(Reading time: 19 - 37 minutes)

Poogampathai poovilangal poottiya poovai

ஆனால் அதே தீரமிகுந்தன்  தனது தாய் நாட்டுக்கு அநியாயம் செய்ய முயல்கிறான் என்று தெரிந்ததும் அவளால்  அதை ஜீரணிக்க முடியவில்லை.

அப்பொழுது அவள் நடந்து வந்துகொண்டிருந்த பாதையில் அவளின் முன் வந்து நின்றான் தீரன் .

அப்பொழுதுதான் அவள் அவனை பற்றிய குற்றச்சாட்டை வாசித்ததினால் அவனை நேரில் கண்டவுடன்  கனல் கக்கும் கண்களுடன் பார்த்தாள்.

தீரன் அவளின் முகத்தில் தோன்றியிருந்த ருத்திர பாவத்தை கண்டு புருவச்சுளிப்புடன் பேபி என்றான்.

அவன் தன்னை இப்பொழுது பேபி என்று அழைத்தது  அவளுக்கு வேப்பங்காயாக கசந்தது. என் மண்ணையே மலடாக்கும் எண்ணம் கொண்ட ஒருவன் என்னை செல்லமாக கூப்பிடுவதா? என்று அருவருப்பு அவளுக்கு உண்டானது.

யார் யாருக்கு பேபி? சீ... உன்னை போன்ற என் மண்ணுக்கு துரோகம் நினைபவனை போய் ஒரு நிமிடமாவது எனக்கு மனதில் நெருக்கமாக நான் நினைத்துவிட்டேனே! என்று எனக்கு வெட்கமாக இருக்கிறது.

என்று ஆவேசமாக கையை ஆட்டி பேசியவளின் கையில் இருந்த காகிதத்தை பார்த்தவன் சூழலை ஒருநிமிடத்தில் புரிந்துகொண்டான்.

அப்பொழுது அவளை சமாளிக்கும் பொருட்டு ஹேய் அந்த மிதுணன் கொடுத்த பிட் நோட்டீசுக்கு போய் நீ இவ்வளவு இம்பார்டன்ட் கொடுக்கணும் என்ற அவசியமில்லை பேபி, என்று மேற்கொண்டு பேசப்போனவனை,

நிறுத்துங்க..! எனக்கு யாருக்கு இம்பார்டன்ட் கொடுக்கணும் யாருக்கு இம்பார்டன்ட் கொடுக்க கூடாது என்று தெரியும் அதை நீங்க எனக்கு சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.

நீங்க என்னிடம் நடந்துகொண்டதை நான் பெரிதுபடுத்தாமல் இருந்ததுக்கு காரணம், என் அய்யாவின் மகன் நீங்கள் என்று காட்டிய ஆதாரம் எனக்கு உண்மையென பட்டதினால் தான்.

ஆனால் அந்த இலக்கம்  இனி எனக்கு உங்களின் மேல் வராது. என் நலனா? என் வானவராயர் அய்யாவின் நலனா? என்று நினைத்தால் என் அய்யாவின் நலனே எனக்கு பெரிதாக தோன்றியது. என் அய்யாவின் நலனா என் தாய் பூமியின் நலனா என்று பார்க்கும் போது என் தாய் பூமியே எனக்கு பெரிது... அதை மலடாக்க முயல்பவன் நீ என்று தெரிந்த பின் என் முதல் எதிரியே நீதான். உன்னை நான் எதிர்த்து நிற்பதைத்தான் என் வானவராயர் அய்யாவும் விரும்புவார். என்று ஆவேசமாக பேசினாள் யாழிசை.

தீரனுக்கு நிறைய நேரம் அவளிடம் அங்கு நின்று பேசி அவளை சமாதானப்படுத்தி கூட்டிப்போகும் சூழ்நிலை  இல்லை. எனவே  அவளுக்கு யோசிக்க சந்தர்ப்பம் கொடுக்ககூடாது என்று முடிவெடுத்து 

ஓகே பேபி வா.. எதுனாலும் காரில் போய்க்கொண்டே பேசலாம் என்று அவளின் கை பிடிக்க கை நீட்டினான்

ஏய் தொட்ட....... உன் கையை  ஓடச்சுடுவேன், என்று கர்ஜித்தவள் அன்றுபோல் இன்றும் தன்னை இழுத்துக்கொண்டு காரில் போக வழிவிட்டுவிடக்கூடாது என்று ஒருநொடியில் முடிவெடுத்து திரும்பி ஓட ஆரம்பித்தாள்.

ஆனால் இரண்டே எட்டில் அவளை பிடித்த தீரன். தனது பேண்டின் பின் பாக்கெட்டினுள் இருந்த துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றி பொட்டில் குறி வைத்தவன் ம்......அசையக்கூடாது வா வந்து வண்டியில் ஏறு என்று கர்ஜித்தான்.

அப்பொழுதுதான் அவள் தன்னை சுற்றி பார்த்தாள். மலை பிரதேசமாகிய அந்த  ஒற்றயடிப்பாதையில் தானும் அவனும் சற்று தள்ளி ஒரு காரும் மட்டுமே இருப்பதை உணர்ந்தவள்,  அவன்  கையில் இருந்த துப்பாக்கியும் அவன் கண்காட்டிய ரவுத்திரத்திலும் இனி அவனிடம் இருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்ற நிதர்சனம் புரிந்ததும் யாழிசையின் உள்ளம் சோர்ந்தது.

தீரனால் யாழிசை கடத்தபடுவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பே மிதுனனும் கடத்தப்பட்டான்.

கல்லூரியில் மினிஸ்டரை வரவேற்கவும் திடீரென்று அவருடன் வேர்ல்ட் பேமஸ் பிஸ்னஸ் அட்வைசர் மற்றும் தீ போல வேகமாக வளர்ந்துவரும் பிஸ்னஸ்மேன், அத்துடன்  சி.என்.ஜி நிறுவனத்தின் பிரதிநிதி ஆகிய அம்சமெல்லாம் ஒருங்கே கொண்ட  தீரமிகுந்தன்  வருவதை நினைத்து ஆச்சரியமான காலேஜ் நிர்வாகம் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்க மேலும் மெனக்கெட வேண்டும் என்று தன ஸ்டாப்களை கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்துகொண்டிருந்தது.

கூடுதலாக பாதுகாப்பு மற்றும் அரேஞ்மெண்டிர்க்கு  தீரனின் பாதுகாப்பை முன்னிறுத்தி அவனின் சார்பில் வந்திருந்த செக்யூரிட்டி டீமிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கப்பட்டது.

அப்பொழுது ஒரு ஸ்டாப் எழுந்து ப்ரோகிராம் ஆர்கனைசிங் செய்வதற்கு நான் இன்ஜார்ஜ் வைத்திருந்த மிதுனன் ஏனோ இன்னும் காலேஜ் வரவில்லை. எனவே அதற்கு வேறு இப்பொழுது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.

அவர் அவ்வாறு கூறியதை கேட்ட பிரின்சி என்ன சொல்றீங்க மிதுனன் இன்னும் வரலையா? அவன் அப்படி அசால்டாக இருக்ககூடியவன் கிடையாதே... .மேலும் அவன் இருந்து செய்தால்தான் பங்சன் சிறப்பாக முடியும். ஏனெனில் நான் அவனை முன்னில் வைத்துத்தான் எல்லா வேலையும் செய்தும் சரிபார்த்தும் இருந்தேன். அவனது மொபைல் நம்பருக்கு முயற்சி செய்து பார்த்தீங்களா என்று கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.