Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகா

Kaanum idamellam neeye

ரு மாதம் கடந்த நிலையில்

தஞ்சை  

”மீனாட்சி” என சத்தமாக அழைத்தார் குமரவேல் அவரின் அழைப்பு கொல்லைப்புறத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு கேட்டது. உடனே

”வரேன் மாமா” என கத்திக்கொண்டே காலில் அணிந்த கொலுசு அதிர கொல்லைப்புறத்தில் இருந்து ஓடி வீட்டுக்குள் நுழைந்தவள் குமரவேலை தேடி முற்றத்திற்கு வந்து அவர் அமர்ந்திருந்த சேர்க்கு பின்புறம் நின்றாள்

”சொல்லுங்க மாமா” என மூச்சரைத்துக் கொண்டே கேட்க அவரோ

”முதல்ல மூச்சு வாங்கு அப்புறம் பேசிக்கலாம்” என சொல்லியபடியே கையில் இருந்த லெட்டரை மறுபடியும் படிக்கலானார்.

மீனாட்சியும்  அமைதியாக மூச்சை நன்றாக இழுத்து விட்டதுடன்

”சொல்லுங்க மாமா என்ன வேலை என்ன செய்யனும்” என அமைதியாக கேட்கவும் அவளிடம் தான் வைத்திருந்த லெட்டரை தந்தார். அதை வாங்கியவள் அமைதியாக படிக்கலானாள். படித்த உடன் குழம்பியபடியே

”மாமா எனக்கு இது புரியலை புதுசா பிசினஸ் தொடங்கப்போறீங்களா மாமா”

”புதுசா இல்லை என்னோட நண்பன் லண்டன்ல இருக்கான் பேரு சிவநாதன் அவனோட  மூத்த பையன் இந்த தஞ்சாவூர்ல ஒரு ப்ரான்ச் ஆரம்பிக்கப்போறானாம் ஒருவேளை ப்ரான்ச் ஆரம்பிச்சிட்டாங்கன்னா என்னைத்தான் அந்த ப்ரான்ச்சுக்கு பொறுப்பாளியா போடப்போறாங்களாம்” என சொல்ல உள்ளம் மகிழ சந்தோஷத்துடன் சிரித்தாள் மீனா

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”மாமா சூப்பர் மாமா” என்றாள் குதூகலத்துடன் அவரோ ம்க்கும் என தொண்டையை கனைக்கவே அவள் அமைதியாகி

”சாரி மாமா இது ரொம்ப நல்ல ஆஃப்ரா இருக்கே மாமா ஒரு ப்ரான்ச் பார்த்துக்கனும்னா அவங்களுக்கு உங்க மேல எவ்ளோ நம்பிக்கையிருக்கனும்”

”நம்பிக்கையெல்லாம் சரி ஆனா இப்ப என்னால எப்படி அதை பார்த்துக்க முடியும்” என கேட்க அவரின் மனைவி வள்ளி அங்கு வந்தார்

”ஏன் பார்த்துக்க முடியாது. இந்த லெட்டர் வந்து 1 வாரம் ஆகுது அதையே நினைச்சி பார்த்து பார்த்து முடிச்சிட்டீங்க இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியலைன்னா எப்படி பால்பண்ணையில வேலை பார்த்தவர்தானே அதே போல இந்த புதுசா ஆரம்பிக்கற கம்பெனியையும் பார்த்துக்கறதுல என்ன பிரச்சனை வந்துடப்போகுது” என காட்டமாக பேச அதற்கு குமரவேலோ

”வள்ளி உனக்கு எத்தனை முறை சொல்றது இந்த கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது எனக்கு தெரிஞ்சதெல்லாம் பால், மாடு, பசு இதுதான் இது ஏதோ கண்ணாடி தயார் பண்ற பேக்டரியாம் இதை எப்படி நான் பார்த்துக்குவேன் அனுபவம் இல்லாம போனாகூட பரவாயில்லை நாள் போக போக கத்துக்கலாம் ஆனா வேலையை பத்தியே விவரம் தெரியாம அதுல காலை விட்டா என்னாகும் நஷ்டமாகும்” என சொல்ல மீனாட்சியோ

”மாமா அப்படி சொல்லாதீங்க இந்த லெட்டர்ல வெறும் கண்ணாடி தயார் செய்றதுன்னுதானே போட்டிருக்காங்க மத்தபடி எந்த மாதிரி க்ளாஸ் பேக்டரி என்ன ஏதுன்னு சொல்லலையே ஒருவேளை வேலையை பத்தின விவரங்கள் பார்த்தா கூட போதுமே உங்களுக்கு ஈசியா இருக்குமே”

