(Reading time: 20 - 39 minutes)

மாமியிடம் தீரன் பேசிமுடித்த மறுநிமிடம் அவன் மாதவனை தொடர்புகொண்டு அன்றுபோல் காரை ஹோட்டல்விட்டு கொஞ்சம் தள்ளி நிறுத்தச்சொன்னான்.

இன்னும் பதினைந்து நிமிடத்துக்குள் தான் கார்நிற்கும் இடத்தை அடைந்துவிடுவேன் என்று கூறினான் தீரன்.

பின்பு அன்று போலவே பால்கனிக்குச் சென்று கயிற்றினால்  மரத்தின் மூலம் இறங்கி ஹோட்டலில் இருந்து  வெளியே வந்து விருவிருவென நடந்து மாதவன் அவனுக்காக காரை நிறுத்திய இடத்துக்கு வந்து ஏறிக்கொள்ளவும் கார் புறப்பட்டது.

காரில் ஏறியபின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் அனைத்தும் ஆங்கிலேயத்திலேயே இருந்தது அதை நாம் தமிழிலேயே பார்ப்போம்.

மாதவனிடம், யாழிசைக்கு அவளின் பேரில் ஒரு வங்கியின் பெயரைச்சொல்லி அங்கு அக்கவுன்ட் ஓபென் செய்துவிட்டாய் என்று தெரியும் அந்த அக்கவுண்ட ஒபெனிங் பேப்பரில் அன்று செக்புக்கில் கையெழுத்து வாங்குவது போன்று யாழிசையிடம் வாங்கிவிட்டதால் அதை யூஸ் பண்ணிகொண்டோம். மேலும் அவளுக்கு  டீமேட்  அக்கவுன்ட் ஓபன் செய்துவிட்டாயல்லவா.   அந்த பேங்க் அக்கவுண்டில் நெட் பேங்கிங் மூலம் கடந்த மூன்று நாளாக செக் மற்றும் டிடி மூலமும் எவ்வளவு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய ,முடியுமோ அவ்வளவு செய்தாகிவிட்டது .

மேலும் இமாமி இத்தனைநாள் அமெரிக்காவில் இருந்ததால் பிராங்கின் வீட்டின் பின் ஒரு ரெடிமேட் மூவிங் புட் ஸ்டால் ஒபென்செய்து அந்த ஸ்டாலினுள் சீக்ரட்டாக அமர்ந்து பிராங்க் வீட்டின் வைய்பை சிக்னல் மூலம் அவனது அக்கவுன்ட்டை ஹேக்செய்து  கொண்டு பிராங்கின் நம்பருக்கு  வரும் மெசேஜ்களை பிளாக் வேறு செய்து வைத்திருந்தான். அதனால் நாம் செய்த இந்த விஷயத்தை பிராங் மோப்பம் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போ இமாமி அங்கிருந்து மூவ் ஆகிட்டான் எனவே இன்னும் இருபத்திநாலு மணி நேரம்தான் நமக்கு உள்ளது அதற்கு பின் பிராங் அலார்ட் ஆகிவிடுவான். சோ நான் சொன்னதுபோல எல்லாம் அரேஞ் செய்துவிட்டாயா? என்று கேட்டான்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எஸ் பாஸ் ,மிஸ் யாழிசைக்கு டீமேட்  அக்கவுண்ட் ஓபென்செய்து அதில்  இ.டி.எப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேப்பர் கோல்ட் வாங்கியாகிவிட்டது. மேலும் டாப் 2௦  கம்பெனி சேர்களில் அந்த கம்பெனியின் பத்து பெர்சன்ட் ஷேர்களை யாழிசையின் பேரில்  பர்சேஸ் செய்தோம் என்றான்.

இதுபோன்ற இன்னும் பலவழிகளில் பிராங்கின் அக்கவுண்டில் இருக்கும் அமௌன்ட் மொத்தமும் தனது கையிருப்பின் கீழ வருமாறு தீரன் ஆட்டத்தை வெற்றிகரமாக ஆடி முடித்திருந்தான்.

