Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

விஸ்வநாதன் ஒப்புக் கொண்டதால் மட்டுமல்ல, புவனிடமும் பெரிய அளவில் எந்த மறுப்பும் இல்லாததால் சும்மா பேச்சுக்கு சொன்ன அந்த திருமணம் பெரியவர்களால் எளிமையாக  நடத்தப்பட்டது.

அதெப்படி புவன் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்?

உண்மையில் அவனுக்கு இந்த விசயத்தில் பானுமதி மேடம் மீது வருத்தம் இருந்தது. அவரிடம் அவனுக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. அவன் மறுத்தால் பானுமதி அந்த திருமணத்தை  நடத்த மாட்டார் என்று நம்பினான். அவரிடம் பேசி விளக்கம் பெற அவன்  நினைத்தபோதுதான்,  பொங்கி வரும் வெள்ளத்தை மடையை திறந்து நீரின் வழியை மாற்றுவதுபோல ‘டேக் டைவர்சன்’ போர்டை சதாதான் வைத்தாள்.

‘எல்லோரும் சேர்ந்து என்னை மாட்டிவிட பாக்குறீங்களா. தில் இருந்தா… எனக்கு தாலி கட்டி பாருங்க சார். விட்டா போதும்னு தலை தெறிக்க ஓடிடுவீங்க’ என்று மிரட்டினாள். ஒரு ரியாக்ஸனும் இல்லாமல் புவன் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கவும் அருகில் யாரும் இல்லாத தைரியத்தாலும் தூண்டப்பட்டு,

“பேய் இருக்குல்ல பேய்… இந்த காஞ்சுரி, காஞ்சனா இதெல்லாம் பார்த்திருக்கீங்கல்ல… பயங்கரமா இருக்கும். ஆனால் அதுகூட பராவாயில்லை என்று சொல்ல வைத்து விடுவேன். சதான்னா லேசுபட்டவள் இல்லை” என்று உதார்விட்டாள். கொஞ்சமாச்சும் அவனை மிரள வைக்கனும்!.

மிரட்டலா… யாருகிட்ட? இது புவன் நினைப்பு!

“ஐ ஸீ, நான்  காளியின் பக்தன். காளி தெரியும்ல… மண்டையோட்டு மாலை போட்டுகிட்டு நாக்கை தொங்க விட்டு பதினெட்டு கைகளை விரிச்சிட்டு நிக்குமே அந்த தேவிதான். வெயிட் என்னவாகுது என்று பார்க்கலாம்”.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அச்சோ பவுன்ஸ் பேக்! புவன் கையில் வேப்பிலையுடன் பேயோட்டும் கெட்டப் கிராஃபிக்ஸ்போல விசுவல்  நொடியில் வந்து போக, அவள் சட்டென கதைவசனத்தை மாற்றினாள்.

“ஓகே… ஓகே… அதெல்லாம் எதுக்கு…  நான் சும்மா சொன்னேன். விட்டுரலாமே… என்னை கல்யாணம் செய்துட்டு சிரமப்பட வேண்டாமேன்னு.. உங்க நல்லதுக்குதான் சொன்னேன்.” அவள் வாய்ஸ் டெசிபல் மாறியது.

“விட்டுரலாமே” என்று புவன் சொன்னாலும் உதட்டின் கடைகோடியில் தொக்கி நின்ற சிரிப்பு அவளை கேலி செய்தது. இது சரி வராது… சுமூகமாக சிக்கலை தீர்க்கணும்.

“எனக்கு காபிகூட போடத் தெரியாது.” என்றாள். இதற்கு முன்போலவே பதிலை எதிர்பார்த்தாள்.

‘ஐ ஸீ எனக்கு எட்டுவகையில் காபிபோட தெரியும்.. ஃபில்டர் காபி… டிகிரி காபி… இன்ஸ்டண்ட் காபி.. காபிசீனோ… எஸ்ப்ரஸோ… மச்சியடோ… மோச்சா…’ இப்படி ஏதாவது அளந்து விடுவான் என்று…

“ஓகே ரெண்டு பேரும் சேர்ந்து சுடு தண்ணீரை குடிப்போம்” என்று புவன் முடித்தான். சமைக்க தெரியாது என்று சொன்னால் இலை தழையை சாப்பிடலாம் என்று சொல்வானோ என்று யோசித்து… ரிவர்ஸ் ஆகினாள்.

“அப்புறம் உங்க தலையெழுத்து” என்று திகிலூட்டி விட்டு விலகினாள். 

இந்த விசயத்தை இப்படியே விட்டுவிட்டால் புவன் ஹீரோவாக மாற முடியாதே. எனவே அவளை மனைவியாக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தான்.

ஒரு சின்ன விளக்கம்… இதுவரை புவனுக்கு சதாவின்மீது கோபம் இருந்தாலும் அவளை வெறுக்கும் அளவிற்கு இல்லை. அவளிடமிருந்து ஒரு விளக்கம் அத்துடன் மன்னிப்பு கோரும் வார்த்தைகலள்தான் எதிர்பார்த்தான்.

[ஏன் அவனுக்கு அவள்மீது கடுமையான கோபம் வரவில்லை…? அவள்தானே ஹீரோயின்.. அப்புறம் எப்படி வெறுக்க முடியும். கொஞ்சோண்டு கோபத்துடன் திருமணம் முடித்து… அல்லல்பட்டு… அவதிபட்டு… ஓகே… ஓகே… ஏதாவது பேத்தடிக் சாங் கூட சேர்த்துக்கலாம்… இதெல்லாம்  நடந்தால்தானே விதி என்ற ஒன்று உள்ளது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும்.]

