Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

நாட்கள் ஓடியது.

கஷ்டப்பட்டு 4 மாதத்தை ஓட்டினாள் கோதை.

லண்டனுக்கு வந்ததும் கோதை தன் பேக்டரியில் கவனம் செலுத்தினாள். அவளால் பத்ரியின் கோபத்தை மறக்க முடியாமல் திணறினாள். அடிக்கடி தன்னை பார்க்க வரும் மாயாவை கண்டித்து விரட்டினாள். அதற்கும் மசியாமல் அவளை தேடி வந்த மாயாவை சரண்யாவே திட்டி விரட்டினாள். மாயாவும் சரண்யாவிற்கு பயந்து கோதையை விட்டு விலகினாள்.

வேலை செய்ய முடியாமல் கஷ்டபட்ட கோதைக்கு வீரராகவன் கைகொடுத்து உதவினார். ஒரு பக்கம் அவரின் உதவியால் எந்த பயமும் இன்றி அவள் வேலை செய்தாள். இன்னொரு பக்கம் சண்முகமும் துணையாக இருந்த காரணத்தால் நிம்மதியாக இருந்தாள். நாட்களையும் ஓட்டினாள். ஆனாலும் பேக்டரியில் புதுப்பிரச்சனை ஒன்று வந்தது. அதை தீர்க்கச் சொல்லி கோதையிடம் அணுக அவளுக்கு எந்த ஐடியாவும் வரவில்லை வீரராகவனாலும் அதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை. அந்நேரம் வந்த சண்முகம் அவளிடம்

”என்னம்மா இப்படி ஒரு பிரச்சனை வரும்னு நான் எதிரே பார்க்கலை இப்படி போனா நம்ம பேக்டரி நஷ்டமாயிடும் இழுத்து மூடவேண்டியதுதான் ஏதாவது ஐடியா இருக்காம்மா சொல்லு” என அவர் கேட்க உண்மையில் கோதையிடம் ஒரு ஐடியாவும் இல்லை ஆனால் வேண்டுமென்றே அவள் சண்முகத்திடம்

”என்ன  அங்கிள் இது பிரச்சனை வந்தா என்கிட்ட போய் சால்வ் பண்ண சொல்றீங்க இத்தனை நாளும் யாரு சால்வ் பண்ணாங்களோ அவங்கதான் செய்யனும் என்னை கேட்காதீங்க எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என சொன்னாள்.

அவளின் செயலை புரிந்து கொண்ட சண்முகமும் பத்ரிக்கு போன் பண்ணி தீர்வு கேட்கும் படி அசிஸ்டென்டிடம் சொல்ல அவனும் போன் செய்தான்.

நாமக்கல்லில் கோதை சென்று 4 மாதம் கழித்தும் பத்ரி கோதையின் நினைவுகளால் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டான். அடிக்கடி கோபப்பட்டு செல்வாவிடம் திட்டு வாங்கினான். அவனுக்கு அம்மாவும் இல்லை பொண்டாட்டியும் இல்லை எப்போதும் பட்டறையில் இருக்க முடியாமல் கஷ்டப்பட்டான். கோதை சென்றபின் பத்ரி வீட்டிற்கு கூட செல்வதில்லை. மதியமானதும் மஞ்சரி செல்வாவுக்கும் பத்ரிக்கும் சேர்த்து கேரியர் கொண்டு வந்தாள் அவளிடம் வீட்டு நிலைமையை கேட்டு அறிந்துக் கொள்வான் பத்ரி. ஒருநாள் கூட தாத்தா பாட்டியை பார்க்க அவன் செல்லவில்லை. அங்கு சென்றால் நாச்சியா பாட்டியை பார்க்க கூடும் திரும்பவும் பிரச்சனை வரக்கூடும் என ஒதுங்கினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்றும் அப்படித்தான் மஞ்சரி வரவும் தாத்தாவைப் பத்தி விசாரித்தான் பத்ரி

”தாத்தா சாப்பிட்டாரா”

”ம்”

“மாத்திரை சாப்பாட்டாரா”

“ம்”

“பாட்டி எப்படியிருக்காங்க”

“ம்”

”என்ன நீ பதில் சொல்ல மாட்டியா” என கத்தினான் பத்ரி அவன் கத்தியதால் மிரண்ட மஞ்சரியை பார்த்து பத்ரி மீது கோபமடைந்த செல்வா பத்ரியிடம் கத்தினான்

”யார் மேல இருக்கற கோபத்தை யார் மேல காட்டுவீங்க அண்ணா நியாயமா பார்த்தா நீ கோபப்படவேண்டிய ஆளு உன் வீட்ல மகாராணிங்க போல இருக்காங்களே நாச்சியா பாட்டியும் அவள் பேத்தியும் அவங்கத்தான் அவங்களை ஹாயா ஜாலியா அங்க இருக்க விட்டுட்டு நீ இப்படி உனக்காக வந்தவங்க மேல கோபப்படலாமா”

