(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 14 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ருக்கு பாட்டி யாழிசையை கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததும் அவள் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் திகைத்து நின்றாள். மறுநிமிடம் அத்திகைப்பில் இருந்து மீண்டு,

“என்ன சொல்றீங்க பாட்டி? காலேஜ் போகக்கூடாதா! என்ன விளையாடுரீங்களா? மற்ற நாள் போல் இன்றைக்கு உங்க கூட என்னால் போராட்டிருப்பதற்கு கூட நேரம் இல்லாமல் அவசரமா காலேஜ் கிளம்புற நேரத்தில் இப்படியா?”

பாப்பா நான் சொல்றது உனக்கு விளையாட்டா தெரியுதா? உன் அப்பனை உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்க சொன்னா அதை காதிலேயே வாங்காம உன்னை காலேஜுக்கு படிக்க அனுப்பிட்டான். இப்போ நான் தான் தவிச்சுகிட்டு இருக்க வேண்டியிருக்கு. இன்னைக்கு அவன் கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுக்காம நான் விடுறதா இல்லை என்றாள் ருக்குபாட்டி.

அய்யோ.... புருஞ்சுக்கோங்க பாட்டி. எட்டு மணிக்கெல்லாம் இன்னைக்கு காலேஜ் பஸ் வந்துடும் , இன்னைக்கு ப்ரோகிராமில் வேறு நான் சேர்ந்திருக்கிறேன்.

ப்ரோகிராம் ஆர்கனைசிங்கின் போது சந்தியாவுடன் துணைக்கு நான்தான் இருக்கணும். இப்படி திடீரென்று போகாமல் இருந்துட்டால் திரும்பி காலேஜ் போகும்போது எல்லோரும் என்னை வறுத்து எடுப்பதுடன் ப்ரோகிராம்வேறு குழம்பிபோய் அதற்கு காரணமான என்னை எல்லோரும் சேர்ந்து ஒருவழி பண்ணிடுவாங்க என்றாள்.

அப்பொழுது வீட்டின் பின்னால் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு மேல் துண்டால் தலையை துடைத்துக்கொண்டே வந்த யாழிசையின் அப்பா கணேசப்பிள்ளை, என்ன பாப்பா இப்போதான் வந்தயா? வந்ததுமே  பாட்டிகிட்ட என்ன வழக்கு என்று கேட்டார்.

அவ்வளவு நேரமும் தனது பாட்டியிடம் விரைப்பாக பேசிகொண்டிருந்த யாழ் அவளின் அப்பாவை பார்த்ததும் தன்னுடைய பேச்சின் தன்மையை மாற்றிக்கொண்டு சாந்தமான குரலில், “இல்லப்பா பாட்டி என்னைய காலேஜுக்கு போகக்கூடாது என்று சொல்றாங்கப்பா”!.

இன்றைக்கு காலேஜில் பங்சன் நடக்குது நான் ப்ரோகிறாமில் வேறு கலந்திருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் பஸ் வேறு வந்துடும் கிளம்ப விடாமல் என்னை நிறுத்தி வைத்துகொண்டு பாட்டிதான் என்னிடம் வழக்காடிகொண்டு இருக்கிறார்கள் என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்னம்மா புள்ளைக்கு லேட்டாயிடுச்சுல்ல, எதுனாலும் அவள் வந்ததும் பொறுமையா பேசிக்கொள்ளலாம். இப்போ அவள் கிளம்பட்டும் என்றார்.

அதை கேட்ட ருக்கு பாட்டி வேண்டாம் கணேசா, நான் அவளை காலேஜுக்கு அனுப்புறதா இல்லை. முதல்ல அவளுக்கு நல்ல மாபிள்ளையா பாரு! என்னமோ என் மனசு கிடந்து தவிக்குது என்றாள்.