சதாக்ஷி ரொம்பவும் அதிர்ஷ்டமானவள் என்று சொல்வார்கள். அவள் தொட்ட எதுவும் பல மடங்கு பெருகும் என்ற வழக்கு அந்த வீட்டில் உண்டு. அப்படித்தான் இப்போது நடந்தது. அவள் ஆரம்பித்து வைத்த ஒரே சீன்… கல்யாண ட்ராமா!.  பல காட்சிகளாக மற்றவர்களால் நடத்தப்பட்டு இறுதியில் அவளை உண்மையான மணமகளாக்கி வைத்தது. இனி பிறந்து வீடு துறந்து புகுந்து வீடு அடையும் காட்சிதான்.

சதா செய்த  ப்ளான் தன் செயல்பாட்டு திட்டத்தை மாற்றிக் கொண்டு கைவிடப்பட்ட ஸ்பேஸ் ஷட்டில் திரும்ப பூமியின்மீதே கட்டுபாடிழந்து வந்து விழுவதைப்போல அவளிடமே  நெருப்பு கோளமாக திரும்பி வந்தது.

ஆனால், இந்த மாறுதலால் புவன் பாதிக்கப்படவே இல்லையா? பாதிக்கப்பட்டிருந்தான்தான். பானுமதியிடமே இது பற்றி கேட்கவும் செய்தான். அவன் இப்போதுதான் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்.  தொழிலில் ஏற்றம் இறக்கம் இருக்கும். அத்துடன் திருமணம் செய்து கொள்ளும் சூழலிலும் அவனும் இல்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-10-24 13:22
Sandai interesting-a irukkum pola.. Bhuvan room-ku poga venamnu solliyum Sadha ethukku poganum :Q: veruppethava? Ethirinalum ethiril ninru sandai podanumnu ninaikkuren...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்saaru 2018-10-23 21:07
Lovely update sagambari dear...
Athayammma Semmma ah kalakureeenfa ninaichadu sadichiteenha
Coffee la Ivlo types Woooo puvan unaku Nala future iruku
Sada baby neee puvan Kita vanguard pulb arumai :grin: :grin:
Ennnadidu baby new palivanga poranu solipotu decoration la um samayalum erakita :lol: :Q: :lol:
Kandipa suvarisiyama irukapodu sadakshi viva thirumanvalkai :clap: :clap:
Vaibav pandra ila paambu ila pooochi (vandu) indula Inna irukalam :grin: :grin:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-23 21:47
Dear Saaru,
Thank you very much for your review..சதா பேபிதான்... பழி வாங்குதல்.... அதுக்கு அவள் சரிபட்டு வரமாட்டாள்... :grin: correct...

டெக்கரேசன்... குக்கிங்... அது ஒரு ராஜ தந்திரம்ஜீ.. அந்த இடத்தை நமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வர வேண்டும் அல்லவா?
அப்புறம்... அப்புறம்... :Q: ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகி விடும்... கொடுமை நடக்கப் போகிறது...
Thank You Verymuch
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-10-23 20:32
[en avanukku...] Edho semaiya oru explanation ethirpartha ava heroine adhanala appadinu pottu enakku heart attack vandhuruchu. Waiting for Bhuvans mission and counter attack by Sathakshi :-)
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-23 21:42
Dear Sahithraj Thank you very much...
Enn. don't be disappointed... there is a secret behind... OK :cool: next epi will have comedy counters to treat ur heart attack...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்AdharvJo 2018-10-23 20:32
We already gave a thought abt the G.box madam ji :grin:

Yen verukka mudiyadhu idhu Ms Sagampari oda write up, so its realistic approach. Try ur best sir Ji :D

Ms Sagampari indha wedding mattum enakku puriyalai pa r they married :Q: (ivalo tube light ah-n ketkadhinga) was little confusing :sad:

Athai ji easy ya kazhundu kitangale...No sympathy!

Ayush....Poor guy :D Camelion ;-) Interesting and entertaining epi ma'am :clap: :clap: Andha erumai vaibav endha vagai-k sernthavarun analysis vida....Sadha and Buvan entha mathiri attack pana porangan therindhu kolvadhu thaan inga rombha important madam ji :yes: Virundhobayama?? Nah this is 100% manastachi if not idhai ellam yaru follow pana ninaipanga.. :D Thank you and keep rocking.

Ready 1...2...3...3...3 start (y)
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-23 21:36
Dear AdharvJo,

Trust my words... last week itself the marriage was conducted. Very quick... because Athai dont want to give space to Sadha, for taking second thought about the marriage. See... I am in soup because of her fast action.... facepalm Nambuggappa....

OK you got it... en kathai en urimai... :P
But I am sure this is very basic plot of the story... main story inimeythan...
And Thank you very much for your review...
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-10-23 20:11
Wow.... Nice epi mam :clap: eagerly waiting for the next update.... :Q: wt nd all will happen :sigh:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-23 21:29
Dear Aruna thank you very much.
yes... yes... soon you will see a take diversion board....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-10-23 17:38
நல்லாயிருந்தது மேம்.... :clap: :clap:
பானு அத்தை பயங்கரமான திட்டம் தான் போட்டுயிருகாங்க சூப்பர்... :clap:
இனி என்ன எல்லாம் நடக்க போகுதோ.... :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-23 21:25
மகி, அவ்ளோ பயகரம் இல்ல... அவருக்கும் ரிவர்ஸ் ஆகும் ஆனால் அது கடைசிலதான்.
மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top