(Reading time: 13 - 26 minutes)

மைதிலியே அவள் ஒருமாதிரி அப்செட்டாக இருந்தால் ஆபீஸ் வரவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று எண்ணியிருந்தாள். அவள் தெளிவாக இருக்கவே, இதுவே நல்லது என்று எண்ணி மித்ராவையும் அழைத்துக் கொண்டு ஆபீஸ் சென்று விட்டாள்.

ஆபீஸ் சென்றாலும், அவளைக் கண்காணித்தபடிதான் இருந்தார். ஆனால் அவள் தடுமாறாமல் வழக்கம் போலவே இருக்கவும், சற்று நிம்மதியாக உணர்ந்தார்.

மைதிலிக்கு இன்னொரு கவலையும் ஏற்பட்டது. மித்ரா இதை ஒருவேளை சபரியிடம் கூறினால், அவளின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.

மித்ராவின் பக்கம் தவறு இருந்தாலே, தங்கள் பெண்ணின் பக்கம் தான் அவளின் பெற்றோர் இருப்பது மரபு. ஆனால் இங்கே தவறோ ஷ்யாமின் பக்கம் தான். அதிலும் ஷ்யாமிற்கு மித்ராவைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் அவளிடத்தில் கடுமையாக நடந்து இருக்கிறான் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியுமா என்று பயம் வந்தது.

இதை பேஸ் செய்யவேண்டியதும் தன்னுடைய  பொறுப்பு தான். எனவே எதற்கும் தயாராக இருப்போம் என்று எண்ணியிருந்தாள். மைதிலிக்கும் ஒன்று நன்றாகத் தெரியும். இதைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அது மைதிலியிடம் மட்டுமே இருக்கும். ராமிடம் கேட்க மாட்டார்கள். ராம் சபரியின் அண்ணன். அவனிடத்தில் கோபமாகவோ, வருத்தமாகவோ கேட்டால், அண்ணா வருத்தப்படுவான். அவர்கள் அண்ணன் தலைக் குனிய சபரியே விடமாட்டாள். எனவே இந்த மொத்த வருத்தமும் தன் மேல் தான் விழும் என்று உணர்ந்து இருந்தாள்.

ஆனால் இதைப் பற்றி மித்ரா சபரியிடம் பேசியிருக்கவில்லை. அது மைதிலிக்குத் தெரியாது.

மைதிலியும் , மித்ராவும் தங்கள் வேலைகளை வழக்கம் போல் முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.

சுமித்ரா அன்று காலையில் ஷ்யாமின் மேல் கோபம் அதிகம் வந்தாலும், அதை வெளிக் காட்டாது ஹாஸ்பிடல் சென்று அவள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.

இவளைச் சீக்கிரம் வரச் சொல்லிய சேகர் வழக்கம் போலே தான் தன் மருத்துவமனைக்கு வந்தான்.

சேகர் மேலும், ஷ்யாம் மேலும் உள்ள கோபத்தில் யாரிடமும் பேசாது வேலைகளைப் பார்க்க அது வழக்கத்தை விட சீக்கிரமாக முடிந்து போனது.

சேகர் வந்தவுடன் அவனிடம் அவள் ரிப்போர்ட் செய்ய சென்றாள். அவளின் முகத்தில் இருந்த கோபத்தையும், களைப்பையும் பார்த்த சேகர்,

“என்னாச்சு சுமி? ஏன் டல்லா இருக்க?

உச் கொட்டியவள் “ஏன் டாக்டர் சார், என்ன வேலை இருக்குன்னு என்னைக் காலையில் சீக்கிரமாவே வரச் சொன்னீங்க? பாருங்க. நான் இருந்த மூடில் ஒரு நாள் பூரா செய்யற வேலையை ரெண்டு மணி நேரத்தில் செஞ்சு இருக்கேன்? ஏன் சார் உங்களுக்கு இந்தக் கொலை வெறி?

“ஏழு மணிக்குத் தானே வரச் சொன்னேன்? என்னமோ நாலு மணிக்கே வரச் சொன்ன மாதிரி அலுத்துக்கறே?

“நல்லவேளை நாலு மணின்னு சொல்லிருந்தீங்கன்னா நான் தூங்கி இருக்கவே மாட்டேன்”

“ஏன்? நாலு மணிக்குத் தூங்காம என்ன பண்ணிருப்ப?

“ஹான்.. நான் விஜய் தேவாரகொண்டா வோட இன்கேம் இன்கேம் காவாலான்னு டூயட் பாடிட்டு இருந்து இருப்பேன்”

“ஹ..உன் ரேஞ்சுக்கு இன்கேம் இன்கேம் கொஞ்சம் ஓவரா தெரியல?

“ஏன்.. எனக்கு என்ன குறைச்சலாம்?

அவளை ஏற இறங்கப் பார்த்தபடி “குறைச்சல் எல்லாம் ஒன்னும் இல்லை. நல்லா குண்டுப் பூசணிக்காய் மாதிரி இருந்துட்டு, நோட்டா விஜய் கேட்குதா?

என்றான் சேகர்.

“ஹா.. யாரு குண்டுப் பூசணிக்காய்? அந்த ஹீரோயின்க்கு நான் எவ்ளோ தேவலாம்” என்று சுமி பழிப்புக் காட்டினாள்.

“நினைப்புதான்” என்று பதில் கொடுத்தான் சேகர்.

பின் “அதை விடுங்க. என்னை ஏன் சீக்கிரம் வரச் சொனீங்க?

“இன்னிக்கு பதினொரு மணிக்கு , கார்டியாக் சம்பந்தமா ஒரு செமினார் இருக்கு ஹோட்டல் ஐ.டி.சியில். ஒரு வாரம் நடக்கும். உனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்குமேன்னு பார்த்தா, அண்ணனும், தங்கச்சியும் என்ன பில்ட் அப் கொடுக்கறீங்க?

அவன் சொன்ன மற்றதை விட்டுவிட்டவள்,

“அண்ணா சொன்னனா? என்ன சொன்னான் ? எப்போ பேசினான்?

சேகர் அவளை மேலும் கீழுமாகப் பார்த்தபடி சொன்னான்.

சேகர் ஹாஸ்பிடல் புறப்படும் முன் ஷ்யாம் போன் செய்தான்.

“சேகர் , ப்ரீயா இருக்கியா? பேசலாமா?

“பிரீதாண்டா.. இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு ஹாஸ்பிடல் கிளம்பினா போதும்? என்றான்.

“ஓஹ. என்னடா சுமிய சீக்கிரம் வரச் சொல்லிருக்கியா?

“ஆமாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.