(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 34 - தேவி

Kaathalana nesamo

ன்றைக்குக் காலையில் சுமித்ராவின் புலம்பல் அதிகமாக இருந்தது.

காலை சாப்பாட்டு மேஜையில் எல்லோரும் அமர்ந்து இருக்க, சுமித்ராவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

“என்ன கொடுமை சரவணா இது? என்று ஆரம்பிக்க, வழக்கமாக அவளுக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் ஷ்யாம் ஏதோ யோசனையில் இருக்க, மித்ராதான்

“என்ன ஆச்சு சுமி?” என்றாள்.

“எல்லாம் அந்த சிடுமூஞ்சி சிங்காரம் பண்ணுற வேலைதான். “ என்றாள்.

“ஏண்டி சேகர் அண்ணாவ அப்படிச் சொல்ற?

“பின்ன என்ன மிது? என்னை மாதிரி ஒரு பச்சைப் புள்ளைய, நடுராத்திரி ஏழு மணிக்கு ஹாஸ்பிடல் வரணும்னு சொல்றான்?

ராம் சுமித்ராவைப் பார்த்து முறைத்தபடி “என்ன பேச்சு இது சுமி? மரியாதை இல்லாமல்?” என்று கடிந்து கொள்ள, சற்று முகம் கன்றியபடி

“சாரிபா..” என்று சுமித்ரா மன்னிப்பு கேட்டாள்.

சுமித்ராவை சமாதனப் படுத்த, மித்து

“சுமி, எனக்கு ஒரு டவுட் ? என்று கேட்டாள்.

“சொல்லு தாய்க்குலமே

“ஏழு மணி எப்போடி நடுராத்திரி ஆச்சு? அது சாயங்காலம் தானே?

“ எனதருமை அண்ணியே.. நான் சொன்னது காலை ஏழு மணி.. “

“காலையில் போறதுக்கு நீ ஏன் இவ்ளோ அலப்பறை பண்ணிட்டு இருக்க?

“ஹலோ அது எல்லாம் உன்ன மாதிரி ஆன்டிக்கு தான் காலை. என்னை மாதிரி யூத்க்கு எல்லாம் நடுராத்திரி”

“அடிங்க. நான் உனக்கு ஆன்டியா?

“எஸ். மை டியர். எப்போ நீ கல்யாணம் என்ற கடலுக்குள்ளே தொபுக்கடீர்ன்னு குதிச்சியோ அப்போவே நீ எங்களைப் போன்ற யூத் என்ற அரங்கத்திலிருந்து வெளியேறி ஆன்ட்டி என்ற பதத்தை அடைந்து விட்டாய். “

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அடிப்பாவி.. என்னடி இப்படி ஒரு செந்தமிழில் பேசிட்டு இருக்க? மூளைக்குள்ளே இருக்கிற நட்டு, போல்ட் ஏதாவது கழண்டு போச்சா? கொண்டு போய் மெக்கானிக் ஷாப்லே விட்டுட்டு வா”

“என்னை கலாயிசிட்டியாக்கும்.

“யா. யா.. இட்ஸ் மீ”

“ரொம்ப பெருமைப் பட்டுகாதே. எல்லாம் அந்த சேகரன் படுத்தற பாடு” என்று புலம்பியவள்,

“அட சேகரா.. என்னை இப்படி புலம்ப வச்சு, இந்த புள்ளப் பூச்சி எல்லாம் கலாயிக்கிற அளவிற்கு வச்சுட்டியே. இது உனக்கே அடுக்குமா? “ என்று சலித்துக் கொண்டாள்.

மைதிலி “சுமி, என்ன இது இப்படி எல்லாம் புலம்பிகிட்டு இருக்க? நீ படிக்கிறது டாக்டர்க்கு. நேரம் காலம் பார்க்காம செய்ய வேண்டிய தொழில் கூட இல்லை, சேவை. படிக்கும் போதே இப்படி புலம்பினால், டாக்டர் ஆன பின்னாடி என்ன பண்ணுவ?

சுமித்ரா பதில் சொல்லுவதற்குள் மித்ரா

“அத்தை, சுமிய பற்றி நமக்குத் தெரியாதா? சும்மா நம்மகிட்டே இப்படிப் பேசுவா. அங்கே கிளம்பி போயிட்டானா வேலை, பேஷன்ட் தவிர வேறே எதுவும் தெரியாது. நீங்க கவலைப் படாதீங்க” என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசினாள்.

ஷ்யாமிடம் திரும்பிய சுமித்ரா,

“அண்ணா, நீயாவது உன் பிரெண்ட் கிட்டே சொல்லேன். சூரியனுக்கு அலாரம் வைக்கிற வேலைய நானும் , எங்க அப்பாவும் பார்த்துக்குவோம். அந்த பச்சைப் புள்ளைய விட்டுடுன்னு”

இத்தனை நேரம் நடந்து கொண்டு இருந்ததை ஷ்யாமின் கண்கள் மட்டுமே பார்த்து இருக்க, அவன் மனமோ எங்கோ இருந்தது.

அதனால் சுமித்ரா அண்ணா என்று கூப்பிட்டதும், அவளிடத்தில் கவனம் திருப்பியவன், அவள் கூறியதைக் கேட்டதும், எந்த கோபத்தையோ சட்டென்று அவளிடத்தில் வார்த்தைகளாக வெளியிட்டான்.

“சும்மா. என்ன கேலியும், கிண்டலும். அவன் எவ்ளோ பெரிய ஸ்பெஷலிஸ்ட்  தெரியுமா? உனக்கு ஒரு எக்ஸ்போஷர்க்காக அவன்கிட்டே இன்டர்ன்ஷிப் சான்ஸ் வாங்கிக் கொடுத்தால், ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதே. முடிஞ்சா போ. இல்லையா எதுவும் பண்ணாமல் பெஞ்ச் தேச்சுட்டு வா” என்று பொரிந்து கொட்டினான்.

அவன் பேசியதைக் கேட்ட வீட்டில் உள்ள அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். சுமித்ராவினால் தாள முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய, எழுந்து சென்று விட்டாள்.

சுமித்ரா எண்ணியது தன் கேலியைப் புரிந்து, அதே போல் திருப்பி கிண்டலடிப்பான் என்று தான். ஷ்யாம் திடீரென்று கோபப்படவும், அதிலும் சின்னக் கேலிக்காக எனவும் அவளால் தாங்க முடியவில்லை. அழுது கொண்டே தான் வழக்கமாக எடுத்துக் கொண்டு போகும் பாக்கொடு வெளியில் வந்து, வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல், டிரைவரை வண்டி எடுக்கச் சொல்லிக் கிளம்பி விட்டாள்.

மைதிலி “ஏய், சுமி.. லஞ்ச் எடுத்துட்டு போகலையா? என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே கார் கிளம்பிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.