மாதவன் ஏதோ மனதில் கேள்வியை வைத்துகொண்டு கேட்பதற்கு பயந்தோ தயங்கியோ அமர்ந்திருப்பதை கண்டுகொண்ட தீரன், கேளு மாதவா..., இமாமிக்கு அடுத்ததாக நான் நம்பிக்கை உள்ளவனாக நினைத்து உன்னை தேர்ந்தெடுத்ததினால் தான்  இத்தனை பொறுப்பை உனக்கு கொடுத்தேன்.

வெறும் காசுக்காக மட்டும் வேலைப்பார்பவனாக நீ இருந்திருந்தால் உன்னை நான் இந்த பணிக்கு தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். நீ செய்த உதவியை மறக்காதவன் என்று எனக்கு தெரிந்ததினால் தான் உன்னை இப்பணிக்கு அமர்த்தினேன் என்றான் தீரன்.

ஏனெனில் மாதவன் அமெரிக்காவில் வேளைக்கு சேர்ந்த ஒருமாதத்தில் அவனது படிப்பு செலவிற்கு அடமானம் (அதிகவட்டிக்கு கந்துவட்டி கந்தசாமியிடம் பணம் கடன் வாக்கியத்தால்) வைத்த அவனின் வீட்டு கடன் தொகையை முழுவதும் உடனே கட்டிவிடவேண்டும் இல்லையேல்  வாங்கிய கடனுக்கு வீட்டை எனக்கு எழுதிகொடுத்துவிடு என்று மிரட்டியதால் இயலாமையில் அவனது தந்தைக்கு நெங்சுவலியில் வீழ்ந்து ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுவதாக தகவல்  அறிந்த மாதவன் செய்வது அறியாமல் தவித்து தனது நண்பனின் அட்வைசின் பேரில் அவனது படிப்பு செலவுக்கு வாங்கிய கடனுக்கான ஆதாரம்  மற்றும் அவனது தந்தை தற்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருப்பதற்கான ஆதாரமாக அவரின் மெடிகல் சர்டிபிகேட் அடங்கிய பேப்பர்களை தான் வேலை பார்த்த்த தீரனின் கம்பெனி நிர்வாகத்திடம் சப்மிட் செய்து அவர்களின் உதவியை நாடினான்.

அதன் உண்மைத் தன்மையை விசாரித்து உறுதிசெய்த அவனது நிர்வாகம் அவனுக்கு அக்ரீமென்ட் பேசில் த்ரீ இயர்ஸ் வேலை கொடுத்து முன் பணமாக அவனது தேவையை ஓரளவு சமாளித்து மீளும் அளவு பணத்தை கொடுத்து உதவியது.

கான்ராக்டில் மட்டுமே நிர்வாகத்துடன் அவனுக்கு நேரடிதொடப்பு மற்றபடி அவனுக்கு பணம் இஸ்யூ செய்தது தீரனின் தனிப்பட்ட அவனின் பணத்தில் இருந்துதான். தீரன் வெளிப்பார்வைக்கு அமெரிக்கர்களை பிரதிபலிப்பவனாக இருந்தாலும் அவளின் அம்மா பத்மினி அவனுக்குள் விதைத்திருந்தது ஒரு பக்கா தமிழ் மகனைத்தான்.

எனவே அவனது கம்பெனியில் அவனை அறியாமல் அவன் தேர்ந்தெடுக்கும் நபர்களில் அதிகம் தமிழர்கள் இடம் பிடித்துவிடுவர். மேலும் அவ்வாறு அமர்த்தப்படும் தமிழ்ர்களுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வெளியில் அவனின் ஸ்டாப் என்ற போர்வையில், உள்ளத்தில் அவனின் இன உணர்வினால் அவர்களின் துயரை களைந்துவிட்டே  மறுவேலை பார்ப்பான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.