உனக்கு என்ன அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் அவ்வளவுதானே நான் இப்போவே  பாப்பா  ஜாதகத்த எடுத்து நம்ம ஜோசியருட்ட காட்டிட்டு அப்படியே தரகரைப் பார்த்து மாப்பிள்ளை நம்ம தகுதிக்கி ஏத்த மாதிரி கொண்டுவர சொல்றேன். மாப்பிள்ளை அமையும் வரை அவ காலேஜுக்கு போகட்டும் என்று கூறிவிட்டார்.

என்னமோ போ... இப்பயாச்சும் அவளுக்கு வரன் பாக்குறேனு சொன்னியே அதுவர எனக்கு சந்தோசந்தான். கல்யாணம் முடியிற வரை அவள் வீட்டு வேலைய பார்க்க கத்துகிடட்டும் இனி அவள தனியா வெளிய அனுப்ப எனக்கு மனசு வரல்ல என்றார் பாட்டி.

அவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட யாழிசைக்கு இத்தனை நாள் தன் படிப்புக்கு சப்போர்ட் செய்த அப்பா இப்போ திடீர்னு இப்படி பேசவும் அவ்வளவுதான் நான் நினைத்தமாதிரி இனி என்னை டிகிரி வாங்க விட மாட்டங்கபோல.  இவங்கள எப்படித்தான் சமாளிக்கிறது என்று யோசனை செய்துகொண்டு இருந்தவளின் செவிகளில் விழுந்த அவளின் தந்தையின் வார்த்தைகளில் அவளது இதயத்துடிப்பு  கொஞ்சம் இயல்புக்கு திரும்பியது.

ஆம்! கணேசபிள்ளை அவரது அம்மா ருக்குவிடம் இங்க பாரும்மா. இந்த காலத்தில் என்னதான் என் மகள் அழகான குணவதியான பொண்ணா இருந்தாலும் நான் அவளுக்கு சேர்த்து வைத்திருக்கும் வெறும் இருபது பவுனுக்கு என்னை மாதிரி வாய்க்கும் வயித்துக்கும் போதுமான அளவு சம்பாத்தியம் செய்யும் மாப்பிள்ளயாத்தான் பார்க்க முடியும் . ஆனா அதுவே என் மகள் எஞ்சினியர் படிப்ப முடிச்சானா இன்னும் நல்ல பெரிய உத்தியோகத்தில் இருக்கிற மாப்பிள்ளை அமைகிற வாய்ப்பு இருக்கு.

இந்த காலத்தில் புள்ளைங்க நாம குடுக்கிற நகை நட்டை பெருசா பார்த்து கல்யாணம் முடிக்கிறது இல்லை. இப்போ எதிர்பார்பெல்லாம் நல்லா படிச்சிருக்கணும் தன்னைபோலவே தன் மனைவியும் வேலைக்குபோய் கைநிறைய சம்பாதிக்கணும் அப்படினுதான் பெரிய உத்தியோகத்துக்கு போகிற பிள்ளைங்க நினைக்கிறாங்க.

கடவுள் புண்ணியத்தில் அவளுக்கு படிப்பு நல்லாவே வருது. நம்ம அய்யா தயவால தகுதிதிக்கு மீறி அவளை படிக்க வைக்கவும் முடியுது .என்னோட சிநேகிதனோட புள்ளையும் இவளமாதிரி இஞ்சினேரிங் படிக்கும் கடைசி வருஷ படிப்பின் போது காலேஜுக்கு கம்பெனியில் இருந்து வந்து வேலைக்கு அவளை எடுத்துகிட்டாங்கலாம். அவ வேலையை பார்த்து பெரிய இடத்தில் கைநிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து விரும்பி வந்து கல்யாணம் செய்துகிட்டாங்கலாம் .

தன் பொண்ணு காரு பங்களா என்று இப்போ வசதியா வாழ்கிறாள் என்று என்னை பார்க்கும் போதெல்லாம் பெருமை பேசுறதோட நம்ம யாழிசையையும் நல்லா படிக்கவை! இவளின் வாழ்க்கைத்தரமே உயர்ந்திடும் என்று  சொல்லுவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.