‘இது என்னோட அம்மா.’ என்று பெருமையுடனே தங்கள் தோழிகளிடம் சொல்வர்.
அந்த அளவிற்கு கட்டுடலோடு சீதாலெட்சுமி இருப்பதற்குக் காரணம் அவளது உடல் உழைப்பே.
வீட்டில் அதிகமான வேலைக்காரர்கள் கிடையாது. சில வேலைகளுக்கு மட்டும் வேலையாட்களை வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் அவளேதான் பார்ப்பாள்.
கணவன் சோம்பியிராமல் ஓடி உழைத்துக்கொண்டிருக்கும்போது அவளால் எப்படி சும்மா இருக்க முடியும்?
அதுவும் அவள் பிறந்தது ஏழ்மையான குடும்பத்தில். வீட்டிற்கு மூத்த பெண் வேறு. பிறந்த வீட்டிலேயே பொறுப்போடு இருந்தவள், புகுந்த வீட்டிலும் அதை விட்டுவிடாமல் செய்தாள்.
மகள்கள் இருவரும் தாயிடம் எந்த அளவிற்கு தோழமையுடன் பழகினார்களோ, அந்த அளவிற்கு தந்தையிடம் இருந்து ஒதுங்கியிருந்தனர்.
அதில் பயமோ, மரியாதையோ? அல்லது இரண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் மனைவியிடம் காட்டியிருப்பாரா?
வீட்டில் பெண்களுடன் எதையாவது கலந்து பேசி முடிவெடுத்திருக்கிறாரா?
தான் வைத்ததே சட்டம் என்பது மாதிரி அவர் சொன்னதைத்தானே கேட்க வேண்டியிருக்கிறது.
தனக்கும் இப்படி ஒரு கணவன் வாய்த்துவிட்டான் என்றால்?
நினைக்கும்போதே அவள் மனம் பதறியது.