(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - மிசரக சங்கினி – 02 - தமிழ் தென்றல்

Misaraga Sangini

 

பாதரசம், இரசாயன தொழிற்துறையில் வினையூக்கியாஅன பயன்படுத்தபடுகிறது.  இது சில மின் சுவிட்சுகள் மற்றும் திருத்திகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தபடுகிறது.

தங்கம், வெள்ளி மற்றும் தகரம் போன்ற பிற உலோகங்களுடன் கலவையாக எளிதில் கலக்கபடும் இது பெரிதும் தங்க தாதுகளிலிருந்து தங்கத்தை மீட்பதற்கு உதவுகிறது.

ன்று மகன் கடிந்துகொண்டதிலிருந்து கல்யாணியும் நேரத்தோடு பேத்தியை தூங்க வைத்தார்.  அதே சமயம் காப்பியத்தை நிறுத்திடும் எண்ணமும் இருக்கவில்லை.  இருதினங்களாய் அவரை வாட்டிய காய்ச்சலும் விட்டிருக்க, இன்று கதையை தொடர முடிவு செய்திருந்தார்.  இரவு எட்டு மணிக்கெல்லாம் உணவை முடித்துவிட்டு இருவரும் நிஷ்டாவின் அறைக்குள் வந்து சேர்ந்தனர்.

“சொல்லுங்க பாட்டி பளிக்கறை மண்டபத்துல நிறுத்தினோம்” அடுத்தென்ன என தெரிந்து கொள்ளும் ஆவலோடு சிறுமி கேட்க...

“பளிக்கறை மண்டபத்துல தூய மாணிக்கத்தாலான ‘பதுமபீடிகை’ இருந்தது.  பௌத்தர்கள் அந்த பீடிகையை தொழுவதை வழக்கமா வச்சிருந்தாங்க.  மணிமேகலையும் ஒரு பௌத்த துறவிங்குறதால அந்த இடைத்தை பற்றி தெரிஞ்சு வச்சிருந்தா.  இந்திர விழா நடக்குறதால புகாரில் கலைக்கூத்துக்கு போறவங்க, கோயிலுக்கு போறவங்கனு எங்க பார்த்தாலும் கூட்டமா இருந்தது.  மக்கள் கூடும்போது சில குழப்பம் வருவது சகஜம்.  அதனாலதா பிரச்சனையேதுமில்லாம இந்த வனத்துல பூ பறிச்சிட்டு பாதுகாப்பா வீட்டுக்கு போயிடலாம்னு மணிமேகலை தோழி சுதமதி சொல்லவும் இங்க வந்தாங்க”

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள், “கூட்டம்னா எவ்வளவு பேரு இருப்பாங்க? அன்னைக்கு மால்ல பார்த்தோமே அவ்ளோ?” கண்களோடு தனது பிஞ்சு கரங்களையும் விரித்து கேட்டாள் நிஷ்டா.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் கரத்தை பிடித்து கீழிறக்கி தன்னருகே இழுத்து, “அதுபோல பலமடங்கு இருந்திருப்பாங்க.  மால்ல நாம பார்க்குறது சுற்று வட்டத்துல இருக்க மக்கள்தா.  ஆனா புகார் ஒரு பழம்பெரும் ஊர்.  அங்கதா பெரிய வியாபாரங்கள் நடந்தது.  வெளிநாடுகளோட ஏற்றுமதி இறக்குமதினு கடலோரத்துல கப்பல்கள் வந்து போகும்.  புகார் அந்த காலத்து ட்ரேட் செண்டர்னு சொல்லலாம்.  இதனால எல்லாருக்கும் புகாரை பற்றி தெரியும்.  அதிலும் இந்திரவிழானு பெரும்விழா நடக்கும்போது எங்கெங்கிருந்தோ மக்கள் வருவாங்க.  வெளிநாட்டு வியாபாரிகளும் வந்து குவியுவாங்க.  விழாக்காலத்துல அவங்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும்” பேத்திக்கு விரிவாக விளக்கமளித்தார் கல்யாணி.

பாட்டி சொல்வதை கவனமாக கேட்டிருந்தவளோ, ‘அவ்ளோ கூட்டமா!’ என்ற வியப்பில் மறுபேச்சின்றி கல்யாணியருகில் படுத்து கொண்டாள்.

