Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

“அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம் டா, அவளோட வாழுற வழியை பாருன்னு சொல்றோம்” என்று பாட்டி அவன் முன் வந்து நிற்க

“அவளோடையா நானா, கனவுல கூட நடக்காது” என்று அவன் சொல்ல   

“ஏன் டா?” என்று கோபம் அடைந்தார் வள்ளி.

“ஏன்னா? என்னத்த சொல்றது?” என்றவன் “எனக்கு அவளை பிடிக்கல” என்று சொல்லவும்

“டேய்”என்று தொடங்கிய வள்ளியை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்த பாட்டி “அப்போ வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க

திக்கென பார்த்தனர் கதிரும் வள்ளியும்!!

“அத்தை!” என்று அதிர்ந்த வள்ளியை கண்டு கொள்ளாமல் “சொல்லுடா வேற கல்யாணம் பண்ணிக்கிறியா?”

“அது என்னால இப்போ சொல்ல முடியாது ஹனி பட் இவ வேண்டாம்” என்று சொல்ல வள்ளி முறைத்தாள்.

 பாட்டியோ “சரி முதல்ல இவளை அத்துவிடு அப்பறம் பேசுவோம்” என்று சொல்லிவிட கதிரே அதிர்ந்தான்.

“என்ன ஹனி சொல்ற?”

“புரியல? முதல்ல அவளை டைவர்ஸ் பண்ணுடா அதான் அவ வேண்டாம்னு சொல்ற இல்ல” என்று சொல்லிவிட்டு செல்ல

வள்ளிக்கு வந்த கோபத்திற்கு இருவர் முதுகிலும் சாட்டையால் நன்கு விலாச வேண்டும் போல் தோன்ற ஏதும் பேசாமல் அவளும் சென்றுவிட்டாள்.

மெல்ல அந்த ஆல்பத்தை புரட்டி பார்த்தவன் அதை தூக்கி தூர எறிந்தான்.

சண்முகம் இது குறித்து எதையும் கேட்டு கொள்ளவில்லை.

எந்த வேலையும் இன்றி வீட்டில் வெட்டியாய் அமர்ந்திருக்க முடியவில்லை அவனால். அப்படி அமரவும் வேண்டாம் என்று சிகிச்சை பெற்ற போது ஆலோசனை வழங்கி இருந்தனர் அவனுக்கு.

ஆனால் என்ன செய்ய என்று யோசித்தவன் அசோக்கை தொடர்பு கொண்டு “நான் நாளைல இருந்து கம்பெனிக்கு வரேன்” என்று சொல்ல

“அய்யயோ எதுக்குடா?” என்று பதறினான் அசோக்.

“டேய் அது என் கம்பனிடா” என்றான் கதிர்.

“அது அப்போ, இப்போ அது உன் அப்பா கம்பெனி.”

“என்னை ஏமாத்தி வாங்கிட்டாங்க எல்லாத்துக்கும் அவ தான் காரணம்.”

“ஆரம்பிச்சுட்டியா அவ மேல பழி போட.”

“டேய் நீ என் பிரென்ட் நியாபகம் இருக்கட்டும்.”

“யாருடா இல்லன்னு சொன்னது? சரி விடு கொஞ்சம் வெயிட் பண்ணு நான் MD கிட்ட பேசுறேன் டா அது வரைக்கும் கம்பெனி டீடெயில்ஸ் எல்லாம் பாரு, ஐடியா சொல்லு எங்களை கைட் பண்ணேன்” என்று அசோக் கெஞ்சுதலாய் கூறவும்

“சே என் கம்பெனிக்கு நான் வரதுக்கு கண்டவன்  எல்லாம் ரெகமெண்டேஷன்  பண்ண வேண்டி இருக்கு”என்று சொல்லிவிட்டு கதிர் அழைப்பை துண்டிக்க

அசோக் மனம் வலிக்கத்தான் செய்தது. அவன் இயல்பை பற்றி அறிந்தவன் அதனால் அவன் பேச்சுக்களை அவன் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் இளா பெரிதாய் பாதிக்கப்பட்டாள். என்ன தான் அதை முகத்தில் பிரதிபலிக்காத போதும் இப்போதெல்லாம் ஒருவித சோகம் அவள் மனதில் இருப்பது போல் உணர்ந்தான் அசோக்.

அது கதிர் கொடுக்கும் குடைச்சலால் என்று எண்ணியவன் கதிருக்கு  சிகிச்சை அளித்தவருடன் தொடர்பு கொண்ட போது குடியில் இருந்து மீண்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது இயல்பான ஒன்று என்றும் அவர்களின் இயற்கை இயல்பை பெற சிறிது காலம் ஆகும் என்று சொல்ல அதையே அனைவரிடமும் சொல்லிவைத்தான் அசோக்.

ஆனால் அதுவரை கதிர் பொறுத்திருக்கவில்லை, தான் இந்தளவு குடிகாரனாகி இருந்ததையே செரிக்க இயலாத அவனால் ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருக்கிறோம் என்பதை ஒரு சதவிகிதம் கூட ஏற்று கொள்ள முடியவில்லை. தனது குற்ற உணர்ச்சியை கோபம் என்ற முலாம் பூசி வெளிப்படுத்தினான் கதிர்.

அன்றும் அப்படித்தான் மாலை வேளை இளம்பிறை  வீடு திரும்பிய நேரம். வள்ளியோடு வெகுவாய் கத்தி கொண்டிருந்தான் கதிர்.

அவன் கையில் விவாக ரத்து பத்திரம்!!!

எப்படியாவது அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வள்ளி தன்மையாக இளம்பிறைக்கு ஆதரவு காட்டி பேச, வெகுண்டு எழுந்துவிட்டான் அவன்.

இருந்த கண் மண் தெரியாத கோபம் அவள் மேல் பாய தொடங்கியது

“ஏய் சும்மா சும்மா தியாகி பட்டம் வாங்க ஆசை படாத” என்று எடுத்த எடுப்பில் பேச

அவளோ அமைதியாக இருந்தாள்

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாsaaru 2018-10-15 15:02
Semaaa paati matramum thooolll
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-10-15 11:47
ரொம்ப சூப்பர் மேம்.... :clap: :clap:
பாட்டியோட வயசும்,அனுபவும் நிச்சயம் கதிர்-இளா சேரவைக்கும்... :yes: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாChillzee Team 2018-10-15 06:41
intriguing and curiosity building epi Prama ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாSAJU 2018-10-14 21:01
ADAAAAAAA LOOOSUUUUUUUU KATHIRUUUUUUU
PAATTIMAAAAAA SIRIPPU SARIILLAIYAAAAAAAAA
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-10-14 19:41
wow beauty ninga kuda konjam nalavangala irukingale not bad!! (y) interesting update ma'am :clap: :clap: kadhir kudikarana irundhapave good boy irundharu...theliyavaikuren solli ippadi mathitingale facepalm sariyana potti uncle ninga super :dance: ippadi Oru chance kaga wait panittu irundhigalo aunty-i divorce pana :P kadhiiiii calm down ipo ethukku murukittu poringa :Q: miss panuringalo :D Nala feel panunga.... Ninga vitta ambu return varum let's wait watch.....prama ma'am ilave en ippadi torture panuringa steam look forward for next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top