(Reading time: 19 - 37 minutes)

அவன் சொல்வதை யோசித்துதான் நம்மைவிட படித்து, அவள் நல்ல நிலைமைக்கு போவதற்கு சந்தர்ப்பம் இருக்கும் போது நாம எதுக்கு அவசரப்பட்டு கல்யாணத்தை இப்போவே முடிக்கணும் என்று கூறினார்.

அவரின் அப்பா அவ்வாறு கூறியதும் தாங்ஸ்ப்பா...  தாங்ஸ். நான் பயந்தே போய்ட்டேன் பாட்டி சொல்றத கேட்டு நீங்க என்னை காலேஜ் போக வேண்டாம் என்று சொல்லிடுவீங்கலோனு பயந்திட்டேன். அப்பானா அப்பாதான். எனக்கு பஸ் வந்துடும் நான் போய் கிளம்பறேன் பாட்டியை எனக்காக நீங்க சமாளிங்க, என்று கூறியவள் துள்ளிகுதித்து கிளம்ப ஓடிவிட்டாள்.

அதன் பின் அவளின் பாட்டி ருக்கு என்னமோ கணேசா என்று தந்தையிடம் பேசுவதும் அதற்கு அவர் சமாதானப்படுத்துவதும் கேட்டுகொண்டே வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தவளின் மொபைல் ஒலி எழுப்பியது. யார் என்று எடுத்து பார்த்தவள் அவளுடன் பஸ்ஸில் ஒன்றாக காலேஜ் செல்லும் லலித்தாவின் பெயரை கண்டதும் அட்டன் செய்து அவளிடம் சொல்லு லல்லி என்றாள்.

என்ன சொல்லு லல்லியா அடியே பஸ் உன் ஸ்டாப்ப தாண்டிடுச்சு இன்னும் என்னடி செய்ற வீட்டில... என்றதும். அச்சோ! பஸ் போயிடுச்சா... சரி நான் அடுத்து  வருகிற அவுட் பஸ்ஸில் வந்துடுறேன். ஏய் லல்லி என் பிரன்ட்ஸ் கிட்ட சொல்லிருடீ நான் காலேஜ்பஸ் மிஸ் செய்துட்டேன் எனவே அவுட் பஸ் பிடித்து காலேஜுக்கு வர  எப்படியும் 9மணி  ஆகிடும் என்று சொல் என்றாள்.

பின்  வேகமாக கிளம்பி பாட்டி, அப்பா போயிட்டுவாறேன் என்று  வெளியில் வாசலுக்கு சென்ற பேத்தியை அடியே சாபிட்டுபோ பாப்பா என்று அவளின் பாட்டி கத்தும் சத்தம் கேட்டும் நான் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறியபடி இன்னும் இருந்து பதில் சொன்னால் ஏதாவது காரணத்தை வைத்து பேச்சை இழுத்து இந்த ருக்கு இன்னும் லேட் செய்திடும், இல்லாட்டி என்னை காலேஜ் போகவிடாமல் செய்திடும் என்றபடி பஸ்ஸ்டாபிற்கு நடையை கட்டியவள் தனது  பர்சை எடுத்து அவுட் பஸ்சிற்கு தேவையான சில்லறை ரூபாயை எடுத்து வைத்துகொள்ள திறந்தாள்

அதில் மிதுனன் இன்று காலையில் சந்தியாவுடன் காரில் ஏறிக்கொண்டிருக்கும் போது விரைந்து ஓடிவந்து கேர்ல்ஸ் இந்தாங்க என்று பிட் நோட்டிஸ் ஒன்றை கைகளில் கொடுத்தவன்.

மேலும் கூறினான் .நைன் ஓ கிளாக் ப்ரோகிராம் ஆரம்பிக்கும் முன் friends கூட ஒரு பத்து நிமிஷம் நம்ம காலேஜ் பற்றி இல்லாத பொது விஷயத்திற்கான மீட்டிங் ஒன்று அரேஞ் செய்திருக்கிறேன்.

இந்த நோட்டீசை அதில் கலந்துகொள்ளும் முன் படித்துவிட்டு ஜாயின் பண்ணுங்க. இட்ஸ் மை ஹம்பல் ரெக்வெஸ்ட் friends நைன் ஓ கிளாக் லாபியின் பின்புறம் மீட் பண்ணலாம் என்று கூறிவிட்டு அவசரமாக சென்றான்.

அப்பொழுது  நேரமின்மையின் காரணமாக அந்த நோட்டீசை தனது பர்ஸ்சினுள் தினித்துவிட்டவள் அதன் பின் தோழியுடன் வந்த மிதுனனை பற்றிய பேச்சில் அதை படிக்க மறந்துவிட்டாள். ஆனால்  இப்பொழுது சில்லறை எடுக்கும் போது கையில் அகப்பட்ட  அதை நடந்துகொண்டே  வாசித்துப்பார்த்தாள்.

அதில் சி.என்.ஜி நிறுவனம் அவர்களின் ஊரைச் சுற்றி உள்ள எட்டு ஊர்களின் பெரும்பான்மையான விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதற்கு தற்போது உள்ள அரசு சப்போர்ட் செய்கிறது என்றும் அதனால் அதனை தடுத்து நிறுத்தனும் என்றும், அதன் முதல் முயற்சியாக  இன்று வரும் அமைச்சரிடம் மனு கொடுக்க மாணவர்கள் தீர்மானிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவ்வாறு அந்த நிறுவனம் நம்மிடையே ஊடுருவினால் என்னென்ன பாதகம் விழையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

அதில் சி.என்.ஜி நிறுவனம் என்றதுமே அந்த நிறுவனத்தில் சார்பில் தானே தீரமிகுந்தன் இங்கு வந்திருக்கிறான் என்று எண்ணம் யாழிசையின்  மனதை கணக்க வைத்தது.

மேலும் அமைச்சரான ரங்கராஜனுக்கும் தீரமிகுந்தனுக்கும் நல்ல உறவு இருப்பதை அன்று சந்தியா வீட்டில் தான் சென்றதின் மூலம் புரிந்து வைத்திருந்த யாழிசை, மிதுனன் இந்த விஷயத்தை மினிஸ்டர் ரங்கராஜனிடம் எடுத்துகொண்டு போனால் கண்டிப்பாக தோல்வியில்தான் முடியும் என்றும்  மேலும் அவரிடம் மாணவர் சார்பில் கொடுக்கப்படும் அந்த பெட்டிசன் குப்பைக்குத்தான் போகும் என நினைத்தவள் மனம் வருந்தினாள்.

மேலும் மிதுனன் தந்திருந்த நோட்டிசில், அந்த நிறுவனத்தின் ஊடுருவலால் நிகழும் பாதகங்களை வாசித்தவள் உள்ளம் உலைக்களமாக கொதித்தது. சே இப்படி பட்ட நாட்டுக்கு துரோகம் நினைப்பவனா? என் அய்யாவின் மகன்.

வானவராயர் அய்யாவின் மகன் என்ற காரணத்தால் அன்று  தன்னிடம் நடந்துகொண்ட முறைக்கு கோபம் கொள்ளாமல்  தவிர்க்கவும் அவனின் காதல் மொழியில் சற்று உள்ளம் இலகவும் முடிந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.