”எனக்காகவா எனக்காக யார் வந்தா யாரும் வரலை”

“ஏன் வரலைன்னா என்ன வந்தப்பின்னாடி உனக்காக மாறினாங்கள்ல அவங்களை ஏன் விரட்டின”

“அவள் பொய் சொன்னா”

“என்ன பொய் சொன்னா உன்னை லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாளா”

“அதை விட பெரிசு  எனக்காகதான் வந்தேன்னு அவள் சொன்னாள்”

”நல்லா யோசிச்சி சொல்லுண்ணா இதை அண்ணி சொன்னாங்களா இல்லை அந்த சகுனி கிழவி சொல்லிச்சா”

“சரி இவளாவது உண்மையை சொல்லியிருக்கலாமே”

”உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சிருக்கலாம்ல”

”எனக்கு எப்படி தெரியும்”

“உனக்கு தெரியாதுன்னு அண்ணிக்கு எப்படி தெரியுமாம்”

”தெரிஞ்சிருந்தா அன்னிக்கே அவளை நான் கொன்னுருப்பேன்”

”ஏன் விட்டீங்க கொல்ல வேண்டியதுதானே அங்கதான் நிறைய பொருட்கள் இருந்திச்சே இருக்கிற கோபத்தில குத்துவிளக்கால அவளை குத்தி கொன்னிருக்க வேண்டியதுதானே அண்ணா இப்படி உங்களை நினைச்சி பாவம் அண்ணி லண்டன்ல சாப்பிடாம தூங்காம கஷ்டப்பட்டுகிட்டு இருக்க வேணாம் பாரு”

”யாரு அவளை சாப்பிட வேணாம்னு சொன்னது”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாsasi 2018-10-30 08:07
நன்றி சில்சி எனக்கு வாய்ப்பு தந்து என் கதைக்கு ஆதரவும் தந்து வெற்றி பெற வைத்த தங்களுக்கு என் நன்றிகள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாsasi 2018-10-30 07:42
கதையை பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாAdharvJo 2018-10-29 16:35
Sabba Oru vazhiya purushanayum pondadtiyum baby vandhu serthuvachitan but ipppadi Oru twist yarum ethir parthu irukamatanga ma'am :eek: nice update with fun+senti dialogues :D :clap: (y)
Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாmahinagaraj 2018-10-29 13:09
ரொம்ப அருமையா கதையை முடிச்சுயிருகீங்க மேம்..... :clap: :clap:
எனக்கு ஒருத்தர் சொன்னாங்க எப்பவும் பாதி உண்மை.. பொய்யவிட ஆபத்தானதுன்னு... அது உண்மை தான் போல எப்பவும் முழுசா தெரியாம பத்ரி பன்ன தப்புக்கு பெரிய மனசுபன்னி நான் மன்னிகரேன் அதுவும் கோதைக்காகவும்.. கோதைமேல பத்ரி வச்ச காதலுக்காகவும் தான்... :P 8) :lol:
எந்த அலப்பரையும் இல்லாம கல்யாணம் நடந்தது சூப்பர்.. :lol: :GL: :clap:
ஆனா இவ்வளவு பன்னுன பாட்டியும்,பேத்தியையும் சும்மாவிட்டுட்டீங்களே.... :sad: facepalm :o
சூப்பர் கதை.. பத்ரி நல்ல மனுஷன் ரொம்ப பிடிச்சவரும் கூட எனக்கு.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாSAJU 2018-10-29 12:22
nice ending sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாsaaru 2018-10-29 11:35
Nice end
All da best
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாSrivi 2018-10-29 08:06
Sema sis. Super. Nallapadiya mudinchadhu.. vazhthugal mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந் 2018-10-29 07:42
nice story ending is good
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாராஜேந்திரன் 2018-10-29 07:40
கோதையின் பல நாள் காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த பத்ரியின் மனமாற்றமும் திருமணம் மனதை நெகிழ வைக்கிறது கதையின் முடிவு அருமையாக உள்ளது
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாvijayalakshmi 2018-10-29 07:38
இனிதாக திருமணம் முடிந்துவிட்டது இனிமேலும் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் கதையின் முடிவு நன்மையாக முடிந்துள்ளது வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 20 - சசிரேகாராணி 2018-10-29 07:36
நாச்சியா பாட்டியின் சூழ்ச்சியையும் மீறி ஒருவழியாக கோதைக்கும் பத்ரிக்கும் கல்யாணம் நடந்துவிட்டது கோதை பத்ரியின் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் :hatsoff:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top