(Reading time: 15 - 30 minutes)

“கொஞ்சம் பைனான்ஸ் லோன் எல்லாம் போட்டாலும் படம் எடுக்கும் அளவு பத்தாது மாமா”

“நம்ம நிலத்தை எல்லாம் அடமானம் வைத்து பணம் புரட்டிடலாம்.  வாய்ப்பு நம்மை தேடி வரலைனா நாம தான் வாய்ப்பை உருவாக்க வேண்டும்” மாமனார் வழி சொல்ல மனைவியும் துணை நிற்க சொந்தமாக படம் தயாரித்து இயக்க முடிவு செய்தார் முத்துக்குமரன்.

படம் தயாரிக்கும் ஆயத்த பணிகளை முத்துக்குமரன் மளமளவென செய்திட படத்தின் பூஜைக்கான நாளும் வந்தது.

யல் ப்ரோடக்ஷன்ஸ்’ என்ற பேனர் ஒளிர குத்துவிளக்கை ஏற்றி வைத்த கயல்விழி தள்ளாடி மயங்கி விட அங்கே இருந்த அனைவரும் அதை அபசகுனமாக கருதி சலசலக்கும் முன்பே கயல்விழி கருவுற்றிருக்கும் இனிமையான செய்தியை வள்ளி முத்துக்குமரனிடம் தெரிவித்தார்.

“அத்தை தம்பி பாப்பா என்னை அக்கான்னு கூப்பிடறான்” அங்கே இளங்கோ அமர்ந்திருப்பதைப் பார்த்த வானதி வேண்டுமென்றே உரக்கக் கூறினாள்.

“வானதி சும்மாவே இருக்க மாட்டியா. எப்போ பாரு அவனோட மல்லுக்கு போறதே உனக்கு வேலையா போச்சு” இளமாறன் சொல்லிக் கொண்டே இருக்கவும் அங்கே கோபம் பொங்க வந்து நின்றான் இளங்கோ.

அவன் ஏதும் சொல்லும் முன்பே வானதி கயல்விழியின் மேடிட்ட வயிற்றில் கை வைத்துக் கொண்டு, “நீ தங்கச்சி பாப்பா தானா. உனக்கு இளங்கோ அண்ணாவை தான் ரொம்ப பிடிக்குமா” என்று குழந்தையிடம் பேசுவதைப் போல இளங்கோவைப் பார்த்துக் கொண்டே கூறவும் முகம் நிறைய சிரித்து வைத்தான்.

“மாறா இன்னிக்கு மழை பிச்சிட்டு பெய்ய போகுது. சிடுமூஞ்சி சிரிக்குது பாரு” தனது நண்பனின் காதைக் கடித்தாள் வானதி.

ஆனாலும் இளங்கோவின் சிரிப்பைக் கண்ட வானதிக்கும் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கயல்விழி கருவிலும் கயல் ப்ரொடக்ஷன் படப்படிப்பிலும் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தன.

மொத்த படப்பிடிப்பும் எட்டே மாதங்களில் நிறைவுற்ற போதும் படத்தை திரையரங்குகளில் வெளியிட யாரும் முன் வரவில்லை.

“என்ன முத்து, எல்லோரும் புது முகம். ஒரு டூயட் இல்ல, ஒரு ஆக்ஷன் சீன் இல்ல. நல்ல கதையா இருந்தாலும் படம் எப்படி ஓடும்” கையை விரித்தனர் விநியோகிஸ்தர்கள்.

“ஒரு மாசம் ஆச்சு. யாரும் படத்தை வெளியிட முன் வரலைனா தைரியமா நீயே வெளியிட வேண்டியது தானே”

“மாமா படம் ஓடலைனா நமக்கு பெரிய நஷ்டமா போய்டும்” ஏமாற்றத்துடன் கூறிய கணவரை தேற்றும் வழியறியாது அமர்ந்திருந்தார் கயல்விழி.

“இங்க பாரு முத்து. எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் ஆயிரம் தடவை யோசிக்கலாம். ஆனா அதிலே இறங்கிட்டா அதிலே கடைசி வரை போராடி பார்த்திடணும். உன் குழந்தையை நீயே முதல்ல ஏத்துக்கலைன்னா எப்படி” மாமனார் கூற நிறைமாத மனைவியின் வயிற்றை பார்வையாலேயே ஆசையாக வருடிக் கொடுத்தார்.

இரு வளர்ந்த மகன்கள் இருந்த நிலையில் எதிர்பாராத போது கடவுள் அளித்த வரமாகவே இக்குழந்தையைக் கருதினார்.

“சரி மாமா, படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யறேன்” ஒரு புது உத்வேகத்தோடு செயல்பட்டார்.

ந்த வெள்ளிகிழமை படம் வெளியிட ஏற்பாடுகள் செய்த நிலையில் பிரபல நடிகரின் படம் ஒன்றும் வெற்றிப்பட இயக்குனரின் படம் ஒன்றும் அதே நாளில் வெளியாக இருப்பதை அறிந்த முத்துகுமாருக்கு இப்போது சற்றே கலக்கம் ஏற்பட்டது.

“முத்துக்குமார் சாரி. உங்க ப்ரேவியூக்கு வர முடியாத நிலை” புதுப்பட இயக்குனரின் பட முன்னோட்டத்திற்கு யாரும் பெருமளவு வருகை தராத நிலையில் குடும்பத்தினர் மற்றும் உற்ற நண்பர்களுக்கு மட்டுமே காட்சியிடப்பட்டது.

படம் எப்படி இருந்தது என்று முத்துக்குமரனும் கேட்கவில்லை. யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

அன்றைய இரவு கயல்விழி ஆனந்தமாக உறங்கினார். மனைவியின் தெளிந்த முகத்தைக் கண்ட முத்துக்குமரன் மனதில் ஆயிரம் யானையின் பலம் குடிகொண்டது.

குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் மதியக் காட்சியாக முத்துக்குமரனின் படம் வெளியிடப்பட்டது. அதே நேரம் கயல்விழிக்கு வலி எடுக்கவே மருத்துவமனையில் அனுமத்திதனர்.

யாருக்கும் படத்தைப் பற்றிய எண்ணமே எழவில்லை.

பள்ளியில் இருந்து திரும்பிய குழந்தைகள் பூட்டிய வீட்டைக் கண்டு பதற்றம் கொள்ளவே முத்துக்குமரனின் படக்குழுவில் லைட்பாயாக இருந்த சேகர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

“அண்ணா, மகாலட்சுமி பிறந்திருக்கா” வள்ளி முத்துக்குமரனின் கைகளில் குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்த அந்த நொடி மருத்துவமனையின் கதவை திறந்து கொண்டு சேகரும் முத்துக்குமாரின் ப்ரொடக்ஷன் மேனஜரும் இனிப்புப் பெட்டிகளோடு அங்கே வந்தனர்.

“முத்துண்ணா படம் அமோக வெற்றி.  மாலை இரவு காட்சியும் ரன் செய்ய போகிறார்களாம். மற்ற தியேட்டர் ஓனர்களும் படத்தை போட கேட்டிருக்காங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.