(Reading time: 23 - 46 minutes)

பிராங் கூறிய அமெரிக்க டாப் டென் பிஸ்னஸ்மேனும் தனது அப்பாவின் தம்பியுமான பிஸ்னஸ் டெவில் மார்க் ரூபன்ஸ்... அவரை எதிர்பவர்களை அவருக்கு எதிராக செயல்படுபவர்களை அழிப்பதில் அசுரனுக்கு நிகரானவர் என்பதை கண் முன்னே தீரன் கண்டிருந்த போதிலும், அவரது பெயரை தான் கூறிய பின்பும் கூட தனக்கு கீழ்படிந்து போகாமல் திமிராக பேசும் தீரனை கண்டு அவனின் மனஉறுதியை கண்டு ஆத்திரமடைந்த பிராங் அவனின் மன உறுதியை ஆட்டுவிக்க சரியான ஆயுதத்தை கையில் எடுத்தான்.

தீரா உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல மறந்துட்டேன். நோ...நோ... மறந்துட்டேன் என்பதைவிட, அதை உன்னிடம் சொல்லி நீ வருந்த கூடாது என்பதற்காக சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

இப்போ அதை உனக்கு சொல்லனும் என்று எனக்கு ஒரு ஆசை துளிர்க்கிறது....அது என்ன தெரியுமா? இப்போ வகுலமாலினி என்னோட பியான்ஷி.... நேற்றுதான் நானும் அவளும் மேரேஜ் செய்துகொள்ள டிசைட் செய்து டேட் பிக்ஸ் செய்து ஒரு கெட்டுகதரில் அனவுன்ஸ் செய்தோம்.

நல்ல வேலை நீ இங்கு இல்லை. உன்னுடைய எக்ஸ்காதலியை என் பியான்சியாக அனவுன்ஸ் செய்யும் போது நீ இங்கு இல்லை. நீ என்னுடைய நண்பன் நீ இங்கிருந்தால் நீ இல்லாமல் என் எங்கேஜ்மென்ட் நடந்திருக்காது.

அப்படி நடந்திருந்தால் உன் ஹார்ட் என் அருகில் வகுலா பியான்சியா இருப்பதை பார்த்து ஹெர்ட் ஆகியிருக்கும்

இப்பொழுதாவது நீ அலார்ட் ஆகிக்கோ தீரா, இதுதான் ட்ரூத். உன்னிடம் திறமை இருக்கலாம். ஆனால் பணம் மற்றும் பரம்பரை செல்வாக்குடைய நாங்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் எங்களது ஆக்கிகொள்வோம். உன் திறமையை வைத்து உன் காதலியைக்கூட உன்னுடன் தக்க வைத்துகொள்ள முடியவில்லை. ஆனால் என் செல்வத்தை வைத்து அவளை நான் ஆசைப்பட்டபடி என்னிடம் கொண்டுவந்துவிட்டேன் பார்த்தாயா? .

அதேபோல் என் அங்கிளின் பரம்பரை அந்தஸ்து மற்றும் பணபலத்தின் முன் நீ ஆடினால், என்னிடம் சாதாரண காதலியை இழந்ததுபோல் என் அங்கிள் மார்க் ரூபன்சிடம் மோதி உன் வாழ்க்கையை நீ இழந்துவிட்டதே! இந்த அட்வைசை நீ என்னுடைய நண்பன் என்பதால் உன்னிடம் கூறுகிறேன். டேக் கேர் மை பிரின்ட் தீரா என்றான்.

வெய்ட்.....வெயிட்....தீரா இன்னும் ஒன்று சொல்லிவிடுகிறேன் வகுலாவுடன் எனக்கு சூப்பரா கோவாப்ரேட் செய்கிறாள், ஷி இஸ் ஆசம், என்று கூறினான்.

இதுபோல் நடந்திருக்கும் என்பதை தீரன் அறிந்துதான் வைத்திருந்தான், இருந்தபோதிலும் ஒரு காலத்தில் அவளை தனது வருக்காலமாக நினைத்து வகுலாவிடம் மயங்கிய அவனுக்கு பிராங்கின் வார்த்தைகளால் ஏற்பட்ட மனரனத்தை தவிர்க்கமுடியவில்லை.

