புன்னகை விரிந்து பற்கள் எட்டிப்பார்க்க, “தேங்க் யூ!” கண்கள் அவளின் பின்னே யாரேனும் வருகிறார்களா என நோட்டமிட கால்களை மடித்து அவளுயரத்திற்கு சமனாக இறங்க...
சிறுமியோ சட்டென அவன் சட்டை காலரை பிடித்திழுத்து முத்தமொன்றை கன்னத்தில் பதித்து, “தேங்க் யூ அங்கிள்! என் ஹீரோவை பிடிச்சு கொடுத்ததுக்கு” என்றவளின் பார்வை அவன் கையிலிருந்த சுவரொட்டியில் நிலைத்தது.
உடலிறுக, புன்னகை கலைந்து வருத்தமும் வேதனையும் குடிபெயர, சற்று முன் முகத்தில் வந்து விழுந்த காகிதத்தை கவனித்தான். ஆளுயர சுவரொட்டியில் கம்பீரமாக நகரத்து நாயகன்.
“கிடைச்சதா?” என்றபடி வந்து நின்றார் முதியவர். பறந்து விளையாட்டு காட்டிய சுவரொட்டியை பாட்டியும் பேத்தியும் பிடிக்க முயல, வயோதிகத்தால் தாமதமாக வந்தார்.
“கிடைச்சிடுச்சு பாட்டி! அங்கிள்தா உதவினாங்க” பாட்டிக்கு பதிலளித்தவள், சுவரொட்டியை வெறித்திருந்தவனிடமிருந்து பிடுங்கினாள்.
“உங்களுக்கு வேணும்னா பாட்டி இன்னொன்னு வாங்கி தருவாங்க. இதை என்னோட அறையில ஒட்டனும்” என்றபடி பின்னடைந்து பாட்டியிடம் ஒட்டிக்கொண்ட சிறுமியின் குழந்தை தன்மையில், அவனிடம் மென்முறுவல் மீண்டது.
“நன்றி தம்பி!” பாட்டி சொல்லவும் எழுந்து கொண்டவன்
“இருக்கட்டும்மா!” என்றவனிடத்தில் அதே முறுவல்.
“நேரமாச்சு பாட்டி! வாங்க போகலாம். இல்லைனா ஹீரோ வந்துருவாரு. வாங்க வாங்க” பாட்டியின் இடது கையை பிடித்து இழுத்தாள் சிறுமி.
“வரோம் தம்பி!” என்றபடி பேத்தியோடு கிளம்பிவிட்டார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“பத்திரம்மா” சொன்ன மறுகணம் மனதிலேறிய பாரத்தோடு அவர்கள் சென்ற வழியை வெறித்திருந்தான்.
சிறுமி முத்தமிட்ட கன்னத்தை அதாக வருடியது கை. எத்தனை அழகான அன்பை இழந்திருக்கிறான்? யாருக்காக? எதற்காக? நெஞ்சையருத்த நினைவுகளில் கசங்கியது முகம்.
காலம் என்றும் கடமையை தவறியதில்லை! அது பலரை அவர்களின் கடமையை தவற வைத்திருக்கிறது. சிலரின் தவறுகள் ஏட்டின் எழுத்துப்பிழை போல் எளிதில் திருத்த வல்லது. வேறு சிலரின் தவறுகளோ அச்சிட்ட எழுத்துப்பிழை. அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுகிறது.
எல்லாவற்றையும் திருப்பிவிட முடிந்தால் இன்னுயிரை கொடுத்தேனும் செய்திருப்பானே! வழக்கமாக மனதிலெழும் எண்ணம் தான். ஆனால் இப்போது வருந்தி பயனேதுமில்லையே. நிதர்சனம் புரிந்த கணம், வந்த வேலையை மனதிலிறுத்தி இருளடர்ந்த மறைவான இடத்தை நோக்கி நகர்ந்தான்.
“வானத்துல பறந்து வருவாரா இல்லை மக்கள் கூட்டத்து நடுவிலிருந்து நடந்து வருவாரா இல்லை வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பும் தவிப்புமா எல்லாரும் காத்துட்டிருக்காங்க. உங்களுக்கே தெரியும், இதுவரையிலும் யாரையுமே சந்திக்க அவர் கேட்டதில்லை. ஆனா அவர் நமக்கு செய்திருக்கும் நன்மைகள் மூலமா நம்ம எல்லாரோட மனசுலேயும் ஆழமான அன்பை விதச்சிட்டாரு. அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகரத்து மக்கள் ஒன்று திரண்டு இந்த விழாவை ஏற்பாடு பண்ணிட்டோம். கண்டிப்பா நம்மோட இந்த சின்ன ஆசைய நிறைவேற்றுவாருனு நம்பிக்கையோட கூடியிருக்கோம். உங்க திரையில தெரியுற வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்க! இப்போதைக்கு நாயகனை பார்க்க முடியும்னு ஏழுபத்தி இரண்டு சதவீத மக்கள் நினைக்குறாங்க. நானும் அவரோட விசிறிதா அவர் வருவாருனு நம்புற. அதே சமயத்துல அவர் வரமாட்டார் இருபத்தியெட்டு சதவீத மக்கள் சொல்றாங்க. ஆனா எந்நேரம் வேணாலும் அவர் வருவாரு நாமெல்லா நினைக்கிறோம். அந்த பொன்னான நொடிகளைக் காண ‘உங்கள்’ தொலைக்காட்சியோடு இணைந்திருங்கள்” என்று கடற்கரை மக்கள் திரளுக்கு சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தாள் ‘உங்கள்’ தொலைக்காட்சியின் தொகுப்பாளினி. மக்கள் திரளையும் தொகுப்பாளினியையும் வானத்தையும் மாற்றி மாற்றி காட்டிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி திரை.
சிலரோ நாயகன் வருவான் வரமாட்டான் என்று தங்களுக்குள் பந்தயம் விட்டிருந்தனர். மக்களுக்குள் குழப்பமேதும் கிளம்பி விட்டால் பாதுகாப்புக்கென்று பல காவலர்களும் குவிந்திருந்தனர்.
திடீரென கீழ் வானத்தில் பளபளத்த மின்னலும் இடியும் எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன் என்பதாக முழங்கின.
“அதோ மாருத வேகன்” என்றது ஒரு குரல். மறுகணம் மாருத வேகன் மாருத வேகன் என பலக்குரல்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மக்களின் மாருத வேகன் என்ற மின்னல் தோன்றியிருந்த கீழ் வானத்தை நோக்கிய முழக்கம் இடியை பயமுறுத்தியது. இத்தனை அன்பும் ஆரவாரமும் மக்களின் மனதில் பாய்ச்சி வேரூன்றியிருக்கும் மாருத வேகன் யாரென தெரிந்து கொள்வோம்!
வருவான் வேகன்...
Go to Misaraga Sangini story main page
{kunena_discuss:1224}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.