(Reading time: 23 - 46 minutes)

தீரன் என்னதான் அமெரிக்க கலாச்சார சூழலில் வளர்ந்தாலும் தன் அம்மா பத்மினி சிங்குளாக நிற்பதற்கு போராடுவதையும் அதில் வெற்றிபெறுவதற்கு மனக்கட்டுபாடுதான் காரணம் என்பதையும் அவ்வாறு அவர் இருப்பதற்கு காரணம் நம் தமிழ் பண்பாடு என்று தீரனுக்கு போதிப்பதனாலேயோ என்னவோ! தீரன் பெண்களிடம் பழகும் போது கண்ணியமாக நடந்துகொண்டான் தன் மேல் வந்து விழும் பெண்களை நாசூக்காகவும் ஒதுக்கும் பண்பு இயல்பிலேயே அவனுக்கிருந்தது.

பிராங் பணக்காரனாக இருந்தாலும் டீன் ஏஜில் அவன் கண்களுக்கு அழகாக தெரியும் பெண்களின் கண்ணெல்லாம் தன் மீது இல்லாமல் தீரனின் மீது படிவதை தாங்கிக்கொள்ள பிராங்கால் இயலவில்லை.

ஆண்களில் கண்ணியமாகவும், திறமையாகவும் , ஆரோக்கியமாக ஆறடிவுயரத்தில் செதுக்கிவைத்த முகத்தோற்றத்தில் இருந்த தீரனை கண்ட பெண்கள் அவனின் அன்புக்கு பாத்திரமாக விரும்புவது இயல்பாக நடந்தது.

அதேபோல் என்னதான் பிராங் அழகான ஆங்கிலேய தோற்றத்தில் செல்வந்தனாக இருந்தாலும், பெண்களிடம் கண்ணியமில்லாமல் நடந்துகொள்வதும். ஒருத்தியை மட்டும் நோக்காமல் அழகான பெண்கள் எல்லோரையும் அடைய நினைக்கும் அலைபாயும் அவனின் பிளேபாய் லீலைகளை கேக்கும் பெண்கள் அவனிடம் அன்பைபெற முயலாமல் அலார்டக அவனிடம் நடந்துகொள்வதும் இயல்பாக நடந்தது..

இப்படிபட்ட சூழலில் பத்மினி தனது நாட்டிய பள்ளியின் வருமானத்தில் தீரனை வளர்த்தாள், இளம் வயதிலேயே தீரன் தன்னுடைய படிப்புடன் தனக்கு தேவையான செலவுகளை ஈடுகட்டுவதற்கு தானே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான்.

என்னதான் பொத்தி.. பொத்தி... தீரனை வளர்க்க பத்மினி விரும்பினாலும் தனிமனித சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் குடும்ப உறுப்பினர்கள் கூட ஓரளவுதான் ஒருத்தரின் செயலை கட்டுபடுத்தமுடியும் என்ற சூழல் உள்ள இடத்தில் வளரும் தனது மகனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாமல் பத்மினி திணறினாள்.

பத்மினியின் தோழியும் நாட்டிய பள்ளியை தொடங்கி அதில் பத்மினியை சக பார்ட்னராக ஏற்றுக்கொண்டு இதுவரை அவளுடன் தோழமை பாராட்டும் விசாலியும் அவ்வாறே தன் மகள் வகுலமாளினியும் அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்வதை கண்டு வருத்தமடைந்திருந்தாள்.

இந்நிலையில் வகுலமாலினி அழகான மங்கையாக வளர்ந்துநின்றாள். ஒருதடவை நண்பர்களுடன் பிறந்தநாள் பார்டியில் கலந்துகொண்டுவந்த வகுலா மது அருந்திவிட்டு வீட்டிற்குவந்ததை பார்த்த விசாலி இனி அவளை அப்படியே விட்டால் அமெரிக்க கலாச்சாரத்தில் மூழ்கி குடும்ப வாழ்க்கையை தொலைத்துவிடுவாளோ என்ற அச்சம் கொண்டனர். எனவே அவளுக்கு கல்யாணம் செய்துவைத்து விடவேண்டும் என முடிவெடுத்தனர் .

தீரனின் படிப்பும் கண்ணியமான நடத்தையும் அவனின் திறமையும் கண்ட விசாலி தம்பதியினர் தனது மகள் வகுலமாலினியை தீரனுக்கு மணமுடிக்க ஆசைபடுவதாக பத்மினியிடம் கூறினார்கள்.

பத்மினி தோழி கூறியதை சந்தோசமாக ஏற்றாள். தீரன், விசாலி வீட்டில் இருந்து வெளிவருகையில் சிறுவயதானாலும் பட்டுமாமியின் வார்த்தைகளால் மிகவும் காயப்பட்டிருந்தான், எனவே அவன் அவர்களின் வீட்டிற்கு போவதை அதன் பின் தவிர்த்துவிட்டான்.

எப்பொழுதாவது அவர்களை பார்க்கும் சூழல் வந்தாலும் ஒரிரு வார்த்தைகளுக்குமேல் நின்று பேசியதில்லை. ஆனால் வகுலாவை அவளது பெற்றோருடன் பார்க்கும் போதெல்லாம் அவளுடன் பேசவேண்டும் என்ற ஆவல் பொங்கும் இருந்தபோதிலும் அதை வெளிப்படுத்த மாட்டான்.

சிறுவயதில் இருந்து வகுலமாலினிக்கு அவளின் அம்மா விசாலி வீட்டிலேயே பரதம் பயிற்றுவித்திருந்தாலும் அவளின் பதினாறாம் வயது பருவத்துக்குபின் சிறப்பு நிகழ்ச்சிகளில் நடக்கும் நாட்டியத்தில் பங்கெடுக்கும் போது அக்காடமியில் பத்மினியின் கொரியோகிராபில் பரதம் பழகினால் அவளின் நடனநிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்து அதுபோன்ற பிராக்டிஸ் நேரம் அகாடமிக்கு வர ஆரம்பித்தாள் வகுலா.

அந்நேரம் தீரனை கண்டவள் முன்போல் ஒதுங்கிச்செல்லாமல் பேச ஆரம்பித்தாள், தீரனுக்கு ஏற்கனவே அவளின் மேல் சிறுவயதில் இருந்து ஏற்பட்ட ஈர்ப்பு இன்று வளர்ந்து அழகு மங்கையாக இருபவளின் மேல் ஆர்வமாக மாறியிருந்ததால் அவள் வரும் நேரங்களை ஆவலுடன் தீரனும் எதிர்பார்த்திருந்தான்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுத்து அதை தெரிவித்ததும் ஆசையுடன் தீரன் அதற்கு ஒத்துகொண்டான்.

பட்டுமாமியின் மகனும் அமெரிக்காவில் குடியேறியதால் அடிக்கடி விசாலியின் வீட்டிற்கு பட்டுமாமி வந்துபோக இருந்தாள். சிறுவயதில் வகுலாவினை வளர்ப்பதில் உதவிய பட்டுமாமிகும் வகுலாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தது,

இந்நிலையில் வகுலாவின் என்கேஜ்மெண்டுக்கு வந்த பட்டுமாமிக்கு சிறுவயதில் இருந்து ஏனோ தீரனை பிடிக்காத காரணத்தால் இக் கல்யாணத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமலேயே என்கேஜ்மேண்டில் கலந்துகொள்ள வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.