அவனின் வார்த்தைகள் தீரனை காயப்படுத்தியது, இருந்தாலும் அதை வெளிகாட்டாதபடி ஹ..ஹ...கா...என்று சிரித்தவன், பிராங் என்னைவிட நீ செல்வந்தன் என்று தெரிந்ததால் என்னைவிட்டு உன்னிடம் வந்தவள், உன்னைவிட பணக்காரன் அவளில் கண்ணில் பட்டாலோ! அல்லது உன்பணம் உன்னிடம் இல்லாமல் போனாலோ! அவள் வேருஒருவனை பார்த்துபோய்விடுவாள் என்று உனக்காக நான் அனுதாபப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

எனிவே.... உன் கல்யாண வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியவன் தொடர்பை துண்டித்தான்.

அவனது மொபைலை தூக்கி பெட்டின் மேல் போட்டவன் வேகமாக போய் பிரிட்ஜ்ஜை திறந்து அதில் இருந்த ஹாட் டிரிங்சை அப்படியே பாட்டிலுடன் எடுத்து தொண்டையில் சரித்தான்.

அவன் மனதில் வகுலாவின் உருவம் வந்துவந்து போனது. அவன் ஐந்து வயதில் இருக்கும்போது.... பிறந்த குழந்தையாக வகுலமாளினியை பத்மினியின் தோழியும் அவளில் டான்ஸ் அக்காடமியின் பார்ட்னருமான விசாலி கையில் ஏந்தி வீட்டினுள் வந்தவளை தீரன் ஆசையாக எட்டிப்பார்த்தான்.

பன்னீர் ரோஜா இதழ்போன்ற கலரும் மென்மையுமாக பூப்போல இருந்த அவளை ஆவலுடன் தொட்டுபார்த்த தீரன் ஆண்டி, ஷி இஸ் பிரிட்டி, ஐ லவ் ஹெர். டெய்லி நான் ஸ்கூல் விட்டு வந்ததும் பேபியை என்னிடம் கொஞ்சநேரம் தாங்க நான் அவளை பார்த்துகொள்வேன் என்றான்.

அவள் அவ்வாறு கூறிய மறுநிமிடம் விசாலியின் டெலிவரி டைம் உதவியாக இருக்க இந்தியாவில் இருந்து அங்கு வந்திருந்த விசாலியின் விதவை பெரியம்மா நல்லா இருக்கே! நோக்கு தூக்கத்தெரியாமல் தூக்கி பிள்ளைக்கு ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிடுச்சோனோ யாருக்கு நட்டம். குழந்தையை தொட்டாவாளுக்கு பொல்லாதவளாக்கும் இந்த பட்டுமாமி என்று கூறி சத்தம்போட்டாள் .

பட்டுமாமியின் வார்த்தையில் சிலிர்த்துக்கொண்டு ஆண்டி, ஐ ஹேட் தேட் ஒல்ட்லேடி , ஷி ஆல்வேஸ் கம்ப்ளையன் அபௌட் மீ. என்றான்.

அவன் முகம் கூம்பி பேசுவதை பொருத்துக்கொள்ள முடியாத விசாலி, மாமி அவாளும் குழந்தையாச்சே. தீராவிடம் கடுமையா பேசாதேல். பொறுமையா இப்போ அவன் தூக்கினால் குழந்தை கழுத்து நிக்காது கொஞ்ச நாள்கழித்து கழுத்து நின்னா பிறகு தூக்கு நீன்னு சொன்னா தீரா புருஞ்சுப்பான் என்றாள்.

பட்டுமாமிக்கு கணவன் இல்லாமல் பத்மினி விசாலி வீட்டு மாடியில் தீரனுடன் தங்கியிருப்பதும் தீரனின் மீதும் பத்மினி மீதும் விசாலியும் அவளது டாக்டர் கணவனுமாகிய ஸ்ரீராமுவும் அக்கறையாக இருப்பதுவும் பிடிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.