”அது எப்படி முடியும்”

“மாமா இந்த லெட்டர்ல லண்டன் பேக்டரியை பத்தின வெப்சைட் அட்ரஸ் இருக்கு அதுல போய் பார்க்கலாம் என்னதான் தயாரிக்கறாங்க அதை எப்படி செய்றாங்கன்னு ஓரளவுக்கு விளங்கிடும் அப்புறம் ஈசிதானே மாமா எப்படியும் ஆளுங்களை வேலைக்கு போடுவாங்க உங்களை சூப்பர்வைசரா வைப்பாங்கன்னு நினைக்கிறேன் ஏதாவது பிரச்சனை வந்தா அதை சரிசெய்யனும் அவ்ளோதான்”

என இயல்பாக சொல்ல குமரவேலுக்கு மட்டும் மனதில் ஒருவித அச்சம் எழுந்தது. அந்த அச்சத்தின் பிரதிபலிப்பு அவரின் முகத்தில் தெரிந்தது

”அப்படியில்லை மீனா இது சரியா வருமா” என சந்தேகமாக கேட்க அதற்கு வள்ளியோ

”எல்லாம் சரியா வரும் வீடு தேடி வந்த மகாலட்சுமியை வேணாம்னு சொல்லிடாதீங்க இங்க ப்ரான்ச் ஆரம்பிச்சிட்டு உங்க பொறுப்பில விட்டுட்டு போயிடப்போறாங்க அப்புறம் நீங்கதான் எல்லாமே லண்டன்னு சொல்றாங்கன்னா கண்டிப்பா கை நிறைய சம்பளம் தருவாங்க விட்டுடாதீங்க பொண்ணுக்கும் தேவையான நகை நட்டு வாங்கி காலாகாலத்துக்கு கட்டிக் கொடுத்து அனுப்பனும்ல”

என சொல்ல அதைக்கேட்ட குமரவேலோ சிரிப்புடன்

”அடிப்போடி பைத்தியக்காரி சம்பளமாமே சம்பளம் அடியேய் வள்ளி நல்லா காது கொடுத்து கேட்டுக்க இங்க வைக்கற ப்ரான்ச்ல நான் ஒரு பார்ட்னராம்” என சொல்லி சிரிக்க வள்ளி வாயை ஆவென திறந்து ஆச்சர்யமாக

”நிஜமாவா சொல்றீங்க”

“பின்ன என்னை யார்ன்னு நினைச்ச” என கெத்தாக சொல்ல அதைக்கேட்டதும்

”அது எப்படி மாமா உங்களை பார்ட்னரா சேர்த்துக்கறாங்க” என மீனா வெகுளியாக கேட்க அதைக்கேட்ட வள்ளியோ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாVAK 2018-11-26 18:50
Niranjanuku Meenatchiah? Anandhiya? nice update mam. keep rocking :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-22 17:07
வள்ளியோட பேச்சு எரிச்சலா இருக்கு மீனாவோட நல்ல உள்ளம் யாருக்குமே புரியலை ஈஸ்வரன் காணற கனவு நல்லாயிருக்கு யார் அந்த பத்மாவதி நிரஞ்சனும் அவனோட அம்மா வர்ற சீன் எல்லாம் ஜோக்கா இருக்கு எப்படியோ ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க இனி இவங்களால தஞ்சையில என்னென்ன நடக்குமோ மீனா யாரை விரும்புவாளோ
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாராணி 2018-11-22 17:05
கனவு நன்றாக உள்ளது. நிரஞ்சன் வர்ற இடமெல்லாம் ஜாலி, பத்மாவதி யாருன்னு அடுத்த எபியில சொல்லிடுங்க
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாAdharvJo 2018-11-22 15:57
Kanavaaaaa facepalm :D BTW ippo tatto eppudi irukkum ena logic la he is searching it :Q: cool and interesting flow sasi ma'am :clap: :clap: anna vida baby bro is sema fast and cute wow Innum baby-a ve irukangale ji :P
Kumar uncle unga parandha manasukula oru kutti perasai vera irukkungale pa no prob unga daughter kaga thana :o but hero sir is for meena ninga over-ah kanavu kanadhinga appadi-a andha aunty-a konjam adaki vasika solunga like mega aunty :yes: Thank you and keep rocking. Waiting to meet Padmavati aka Meenatchi in live performance ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாmahinagaraj 2018-11-22 11:50
வித்தியாசமான கதை சூப்பர் மேம்... :clap: :clap:
ஈஸ்வர் கனவு செம.... :GL: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகாsaaru 2018-11-21 23:13
Nice update
Kanavu super
Paddu meena va
Ila Nathi
ah
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top