(Reading time: 11 - 21 minutes)

தேன்மொழியின் பத்தாவது பிறந்தநாளை புதிய இல்லத்தில் சிறப்பான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன.

“எங்க பாப்பா பிறந்தநாள் விழா தான் கிரகப்பிரவேசம்” குடும்பத்தினர் உற்றவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.

தன் அன்னை தைத்திருந்த அழகிய உடையில் இளவரசியாக வலம் வந்ததாள் தேன்மொழி.

திரைத்துறையில் இருந்து பலர் வருகை புரிந்திருக்க அங்கே நடந்த கொண்டாட்டங்கள் எதிலும் மனம் லயிக்காமல் தூரத்தில் வா வா என்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்த கடலையே மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

விழா முடிந்து பரிசுப் பொருட்களை வானதி பிரித்து அடுக்கி வைத்துக் கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தேன்மொழி அவர்கள் முன் வந்து நின்று கொண்டாள்.

“எல்லோரும் இவ்வளவு கிப்ட் குடுத்திருக்காங்க. நீங்க எனக்கு என்ன குடுக்கப் போறீங்க” முதல் முறையாக தனக்கு பரிசு வேண்டும் என்று கேட்ட மகளை வாரி அணைத்துக் கொண்ட முத்துக்குமரன் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

நான்கு வார ஸ்கூபா டைவிங் கோர்ஸ் சேர்த்து விட சொன்னாள் அந்த வீட்டின் இளவரசி.

“அதுக்கென எங்கே நடக்குதுன்னு சொல்லு பாப்பா. அண்ணா சேர்த்து விடறேன்” இளங்கோ சொல்ல அனைவரும் சம்மதித்தனர்.

நீச்சல் வகுப்பு போல என்றே நினைத்திருந்தனர்.

ஆனால் உலக அளவில் ஸ்கூபா டைவிங் பயிற்றுவிக்கும் அகாடமியில் சேர்ந்து அதில் தொழில்முறை தேர்ச்சி சான்றிதழ் பெற விரும்புவதாக தேன்மொழி கூறவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“நான் இனிமே ஸ்கூல் போகலை. நான் டைவர் ஆக போறேன். பத்து வயசு ஆனதும் சேர்த்துப்பாங்க. முதல்ல நாலு வாரம் சென்னையிலேயே கோர்ஸ் போகலாம். அப்புறம் ஜப்பான்ல அமா ப்ரீ வாட்டர் டைவராக அங்கே போய் கத்துக்கப் போறேன்” தெள்ளத் தெளிவாக தேன்மொழி சொல்லவும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்தனர்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஸ்கூல் போக மாட்டியா. பாப்பா இது என்ன பேச்சு” கயல்விழி சற்றே குரலை உயர்த்திப் பேசிவிட முத்துக்குமரன் மனைவியை அமைதியாக இருக்கும் படி சைகையில் ஆனையிட்டார்.

“பாப்பா லீவு நாளில் இந்த கோர்ஸ் எல்லாம் போறதுன்னா போ. ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு எல்லாம் சொல்லக் கூடாது” முத்துக்குமரன் மகளை அணைத்தபடியே எடுத்துச் சொன்னார்.

“நான் தான் டைவராக போறேன். அப்புறம் எதுக்கு ஸ்கூலில் படிக்கணும். அங்க கடல் பத்தி எதிலே எப்படி நீந்துவது, மூழ்குவது இதெல்லாம் சொல்லிக் குடுக்க மாட்டாங்கப்பா” பிடிவாதம் செய்த தேன்மொழியை இளங்கோ, இளமாறன் இருவரும் சமாதனம் செய்ய முயன்று தோற்றனர்.

“ஸ்கூல் பாஸ் பண்ணனும் பாப்பா. பெருசானதும் டைவர் ஆகுறதுக்கு படிச்சாலும் ஸ்கூல் பாஸ் செய்திருக்கனும்னு சொல்வாங்க” வானதி வேறு வகையில் சொல்லிப் பார்த்தாள்.

“அக்கா அதெல்லாம்  தனியாவே படிச்சு எக்ஸாம் மட்டும் எழுதி ஸ்கூல் பாஸ் செய்யலாம்”

தேன்மொழி கூறியதற்கு ஆளாளுக்கு பதில் தெரிவிக்க தாத்தா மட்டும் அமைதியாகவே இருக்கவும் அவரது துணியை நாடினாள் வானதி.

“தாத்தா நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க”

அவர் என்ன சொல்வார். இந்தத் தகவல்களை எல்லாம் அவளுக்குச் சொல்லித் தந்ததே அவர் தானே.

“குமரா, நீ ப்ளஸ் டூ வரைக்கும் தான் படிச்ச. சினிமா மேல காதல் உனக்கு. உன் காதலுக்கு நானும் சரி கயலும் சரி ஆதரவா இருந்தோம். உன்னோட கனவு லட்சியம் நிறைவேற என்ன வழி செய்யணுமோ என்னால் முடிந்ததை செய்தேன். அது போல தான் பாப்பாவோட கனவு, லட்சியத்திற்கு நீ துணையாக இருக்கணும்” தாத்தா சொல்லவும் அவரின் ஆசி பரிபூரணமாக இருப்பதை கண்ட கயல்விழி முத்துக்குமரன் இருவரும் அவரின் பொறுப்பில் தேன்மொழியை விட்டனர்.

“உலகத்தில் எங்கே போனாலும் நீங்களும் அவள் கூடவே இருக்கணும் அப்பா. அவளுக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும்” கயல்விழி கூற அனைவரும் சம்மதித்தனர்.

ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவள் வாழ்க்கையே ஒரு புதிய பாதையில் நீந்தியது எதனால் அல்லது யாரால் என்ற ரகசியத்தை தாத்தாவும் அறியவில்லை.

ஒருவேளை அறிந்திருந்தால் இன்றைய நிலைமை தவிர்க்கப் பட்டிருக்குமோ. 

தொடரும்

Episode # 04

Episode # 06

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.