன் தோழி விசாலி மாசமாகயிருக்கும் நேரம் அவளுக்கு பக்கத்துணையாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் பட்டுமாமியின் விசமான வார்த்தைகளை சகித்துக்கொண்டு உதாசீனத்தை பொறுத்துக்கொண்டு இருந்தாள் பத்மினி .

தீரன் சிறுவயதில் இருந்தே நெருப்புபோல இருந்தான். அவன் பட்டுமாமியின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டால் நேரடியாகவே மாமியுடன் சண்டைக்கு நின்றான் .

இதனால் பத்மினி விசாலியிடம் தன மகனால் வீட்டில் ஏற்படும் சலசலபுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக அவளின் மாடிவீட்டை காலிசெய்து அவர்களின் டான்ஸ் அக்காடமி மாடியில் உள்ள போர்சனில் தங்கி கொள்வதாக வாதாடி விசாலியின் மாடிபோர்சனை விட்டு காலிசெய்து பரதநாட்டிய அகாடமி வளாகத்தின் மாடியில் குடியேறினாள்.

டான்ஸ் அக்காடமி இருந்த பகுதி செல்வந்தர்கள் வசிக்கும் ஏரியா அங்குதான் பக்கத்துவீட்டில் இருந்த பிராங்க்குடன் தீரனுக்கு நட்பு உருவானது.

சிறுவயதில் பிராங்கும், தீரனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்தார்கள் என்றபோதிலும் பிராங் தீரனுடன் சேர்ந்து விழையாட அவனது பணக்கார வீட்டு பெரியோர்கள் அனுமதித்ததில்லை. ஆனால் தனது வயதை ஒத்த தீரன் தான் படிக்கும் பள்ளியில் தனது கிரேடில் படிக்கும் தீரனின் துறுதுறுப்பும் சேட்டைகளும் பிராங்கை கவர்ந்தது

ஒருதடவை பிராங் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது நூல் அறுந்து... காற்றில் பட்டம் பறந்துவந்த பிராங்கின் பட்டம், தீரன் வீட்டில் இருந்த மரத்தில் மாட்டிக்கொண்டது .

அதனை கவலையுடன் பார்த்துகொண்டிருந்த பிராங்கிடம் வந்த தீரன் ஹாய்..! அது உன் கைட்டா? என்று கேள்வி எழுப்பினான். அவன் கேட்டதும் ஆர்வமாக எஸ்… என்னுடயதுதான் தீரன். நீ தீரன் தானே என் கிரேட் தானே! நான் உன்னை ஸ்கூலில் பார்த்து இருக்கிறேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறவும் தீரன், நானும் உன்னை பார்த்திருக்கிறேன். நாம் இன்றுமுதல் நண்பர்களாவோமா? என்று கேட்டவிட்டு ஷேக்கன் செய்ய கைநீட்டினான் அவனிடம்.

அவனின் கை பற்றி குலுக்கிய பிராங், பிரன்ட்ஸ் என்று கூறினான். மேலும் தீரனிடம் என் கைட்டை உன்னால் எடுத்துத் தரமுடியுமா? என்று கேட்டான்.

அதற்கு தீரன் எடுத்துதருகிறேன். ஆனால் அவ்வாறு நான் எடுத்துகொடுத்தால் நீ என்னுடன் டிரை சைக்கில் போட்டிக்கு வரவேண்டும் டீல் ஓகே யா என்று கேட்டான்.

தீரனின் சைக்கில் சாதாரமானது பிராங்கின் சைக்கிள் அட்வான்ஸ் கியர் உடையது அவன் அவ்வாறு கூறியதும் அவனது சைக்கிளை பார்த்தவன் இந்த சைக்கிளிலேதான் என்னுடன் போட்டியிட போகிறாயா என்று கேட்டான்.

அதற்கு தீரன் “எஸ்” நான் வின் செய்தால் உன்னுடைய சைக்கிளை அடுத்து நாம் இருவரும் சந்திக்கும் ஒருவாரம் முழுவதுவும் உன் சைக்கிளை நான் தான் ஓட்டுவேன்... டீல் ஓகேவா? என்று கேட்டான்.

தீரனால் தன்னுடைய சைக்கிளை முந்த முடியாது என்ற எண்ணத்தில் டீல் ஓகே என்றான் பிராங்.

உடனே தீரன் அந்த மரத்தில் லாவகமாக ஏறி அவனின் பட்டத்தை எடுத்துகொடுத்து பிராங்குடன் சைக்கிள் போட்டியிலும் வென்றான் தீரன்.

அதன் பின் வந்த நாட்களில் இருவரும் சந்திக்கும் அடுத்த வாரம் முழுவதுவும் பிராங்கும் தீரனும் சைக்கிளை மாற்றிகொண்டனர்.

தீரனுடன் சேர்ந்து வேகமாக சைக்கிள் ஓட்டுவது ,வீட்டிற்கு தெரியாமல் தீரனுடன் எஸ் ஆகி வெளி உலகம் சுற்றிப்பார்ப்பது... அவனின் சக வயது நண்பர்களுடன் தீரனால் பிராங்கும் பல நட்பை பெற்றது போன்ற பல நன்மைகள் பிராங்கிற்கு தீரனால் கிடைத்தது.

பிராங் தீரனுடைய நட்பை பெற்ற பிறகு அவனுடன் சேர்ந்து படிப்பதினால் முன்பைவிட நல்ல மதிப்பெண் பெறுவதையும் உற்சாகமாக இருப்பதையும் கண்ட பிராங்கின் பெற்றோர் முதலில் அந்தஸ்த்தை காரணம் காட்டி மறுத்தாலும் இப்பொழுது தீரனுடன் பழகுவதை மறுக்கவில்லை.

ஆனால் பிராங்கிடம் அவனது பெற்றோர் கூறினர், நண்பனாக தீரனிடம் பெரும் உதவிகளுக்கு அவனிடம் பதிலுக்கு நடப்பை கொடு என்பதை கூறாமல் தீரனை யூஸ் செய்து நீ உனக்கு வேண்டியதை சாதித்துகொள், நீ நினைப்பதை தீரன் செய்யவைக்க தீரனுக்கு வேண்டிய பொருளை வாங்கிகொடுப்பதாக டீல் பேசு என்று தவறுதலாக அவனை வழிகாட்டினர்.

அன்றிலிருந்து தீரனுக்கும் பிராங்கிற்கும் உரியநட்பு டீலாகவே தொடர்ந்து. தீரனுக்கு அவனின் மூலம் பணம் மற்றும் பொருள் ஆதாயமும். பிராங் நினைப்பதை சாதிக்க தீரனை கருவியாக்கும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.