(Reading time: 13 - 26 minutes)

“ஏண்டா?

“ஒரு செமினார் ஒன்னு போகனும்டா. என்னோட ஒருத்தர்க்கு அலோவ்ட் உண்டு. அதான் அவளைக் கூட்டிட்டுப் போனால், அவளோட இன்டர்ன்ஷிப் பிரெசென்ட்டேஷன் போது, இந்த செமினார் பற்றியும் சேர்த்தால், ஸ்கோர் நல்லா இருக்கும். அதோட அவளோட ஹையர் ஸ்டடிக்கும் உபயோகமா இருக்கும்”

“ஒஹ் . அப்படியா . சரி சரி.”

“ஏண்டா.. நான் அவளைக் கூட்டிட்டு போகக் கூடாதா? இல்லை என் மேல் நம்பிக்கை இல்லையா? என்று ஒருமாதிரிக் குரலில் வினவினான் சேகர்.

“போடா. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? எங்க வீட்டு வானரம் பற்றித் தான் உனக்குத் தெரியுமே. சோம்பேறி. காலையிலே ஏழு மணி அம்மையாருக்கு நடுராதிரியாம். காலையிலேயே வீட்டில் பஞ்சாயத்தக் கூட்டிட்டா. என்னை வேறே உன்கிட்ட ரெகமெண்டேஷன் பண்ணச் சொன்னா. நான் நல்லாத் திட்டிட்டு வந்துட்டேன். ஆனால் மனசுக் கேக்கலை. அதான் உன்கிட்ட என்னன்னு விசாரிச்சேன். மற்றபடி ஒன்னும் இல்லை”

“ஒஹ். சரி. சரி. அவளை செமினார் அழைச்சுட்டுப் போறதில் உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?

“ச்சே..ச்சே.. அது எல்லாம் இல்லைடா. உன் பாதுகாப்பில் தானே வரப் போறா? நோ ப்ரோப்லேம். ஓகேடா . பாய்” என்று கூறி வைத்து விட்டேன்.

அதை அப்படியே சுமியிடம் சொல்லவும், அவளுக்குக் கண்கள் லேசாகக் கலங்கியது. பாவம் ஷ்யாமிற்கு என்ன டென்ஷனோ , அதான் அப்படிக் கத்தி விட்டான் என்று எண்ணிக் கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சேகர் மீண்டும் ஏதோ கேட்கவும் என்ன என்று பார்த்தாள்.

“மேடம். இப்போவாவது கிளம்பி ரெடி ஆகி வரீங்களா?

“எஸ் டாக்டர். பத்து நிமிஷத்தில் வரேன்” என்று விட்டு தன் சீட்டிற்கு சென்று தேவையானதை எடுத்துக் கொண்டு வந்தாள்.

ஷ்யாம் ராம் ஆபீஸ் வந்த சிறிது நேரத்தில், நேராகத் தன் தந்தையின் அறைக்குச் சென்று, சுமியை சேகர் சீக்கிரம் வரச் சொன்னக் காரணத்தை விளக்கிச் சொல்லவும் , ராம்

“ஷ்யாம், இது எல்லாம் நமக்கு என்னத் தெரியும்? சுமிக்கு ஓகே என்றால் சரி. அதோடு சேகர் பற்றியும் நமக்குத் தெரியும். நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை” என்று கூற,

“அப்படி இல்லைப்பா. சேகர் என் நண்பன் என்பதோடு, இந்த வயதிலேயே தொழிலில் நல்ல பெயர் எடுத்தவன் என்பதால் தான் சுமியின் இன்டர்ன்ஷிப்பிற்கு அவனிடத்தில் அனுப்பினேன். ஆனால் அது உறுத்தக் கூடாது இல்லையா?

“ஷ்யாம், நீ சுமியின் அண்ணன். அவளிடத்தில் உனக்கு உரிமை உண்டு. சுமிக்கும் அது தெரியும். அதனால் அதைப் பற்றிக் கவலைப் படாதே. சுமியே அவளின் பிரச்சினைகளை சமாளிப்பாள்”

“ஹ்ம்ம். சரிதான்” என்றபடி எழுந்தான். ராம் “ஷ்யாம் “ என்றுக் கூப்பிட்டு நிறுத்த,

“சுமியைப் பற்றிக் கவலைப்பட்டது , இப்போ எல்லாம் விசாரித்துச் சொல்வது எல்லாம் சரி. ஆனால் காலையில் சுமித்ரா, மித்ரா ரெண்டு பேரிடமும் அப்படி என்ன கோபம்? அந்த அளவிற்கு அவர்களைக் காயப் படுத்தி இருக்கிறாய்?

என்று கேட்க, ஷ்யாம் பதில் பேசாமல் இருக்கவும்

“உன்னுடைய கோபம் எதுவாக இருந்தாலும், அதை வெளிக்காட்டும் விதத்தில் கவனமாக இரு. சுமித்ராவாவது தைரியமானவள். இடம் , பொருள் அறிந்து உன்னைத் திருப்பி திட்டவும் தயங்க மாட்டாள். ஆனால் மித்ராவைப் பற்றி உனக்கேத் தெரியும். மனதினுள் வைத்து மருகுவாள். அது அவளைப் பாதிக்கும்”

என்று எடுத்துக் கூறினான் ராம்.

அதற்குப் பதிலாக உச் கொட்டிய ஷ்யாம் “அதுதான் இப்போ எல்லாம் அவங்க அடுத்தவங்க கிட்டே ஆலோசனை பண்ற அளவிற்கு வளந்துட்டாங்களே .. பிறகு என்ன? என்று மெலிதாக முனகினான்.

“என்ன சொல்றன்னு தெளிவா சொல்லு? “ ராம் மீண்டும் கேட்கவும்,

“ஒன்னும் இல்லைப்பா. இனிமேல் பார்த்துக் கொள்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டுத் தன அறைக்குச் சென்று விட்டான்.

தொடரும்

Episode # 33

Episode # 35

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.