(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 05 - மது

Senthamizh thenmozhiyaal

ரவு நெடுநேரம் ஆகியிருந்த போதும் கவினை சிபி விடுவதாய் இல்லை. அவனுக்கு தேன்மொழியைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

“இதை நான் எதிர்பார்க்கவில்லை கெவின்” நண்பன் கூறிய தகவலில் ஆச்சரியம் கொண்டவன் அவனிடம் கூறிக் கொண்டிருந்தான்.

“அவள் பத்து வயதில் இருந்தே கடலே உலகம் என்று இருப்பவள். நம் வீடு அலுவலகம் என்று நமக்கு நன்கு தெரிந்த இடத்திற்கு கண்ணைக் கட்டி விட்டாலும் எப்படி நம்மால் போக முடியுமோ அது போல உலகத்தில் எந்தக் கடலில் தேன்மொழியை விட்டு வந்தாலும் வழியை அறிந்து கரைக்கு வந்துவிடுவாள். அதிலும் இந்து மகாசமுத்திரத்தின் ஆப்ரிக்க கரையோரம் ஒவ்வொரு பரப்பும் அவளுக்கு அத்துப்படி”

நண்பனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கவின் அவனிடம் தேன்மொழியைப் பற்றி மேலும் கூறலானான்.

அதே நேரம் சென்னையிலும் தேன்மொழி பாப்பாவின் கடல் காதல் பற்றித் தான் அவளது குடும்பத்தினர் உரையாடிக் கொண்டிருந்தனர்.

வானதி பூனேவிற்குப் படிக்கச் சென்று இரு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன.

ஆனால் ஒவ்வொரு மாதமும் இளங்கோ தனித்தோ அல்லது குடும்பத்தினர் யாரேனும் ஒருவருடனோ அவளை வந்து பார்த்து தேவையானதை வாங்கிக் கொடுத்து நலம் விசாரித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அன்றும் அவன் வந்திருக்கிறான் என்ற தகவலை அறிந்த வானதி ஆவலுடன் ஓடோடி வந்தாள்.

அவளது விடுதியின் பார்வையாளர் அறையில் எப்போதும் சிறு புன்னகையோடு அவளை எதிர்கொள்பவன் அன்று இறுக்கமான முகத்துடன் இருக்கவும் வானதிக்கு அவளை அறியாமலேயே  அடிவயிற்றில் சிலீர் என ஒரு பயப்பந்து உருண்டது.

அவளை நேர்கொண்டு பார்ப்பவன் விழிகள் நிலத்திடம் தஞ்சம் புகுந்தன.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நாம உடனே சென்னைக்குப் போகணும். சீக்கிரம் கிளம்பி வா. உன்னோட வார்டன்கிட்ட பேசிட்டேன்” அவன் குரலில் கரகரப்பு அவளது உள்ளுணர்வில் தோன்றிய அச்சத்தை மேலும் கூட்டியது.

அவனிடம் என்ன ஏது என்று கேட்க நினைத்தாலும், தொண்டையில் இருந்து ஒலி எழும்பினாலும் உதடுகள் ஒத்துழைக்க மறுத்தன.

பத்தே நிமிடங்களில் அவன் முன் தயாராகி வந்தவளின் கரத்தை இறுகப் பற்றியவன் வாயிலில் காத்துக் கொண்டிருந்த காரை நோக்கி விரைந்தான்.

காரை ஓட்டுனர் செலுத்த பின்னிருக்கையில் அவளோடு அமர்ந்தவன் அவளது கரத்தை விடமால் பற்றிக் கொண்டே இருந்தான்.

கார் எங்கே செல்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஓரளவு தைரியத்தைக் கூட்டி என்ன என்று அவனிடம் கேட்க முற்படும் போது ஏர்போர்ட் வந்திருந்தது.

அவளோடு அவசராமாக விமான நிலையத்தில் நுழைந்து அங்குள்ள பாதுகாப்பு விதிமுறைகளை எல்லாம் முடித்து விமானத்தின் இருக்கையில் அமருகையில் மெல்ல அவன் பெயரை உச்சரித்தாள்.

“இளங்கோ”

அவளது அழைப்பில் ஒரு தவிப்பு அதே சமயம் அவன் உடன் இருக்கிறான் என்ற திடம் இரண்டும் கலந்தே ஒலிக்க அவளை அப்படியே தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தான்.

அவன் எப்போதுமே அவள் மேல் அக்கறை கொண்டிருப்பவன் தான். அவனது அன்பினை சொல்லால் அன்றி செயாலால் உணர்த்திக் கொண்டிருப்பவன் தான். ஆனால் தனது சிறகில் மூடி பாதுகாப்பது போல இந்த அணைப்பு அவன் ஏதும் சொல்லாமலே அவளது சுரப்பிகளை உடைத்து அவனது தோள்களை நனைத்தது.

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவினை வற்புறுத்தி அவளை உண்ண வைத்தான்.

விமானம் தரையிறங்கியதுமே வாயிலில் இளமாறன் காருடன் தயாராகக் காத்திருக்க நண்பனைக் கண்டவள் அவனிடம் ஓடிச் சென்று அவனது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

அவளது முகபாவனையில் இருந்தே தமையன் அவளிடம் ஏதும் சொல்லியிருக்கவில்லை என்று அறிந்து கொண்டான் இளமாறன்.

அவளது தோள்களை மெல்லப் பற்றி காரில் அமர வைத்த இளங்கோ தம்பியைப் பார்த்துக் கண்ணசைக்க அவளது மறுபுறம் இளமாறன் அமர்ந்து கொண்டான்.

சென்னையின் பிரபலமான மருத்துவமனையின் முன் கார் நிற்க இறங்க மாட்டேன் என்று இளங்கோவின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் வானதி.

சில நொடிகளில் அங்கே கயல்விழி வந்துவிட அத்தை என்று அவளது தோளில் சாய்ந்தாள் வனாதி.

“அம்மாவுக்கு என்னாச்சு அத்தை” கேட்டே விட்டாள்.

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவியிருந்த பறவைக் காய்ச்சலில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.