“மணிமேகலை ரொம்ப அழகாயிருப்பாளா...அதனால அவகிட்ட ஒருமுறையாவது பேசிடனும்னு நிறைய பேருக்கு ஆசை.  புகாரோட இளவரசன் உதயகுமாரனுக்கும் அந்த க்ரேஸ் இருந்தது.  எத்தனையோ முறை அவளோட பேசிடனும்னு, அவளை தன்னோட அரண்மனைக்கு அழைச்சிட்டு போயிடனும்னு முயற்சி செய்திருக்கா.  இன்னைக்கு மணிமேகலை வனத்துக்கு வந்ததை கவனிச்சிருந்த ஒருத்தன், இளவரசனுக்கு சொல்லவும் தேரில் ஏறி வேகமா வனத்துக்கு வந்துட்டா.”

“மும்முரமா மணிமேகலை பூ பறிச்சிட்டிருக்க, சுதமதி இளவரசனை கவனிச்சிட்டா.  சட்டுனு தோழிக்கு இவனை காட்டவும், ஒரே வழியிருந்த அந்த வனத்துலிருந்து எப்படி வெளிய போறதுனு தெரியாம தவிச்சுபோயிட்டா.  சதா சாமியையே நினைச்சு வாழுற மணிமேகலைக்கு உதயகுமாரனோட எண்ணம் புரிஞ்சிருந்தது.  அதனால அவனோட பேச விருப்பலை.  இதுக்கு முன்ன கூட சில முறை உதயகுமாரனை தவிர்த்துட்டு போயிருக்கா.  ஆனா இப்போ எப்படி தப்பிக்குறதுனு தெரியாம பயமா போச்சு.  அவன் வேற வாசப்படியை தாண்டி உள்ளே வரும்போதே யாரையோ தேடிட்டு வருவது தெரிய.... இவளுக்கு என்ன செய்யனு ஒன்னுமே புரியலை.  சுதமதிதா அவசரமா யோசிச்சு, பளிக்கறை மண்டபத்துக்குள்ள போயி ஒளிஞ்சுக்க சொன்னா.  இவளும் சட்டுன அதுக்குள்ள போயிட்டா”

“இளவரசன் சுதமதிக்கிட்ட மணிமேகலை எங்கனு விசாரிக்க ஆரம்பிச்சா... நான் அவளோட பேசனும், அவள் எங்கனு சொல்லுனு கேட்டா.  சுதமதியோ இளவரசனுக்கான மரியாதைல குறைவைக்காம அவனுக்கு பதில் சொன்னா.  அவளுக்கு பக்தி மார்க்கத்துலதா விருப்பமிருக்கு.  அதனால நீங்க உங்க எண்ணத்தை மாத்திக்குங்கனு சொன்னா.  இளவரசனோ, நான் நினைச்சது கண்டிப்பா செய்தே தீருவேன்னு உறுதியாயிருந்தா”

“சுதமதிட்ட பேசிட்டிருந்தாலும் பளிக்கறை மண்டபத்துல மறைஞ்சு நின்ன மணிமேகலைய பார்த்துட்டா.  ‘பதுமபீடிகை’ புனிதமானது! அதோட மரியாதை தெரிஞ்சதால உள்ளே போயி அவளோட பேச அவனுக்கு விருப்பமில்லை.  இதை மனசுல வச்சுதா சுதமதியும் தோழியை அதுக்குள்ள போக சொன்னா.  என்னைக்கானாலும் ஒரு நாள் கண்டிப்பா மணிமேகலையை என்னோட கூட்டிட்டுதா போக போறனு சொல்லிட்டு வனத்துலிருந்து கிளம்பிட்டா.  தேர் புறப்பட்டு போற வரைக்கும் பதட்டத்தோடவே இருந்த மணிமேகலைக்கு இப்போதா கொஞ்ச நிம்மதியாச்சு.  ஆனா வெளியே வந்து அவன் சொன்னதையெல்லாம் கேட்டபோது கவலையா போச்சு.  அடுத்து என்னதா செய்யுறதுனு கலங்கி நின்னா” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.